Advertisment

Children-Parents relationship வளர இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்!

குழந்தைகளின் Behaviour மற்றும் manners நம்முடைய செயல்களில் இருந்து தான் வெளி வருகிறது. நமக்கு அறியாமலேயே அவர்கள் நம்மை கூர்ந்து கவனித்து கொண்டு இருப்பார்கள். எனவே நமது ஒவ்வொரு செயலும் அவர்களை நல்வழிப்படுத்தவும் உதவும் , பாதிக்கவும் நேரிடும்.

author-image
Pava S Mano
New Update
Parenting

Image is used for representational purpose only

நம் பெற்றோரே நாம் பார்த்து வளர்ந்து இருப்போம். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதன் தாக்கம் நம் வளர வளர நம் behaviour இல் வெளிப்படும். அது ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான், நம் பெற்றோரின் குணமும் பழக்கமும் தான் நம்மை தொடர்கிறது என்று நம்மளுக்கு புரிய வரும். இதில் சில நல்ல விஷயங்களும் இருக்கும், சில தீமையான விஷயங்களும் இருக்கும். அதை நாம் நம் வருங்கால சந்ததியினரின் முன் கொண்டு சேர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Advertisment

குடும்பத்தில் இருப்பவரை பற்றி புறம் பேசாமல் (Gossip) இருங்கள்:

Child safety

உங்கள் குடும்ப நபர்களே குறைவாக குழந்தைகள் முன் பேசும் பொழுது அவர்கள் நாள் போக்கில் பெரியவர்களுக்கான மதிப்பை கொடுக்க தவறுவார்கள். அதுவே அவர்களின் எதிர்மறை எண்ணத்தை தூண்டும் ஒரு கருவியாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் நாம் மற்றவர்களை தாழ்வாக பேசும் பொழுது, அவர்களும் அதையே மற்றவர்களிடம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. எனவே, குழந்தைகள் முன் இரக்கம், அனுதாபம் மற்றும் Constructive Communication ஐ வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்கள் சுற்றதாரோடு சிறந்த உறவை பிரதிபலிப்பார்கள். 

Advertisment

குழந்தைகள் முன் இதை செய்யவே செய்யாதீர்கள்:

கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே பேசி முடித்து கொள்ளுங்கள். அதை நீங்கள் குழந்தைகள் முன் காட்டும் பொழுது குழந்தைகளுக்கு, அவர்களுக்கே தெரியாமல், emotional distress மற்றும் anxiety வரக்கூடும். மற்றும் உங்கள் சண்டையால் அவர்கள் பயந்து அந்த சண்டைக்கான காரணமே தாங்கள் தானோ என என்ன வாய்ப்பு உண்டு. பெற்றோர்களே குழந்தைகள் role model ஆக பார்ப்பார்கள். நீங்கள் அதிகம் சண்டை போட்டுக் கொண்டால் அதுவே அவர்களுக்கான ஒரு கேடான சுற்றுச்சூழலை உருவாக்கும். குழந்தைகள் வளர்வதற்கு அவர்களுக்கென இணக்கமான சூழலை உருவாக்குங்கள். அப்பொழுதுதான் வருங்காலத்தில் அவர்களுக்கென ஒரு உறவு வரும் பொழுது அதனை எப்படி மதித்து நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு புரியும். 

Children safety

Advertisment

School and Teacher Gossip:

பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்களை பற்றிய உங்கள் கருத்துக்களை குழந்தைகள் முன் பேசாதீர்கள். அது பாசிட்டிவான எண்ணமாக இருந்தால் பிரச்சனை ஏதுமில்லை, இதுவே எதிர்மறையாக இருந்தால் அவர்கள் பள்ளிக்கு செல்லும் எண்ணத்தை கைவிடவே வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களை குழந்தைகள் முன் பேசுவதால் இந்த உலகத்தை பற்றின அவர்களுடைய எண்ணம் மாறத் தொடங்கும். பெற்றோராகிய நாம் நம் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் குழந்தைகளின் மேல் திணிக்க ஆரம்பித்து விடவும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக குழந்தைகளுக்கு எப்படி அன்பை வெளிப்படுத்துவது, ஒரு தவறு செய்தால் அந்த தவறை எப்படி ஒத்துக் கொள்வது, மற்ற நபரை எப்படி மன்னிப்பது போன்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பது அவசியம்.

குழந்தைகள் முன் அதிகம் Gadgets பயன்படுத்தாதீர்கள்:

Advertisment

நீங்கள் உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் நேரம் செலவிடுவதை கண்டிப்பதற்கு முன் அவர்கள் உங்களை பார்த்து தான் அப்படி செல்போனில் நேரம் செலவிடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நாம் செய்யும் செயல்களின் விளைவு தான் அவர்களின் வருங்கால குணமாகவும் பழக்கமாகவும் மாறும் என மனதில் வைத்துக் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் பிம்பம் நம்மளுடையதாக இருக்கட்டும், அது நல்லதாக இருக்கட்டும்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-good-parenting

https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know

Advertisment

https://tamil.shethepeople.tv/society/is-baby-planning-necessary-after-marriage



 

Advertisment



constructive communication
Advertisment