Advertisment

Dear Beginners in Cooking, உங்களுக்கான Tips அண்ட் Tricks இதோ!

சமைக்கத் தெரியாதவர்களுக்கென பல YouTube channel இல் பலவிதமான சுவையான ரெசிப்பிகள் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சமைக்கும் பொழுது அவர்கள் எத்தகைய நேர்த்தியை கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும் நோக்கமாக எழுதப்பட்டதே இக்கட்டுரையாகும்!

author-image
Pava S Mano
New Update
Cooking

Image is used for representational purpose only

அந்த காலத்தில் எல்லா பெண்களையும் சிறு வயதிலிருந்து சமைப்பதற்காக பழக்கி விடுவார்கள்.  ஆனால் இன்று பெண்கள் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிக்கும் சென்று படித்துக் கொண்டிருப்பதால் அந்த வேலைகளை செய்ய மட்டுமே அவர்களுக்கு நேரம் இருக்கிறது. சமைப்பதை பற்றி யோசிப்பதற்கான நேரம் அவர்களுக்கு குறைவாகவே இருப்பதால் அந்த திறனை அவர்கள் திருமணத்திற்கு பின் தான் வளர்த்திக் கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமையல் தெரியாமல் இருந்தாலும் YouTube பார்த்து சமையலை கற்றுக்கொண்டு அவர்கள் கணவரை சீக்கிரம் Impress செய்து விடுகிறார்கள். எனவே இப்பொழுது திருமணத்தில் சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்னும் நிபந்தனை குறைவாகவே காணப்படுகிறது. இருந்தாலும் நான் சமையல் செய்ய விரும்புகிறேன் என்று இருக்கும் பெண்களுக்கான Tips இதோ!

Advertisment

Cutting மற்றும் Peeling:

  • காய்கறிகளை Cut அல்லது Peel செய்வதற்கு முன்பே கழுவி விடுங்கள். இதனால் காய்கறிகளில் உள்ள Water Soluble Vitamins ஐ தக்க வைத்துக் கொள்ளலாம்.

  • உருளைக்கிழங்கையும் கத்திரிக்காயையும் வெட்டியவுடன் தண்ணீரில் போட்டு விடுங்கள். இதனால் அந்த காய்கறியின் நிறம் ஆனது அப்படியே இருக்கும்.

  • ஆப்பிளை வெட்டும் பொழுது கத்தியில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு தடவி வெட்டுங்கள். இதனால் ஆப்பிள் நிறம் மாறாமல் Fresh ஆக இருக்கும்.

  • கொத்தமல்லி தலைகளை Muslin cloth bag இல் வைத்து Fridge உள் வைக்கவும். இதனால் கொத்தமல்லி தழைகள் வாடாமல் இருக்கும்.

  • பச்சை மிளகாய் மேலிருக்கும் Stem ஐ எடுத்த பிறகு fridge இல் வைத்தால் அது நீண்ட காலம் fresh இருக்கும்

  • வெங்காயத்தை உரித்த பிறகு இரண்டாக வெட்டி தண்ணீருக்குள் 10 நிமிடம் வைத்திருந்தால், வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணில் வரும் எரிச்சலை நிறுத்தலாம்.

  • பழங்கள் மற்றும் காய்கறிகளை newspaper இல் கட்டி fridge உள் வைப்பதால் நீண்ட நாள் Fresh ஆக இருக்கும்

Frying Tips:

Advertisment

Frying

  • எந்த பொருட்களை என்னைக்கும் போடுவதற்கு முன் எண்ணையை நன்றாக காய வையுங்கள்

  • நீங்கள் மசாலா தயாரிக்கும் பொழுது தேங்காய் சேர்த்துக் கொள்கிறீர்கள் என்றால் தேங்காய் போட்ட பிறகு நீண்ட நேரம் வதக்க வேண்டாம்

  • பூரி மொறுமொறுவென வருவதற்கு கோதுமை மாவில் சிறிது அரிசி மாவு கலந்து knead செய்யுங்கள்

  • பக்கோடா மொறுமொறுவென வருவதற்கு கடலைமாவில் சிறிது கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம்

  • கீரை வதக்கும் பொழுது சிறிது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் கீரையின் பச்சை நிறம் அப்படியே இருக்கும்

  • தாலிக்கும்பொழுது வெங்காயம் தக்காளி சேர்த்த பிறகு சிறிதளவு உப்பு சேர்த்தால் வெங்காயமும் தக்காளியும் சீக்கிரமாக வதங்கும்

Gravy Tips:

Advertisment
  • குழந்தைக்கான மசாலா வறுக்கும் பொழுது பிளேமை கம்மியல் வைத்து வருத்தால் அதனின் நிறம் மற்றும் சுவை அருமையாக இருக்கும்

  • புளிக்குழம்பு சிறிது வெள்ளம் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்

  • இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது 60% பூண்டு மற்றும் 40% இஞ்சி சேர்த்து அரைக்கலாம்

  • பன்னீர் பட்டர் மசாலா போன்ற north Indian gravy க்கு  Kasuri methi மற்றும் ஜல்ஜீரா சேர்க்கும் பொழுது சுவையும் மனமும் அதிகரிக்கும்

Cooking tips:

Deep fry

Advertisment
  • ஒரு கப் பருப்பிற்கு இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் வைத்து வேக வையுங்கள்

  • நீங்கள் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளுக்கு தண்ணீர் பத்தவில்லை என்றால் சுடுதண்ணியை மட்டுமே ஊற்றுங்கள்

  • அடி கனமான பாத்திரங்கள் மட்டுமே உபயோகித்து அல்வாக்கலோ மத்த இனிப்பு பொருட்களோ செய்யுங்கள்

  • எந்த மசாலாவிற்கும் தயிர் சேர்க்க வேண்டும் என்றால் அதை நன்றாக அடித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்

  • பால் காய வைக்கும் பொழுது பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி காய வைத்தால் பாத்திரம் அடி பிடிக்காது

  • நாம் வீட்டிலேயே செய்த இஞ்சி பூண்டு விழுதுகளுக்கு ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி வைத்தால் அது நீண்ட நாள் சுவையாகவும் Fresh ஆகவும் இருக்கும்

  • சாதம் உதிரியாக வர வேண்டும் என்றால் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்

  • Noodles செய்யும்பொழுது, அதை சுடு தண்ணீரில் வேக வைத்த உடன் குளிர்ந்த நீரை ஊற்றி வைத்து விடுங்கள். Noodles ஒட்டாமல் இருக்கும்.

  • உருளைக்கிழங்கை உப்பு தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்த பிறகு சமைத்தால் அது சீக்கிரம் வெந்துவிடும்

Non-veg cooking tips:

  • சிக்கன் சமைக்கும் பொழுது முதலில் அடுப்பை High flame இல் வைத்து பிறகு low flame இல் வைத்த சமையுங்கள்.
  • மீன்களை ஒரு நாளிற்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நன்றாக clean செய்து உப்பு, மஞ்சள் மற்றும் சிறிது வினிகர் கலந்து மீனில் தடவி freeze செய்து விடுங்கள்

  • சிக்கனில் மசாலா கலவை சமமாக கலக்க வேண்டும் என்றால், ஒரு plastic bag இல் சிக்கன் துண்டுகளை போட்டு பின் மசாலாவை சேர்த்து நன்றாக குலுக்கினால் சமமாக மசாலா இருக்கும்

  • பிராணிலிருந்து வரும் மனம் போக வேண்டும் என்றால், சமைப்பதற்கு முன் சிறிது உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து 20 நிமிடம் வைத்த பிறகு கழுவி சமையுங்கள்

Advertisment

 இதுபோன்று பல நேர்த்திகளை சமையலில் தெரிந்து கொள்ள நம் அனுபவமே நமக்கு உதவும். சமையல் கற்றுக் கொள்வது சுலபமான விஷயம். சமைப்போம், சுவைப்போம் ஆரோக்கியமாக!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones

https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan

https://tamil.shethepeople.tv/health/sugar-substitutes-for-diabetic-patients

 

cooking
Advertisment