உங்கள் பெண் குழந்தை பிறந்த உடனே அவர்களுக்கு நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் சந்தோஷமாக செய்கிறீர்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஆசை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அனைத்தையும் செய்யுங்கள். ஏனென்றால் பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்காகவும் சமூகத்திற்காகவும் அளவற்றை இழந்து வாழ்ந்து வருகின்றனர். நீங்களும் சாதாரண பெற்றோர்கள் போல மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லி அவர்களின் ஆசையை மறுக்காதீர்கள்.
அவர்கள் ஆசை என்ன என்று கேளுங்கள்:
பெண் குழந்தைகள் சிறு வயதிலிருந்து அவள் கேட்காத அனைத்தும் கிடைக்கும். ஆனால் கேட்கும் எதுவும் அவளுக்கு கிடைக்காது. அது என்னவோ தெரியவில்லை பெண் குழந்தைகள் வாங்கி வந்த வாரம் அப்படி இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பெண் அவளுக்கு பிடித்த படிப்பை எடுத்துப் படிக்கிறேன் என்று கூறினால், பெற்றோர்களோ, அவர்களின் ஆசைக்கு ஏற்ப, இல்லை நீ இந்த படிப்பை தான் படிக்க வேண்டும் என்று திணிக்கிறார்கள். இதனாலேயே அவள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். சரி அந்த படிப்பையும் பெற்றோர்களுக்காக அதே துறையில் உள்ள நமக்கு பிடித்த ஒன்றை படிக்கலாம் என்று கேட்டாலும், அதையும் இல்லை, அந்தக் கல்லூரி ரொம்ப தொலைவில் உள்ளது, அவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்க முடியாது என்று சொல்லி அதையும் அவர்கள் விருப்பத்திற்கே தேர்ந்தெடுக்கிறார்கள். இறுதியில் அந்த குழந்தைகள் தனக்கு பிடித்ததை படிக்க முடியாமல், குறைவான ஈடுபாட்டுடன், வேறு வழியே இல்லாமல், அந்த படிப்பை முடித்து வெளியே வருகையில் அந்த துறையில் அவர்களுக்கு தேவையான திறனை வளர்த்துக் கொள்வதை தவிர்க்கிறார்கள். இதனாலேயே வருங்காலத்தில் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சற்று தொய்வு ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மற்றும் அவர்களின் திறனுக்கு ஏற்ப படிப்பை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருங்கள்.
திருமணம் தான் வாழ்க்கை என்று கூற வேண்டாம்:
ஒரு பெண் குழந்தையை சிறுவயதிலிருந்தே திருமணத்திற்கு தயார்படுத்துகின்றனர் பெண்களைப் பெற்ற பெற்றோர்கள். இதையெல்லாம் கற்றுக் கொண்டால் உன் வாழ்க்கைக்கு உதவும் என்று சொல்லிக் கொடுக்காமல், இதையெல்லாம் கற்றுக் கொண்டால்தான் திருமணத்திற்குப் பிறகு உன் மாமியார் உன்னை திட்டாமல் இருப்பார் என்று சொல்லிக் கொடுக்கின்றனர். இதுவே சில குழந்தைகளுக்கு தினசரி வேலைகளின் மீது வெறுப்பு உண்டாக வைக்கிறது. Parenting என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் சாமர்த்தியமாக வளர்க்க வேண்டும். திருமணம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். அதை காட்டிலும் சுயமரியாதை மற்றும் சுய சம்பாத்தியம் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை என்பதை புரிய வைத்து வளர்த்துங்கள். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். பணத்திற்காக என்றும் யாரையும் நம்பி இருக்கக் கூடாது, சுய சம்பாத்தியம் மட்டுமே நம்மை காப்பாற்றும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
பாலியல் கல்வி:
சிறுவயதிலிருந்து அவர்களுக்கு பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்தையும் கற்றுக் கொடுங்கள். மாதவிடாய் நாட்களில் எப்படி பெண்ணுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். அது தவிர, பொது இடங்களில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், தைரியமாக எந்த சூழ்நிலையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சிறந்த பெற்றோராக இருந்து அவர்களுக்கு புரிய வையுங்கள். பெண் பிள்ளைகளிடம் எந்த அளவுக்கு நண்பர்கள் போல் பழகுகிறீர்களோ அந்த அளவிற்கு அவர்கள் உங்களிடம் உண்மையாக இருப்பார்கள். எனவே கடுமையாக அவர்களிடம் நடந்து கொள்ளாதீர்கள். எதையும் எதற்காகவும் யாருக்காகவும் பிடிக்காததை செய்ய வைக்க வற்புறுத்தாதீர்கள். ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மற்றும் நிம்மதியாக இருப்பதற்கு அவள் பெற்றோர் வளர்த்த விதம் தான் காரணம். உங்கள் பிள்ளைகளை சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ விடுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/why-household-chores-is-only-meant-for-women
https://tamil.shethepeople.tv/health/how-to-handle-womens-mental-health
https://tamil.shethepeople.tv/health/lifestyle-changes-to-follow-after-40
https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin