உங்களுக்கு 40+ வயதா? அப்போ இத கண்டிப்பா படியுங்க!

40 வயதிற்கு மேல் நம் உடலை நாம் கவனிப்பதே இல்லை. சுவைக்கு அடிமையாகி பல சிக்கல்களை உடம்பிற்கு கொடுத்து வருகிறோம். இதைப் போக்க சிறந்த வழிகள் என்ன என்பதை இக்கட்டுரை உள்ளடக்கிய உள்ளது.

author-image
Pava S Mano
New Update
Woman

Image is used for representational purpose only

30 வயதிற்கு மேல் பெண்கள் பல உடல் ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான். அந்த சமயத்தில் அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிப்பதால் எடை குறைதல் மற்றும் பல மாற்றங்கள் உங்கள் உடலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் 30 வயதிற்கு மேல் பல உடல் ரீதியான பிரச்சினைகள் வந்தாலும் அவர்கள் ஆரோக்கியத்தை காப்பதை மறந்து விடுகிறார்கள் பலர். சுவைக்கு அடிமையாகி தங்கள் உடம்பிற்கு சேரவில்லை என்றாலும் அதனை கைவிட அவர்கள் மனம் ஒத்துழைப்பதில்லை. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக உடல் நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எலும்பு சம்பந்தமான நோய்கள்:

Advertisment

30 வயதிற்கு பிறகு எலும்புகளின் அடர்த்தி குறைய தொடங்குகிறது. இதனால் எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். கால்சியம் வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்வதால் எலும்பை வலுவாக வைத்திருக்க முடியும். இது தவிர எலும்பை வலுவாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யலாம். 

உடல் எடையை பராமரிப்பது:

உங்கள் உங்கள் உடலில் insulin resistance ஐ பொறுத்துதான் நீரிழிவு நோய் வரும். அதை பராமரிக்க நீங்கள் உண்ணும் உணவு சரியாக சிரிக்க வேண்டும். நம் உண்ணும் உணவை செரிப்பதற்கு நம் உடலுக்கு என்ன தேவையோ அந்த சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்க தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு, எடை பராமரிப்பில் கவனத்தை செலுத்துங்கள். இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடம்பில் இருந்து நீங்கும். தினமும் இரவு நன்றாக தூங்குங்கள். தூக்கம் என்பது 30 வயதிற்கு மேல் மிகவும் அவசியம். இல்லையென்றால் மனரீதியான பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு உண்டு.

Hormonal balance:

Hormone

Advertisment

பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை இன்மை அதிகம். இதனால் உடலில் சுரக்கும் ஹார்மோனின் அளவு மாறத் தொடங்குகிறது. இதனால் இடுப்பு வலி ஒழுங்கற்ற மாதவிடாய் எடை மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் என பல உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது. உங்கள் ஹார்மோனின் அளவை கவனித்து ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தெரிந்து கொண்டு நீங்களும் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றோர் செய்யுங்கள்.

இவற்றை சரி செய்ய என்ன சாப்பிட வேண்டும்?

Nutrition

கார்போஹைட்ரேட்ஸ்க்கு பதிலாக முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். திணை ஒட்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பழங்களை Juice ஆக குடிக்காமல் முழு படமாகவே சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். Antioxidants அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் சருமம் சுருக்கம் இல்லாமல் இருக்கும். எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை குறைந்த கொழுப்புள்ள Dairy products மூலம் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை மற்றும் உப்பை முடிந்த அளவுக்கு குறைவாகவே பயன்படுத்துங்கள். உப்பு அதிகம் சேர்த்தால் எலும்பு வலுவிழிக்கிறது. என்னைக்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நெய்யில் நல்ல கொழுப்பு சத்து இருக்கிறது. விட்டமின் சி உள்ள பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 8 லிருந்து 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 

Advertisment

வயது ஏறிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ன என்பதை முறையாக பயன்படுத்தி வாழலாம்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin

https://tamil.shethepeople.tv/health/foods-to-avoid-during-ulcer

https://tamil.shethepeople.tv/health/cooking-tips-and-tricks-for-beginners

https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation



women health