இந்த உலகமே Internet மயமாக மாறி வருகிறது. அது இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற ஒரு நிலைக்கு நாம் வந்துள்ளோம். ஆரம்பத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து பயந்த நாம் இன்று அது இல்லாமல் நம்மால் வாழவே முடியாது என்ற நிலையை அடைந்துள்ளோம். நாம் அதனால் ஏற்படும் Positive side ஐ மட்டும் பார்த்தால் அது நல்லது. இன்று வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து பட்டையை கிளப்பி வருகின்றனர். அனைவரும் youtube மூலமாக நன்றாக சம்பாதித்து வருகின்றனர். இன்று பெண்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இருந்தும் சில பெண்கள், என்ன செய்வது, எப்படி செய்வது என்ற கேள்வியை மனதில் வைத்து, வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான கட்டுரைதான் இது!
Work from home ஆல் கிடைக்கும் நன்மை:
வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் உங்கள் வேலையை செய்து முடிக்கலாம். தவிர குழந்தைகளுடன் quality time செய்வதற்கான நேரமும் கிடைக்கும். வீட்டிலிருந்தே வேலை செய்வதால் நீங்கள் பயணம் செய்யும் அலுப்பு குறைவாகவே இருக்கும். மற்றும் உங்கள் வீட்டாருடன் இணைந்திருக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும் Work மற்றும் Home balance கிடைக்கும். நீங்களே உங்களுக்கான boss ஆக இருக்கலாம்.
இல்லத்தரசிகள் குழந்தையை பார்த்துக் கொள்வது கூட்டுக் குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவற்றால் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். அதிலிருந்து விடுபட அவர்கள் கவனத்தை தொழிலில் திசை திருப்பினால் மட்டுமே நல்லது. மேலும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு இது ஒரு திறவுகோலாக இருக்கும். Work from home செய்வதால் அவர்கள் Financially independent ஆக இருப்பார்கள்.
நீங்களும் சம்பாதிக்கலாம்!
பெண்கள் வீட்டிலிருந்தே வேலை புரிய என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என கீழே காணலாம்:
-
Baking
உங்களுக்கு பேக்கிங் இல் ஆர்வம் இருந்தால் அது சம்பந்தமான class ஐ படித்து முடியுங்கள். இல்லையென்றால் நீங்களே youtube பார்த்து தினமும் செய்து பழகுங்கள். அது நன்றாக வருகிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்த பிறகு, நீங்கள் அதை முதலில் உங்கள் நண்பர்களுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். அவர்களின் feedback மூலம் நல்ல தகவல் கிடைக்கிறது என்றால், online இல் விற்பதற்கான instagram பக்கத்தை உருவாக்குங்கள். பின் நீங்கள் செய்யும் அனைத்து cake யும் அதில் பதிவு செய்யுங்கள். இதனால் உங்களுக்கு நிறைய order கிடைக்க வாய்ப்பு உண்டு. சமீபத்தில் என்ன trend ஐ பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து அதற்கு ஏற்ப unique ஆக செய்யுங்கள். பிறந்தநாள் முதல் திருமணம் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் supply செய்யலாம். Swiggy, Zomato போன்ற delivery partner மூலம் நீங்கள் டெலிவரி செய்யலாம்.
-
Content Writer
இப்பொழுது அனைத்து விதமான வேலைகளுக்கும் கன்டென்ட் எழுதுவது என்பது demanding ஆனால் வேலையாக இருக்கிறது. எல்லா வகையான தொழிலிலும் தங்கள் தொழிலை மக்களுக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அதற்கான தீர்வு சிறந்த கன்டென்ட் எழுதுபவர் மட்டுமே கொடுக்க முடியும். அது நீங்களாக இருந்தால் உங்களுக்கான ஆரம்ப சம்பளமே 15ல் இருந்து 20 ஆயிரம் வரை கிடைக்கும். உங்கள் எழுதும் திறனை தினமும் புதுப்பித்துக் கொண்டே இருந்தாலே நீங்கள் இன்னும் அதிகமாக சம்பாரிக்கலாம்.
-
Vlogger
நீங்கள் youtube-ல் vlogger ஆக ஆகலாம். நீங்கள் உணவில் ஆர்வம் அதிகம் உள்ளவராக இருந்தால் நீங்கள் சமைக்கும் சமையலே வீடியோவாக எடுத்து பதிவு செய்து youtube இல் பதிவேற்றலாம். இல்லையென்றால் நீங்கள் விதவிதமாக சாப்பிட ஆர்வம் உள்ளவர்கள் என்றால் நீங்கள் வெளியில் உணவகங்களில் சென்று சாப்பிடும் பொழுது அதனை வீடியோவாக எடுத்து பதிவேற்றலாம். தவிர உங்களுக்கு நிறைய புதுமையான இடத்திற்கு செல்வது வழக்கம் என்றால் அதனையும் travel vlog ஆக செய்யலாம். இது தவிர குழந்தை வளர்ப்பு தன்னம்பிக்கை பேச்சு போன்ற மக்களுக்கு உபயோகமாக இருக்கும் கருத்துக்களை நீங்கள் தினமும் பதிவேற்றி பயன்பெறலாம்.
-
Home cooked tiffin service:
நீங்கள் சுவையாக சமைப்பவர் ஆக இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்த பெரிய வரம் ஆகும். பொதுவாகவே இந்தியாவில் பெண்கள் சுவையாக சமைக்கிறார்கள். இதையே வீட்டிலிருந்து செய்யும் தொழிலாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளது. இன்று பலர் வீட்டு சமையல் கிடைக்காதா என்ற இயக்கத்தில் இருக்கின்றனர். எனவே நீங்கள் வீட்டில் சமைத்த உணவையே, subscription முறையில் விற்கலாம். தவிர உங்கள் சேவையை Zomato, Swiggy போன்ற டெலிவரி பார்ட்னர்ஸ் ஐ வைத்து ஆன்லைனிலும் செய்யலாம்.
-
Graphic designing:
இப்பொழுது அனைத்து தொழில்களுக்கும் விளம்பரத்திற்காகவும் அவர்களின் பொருட்களை கண்கவரும் போஸ்டராக மாற்றுவதற்காகவும் சிறந்த design தேவைப்படுகிறது. உங்களுக்கு designing இல் ஆர்வம் அதிகம் என்றால் உங்கள் திறனை வளர்த்துக்கொண்டு இதனைக் கூட வீட்டிலிருந்து நீங்கள் செய்யலாம்.
எந்த வேலையையும் நம் வசப்படுத்துவது நம்மிடம் இருக்கும் திறமையும் தன்னம்பிக்கையும் மட்டுமே!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow
https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage
https://tamil.shethepeople.tv/women-of-cinema/4-important-things-to-learn-from-actress-samantha
https://tamil.shethepeople.tv/health/cooking-tips-and-tricks-for-beginners