Ulcer உள்ளவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும் என்று சொல்லுபவர்களை பார்த்திருப்போம். சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சரியாக சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். Antacids அல்லது Antibiotics எடுத்துக் கொள்வதன் மூலம் இதன் வீரியத்தை குறைக்கலாம். அதன் அறிவுரைகள் தெரியும் போதே அல்சரை தடுக்க பல வழிமுறைகள் இருக்கிறது. சிறந்த உணவு பழக்கத்தை முறையாக கடைப்பிடித்தால் அல்சர் பிரச்சினையில் இருந்து எளிதாக விடுபடலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சலையும் இந்த உணவு பழக்கத்தால் மாற்றி விடலாம்.
காரசாரமான உணவுகள்:
நமது நாக்கு எப்போதும் விரும்புவது ருசியாக இருக்கும் உணவை தான். நாம் ருசிக்கு அடிமையாகி விட்டோம் என்றால் உடம்பில் பல பிரச்சினைகள் வந்துவிடும். காரமான உணவுகளை உட்கொள்ளும் போது அதில் இருக்கும் மசாலா பொருட்கள் நம் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் வயிறு புண்ணாகும். ஏற்கனவே அல்சர் இருப்பவர்கள் இத்தகைய காரமான உணவை சாப்பிட்டால் அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அல்சர் உள்ளவர்கள் அதிகம் மசாலா சேர்க்க உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சுட சுட காபி பாலுடன்:
காலையில் எழுந்த உடனேயே கமகமவென காபியை அருந்துபவர் ஏராளம் உள்ளனர். காலையில் வெறும் வயிற்றில் நாம் காபியை குடிக்கும் பொழுது அது அல்சரை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. காபியை பாலில் கலந்து குடிக்கும் பொழுது அதை அல்சரை இன்னும் தீவிரமாக்கும். ஏனென்றால் பாலில் இருக்கும் புரதசத்து மற்றும் கொழுப்பு சத்து வயிற்றில் சுரக்கும் அமிலத்தை அதிகரிக்கும். காபிக்கு பதிலாக பழச்சாறுகளை, அதாவது மாதுளை ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் போன்றவற்றை குடிக்கலாம். வயிற்றுக்கு எந்த பாதகமும் இல்லை.
சிவப்பு இறைச்சி:
பொதுவாக இந்தியாவில் pork அதிகமாக உட்கொள்ளப்படுவதில்லை. ஆனால் mutton அதிகமாக சாப்பிடுகிறார்கள். Mutton ஒருவகையான சிவப்பு இறைச்சியாகும். வெள்ளை இறைச்சியை காட்டிலும் இதில் அதிக புரதச்சத்து மற்றும் கொழுப்பு சத்து இருக்கிறது. அல்சர் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்து இறைச்சி வயிற்றிலேயே தங்கிவிடும். இறைச்சியை செரிமானம் செய்வதற்காக வயிற்றில் அதிக அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும். இது அல்சரை இன்னும் அதிகரிக்கும்.
அல்சர் உள்ளவர்கள் முதலில் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதால் செரிமானம் சீராக இருக்கும் மற்றும் அல்சரை அது தடுக்கும். சிவப்பு இறைச்சிகளை தவிர்த்து மீனை எடுத்துக் கொள்ளலாம். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வதால் உடலில் காண சத்தும் கிடைக்கும் தவிர உணவில் புதினாவை சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை ஊக்குவிக்கும். அல்சரால் வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிடலாம்.காலையில் வெறும் வயிற்றில் தினமும் தேங்காய்ப்பால் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறும். தேவையற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/cooking-tips-and-tricks-for-beginners
https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation
https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones
https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan