ஒரு பெண்ணிடம் சென்று உங்கள் mental health எப்படி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு அவர்கள் மௌனத்திலே பதில் அளிப்பார். அதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்று யோசிக்கும் பொழுது இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. அவள் மனதில் ஆயிரம் யோசனைகள் இருக்கும். Women are overthinkers than men என்பது துல்லியமான உண்மை. பெண் மனதின் ஆழத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் மனம் புண்படாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது:
உங்கள் மகள் மனரீதியாக எப்படி இருக்கிறாள் என்பதை நீங்கள் முதலில் அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளின் மனநலத்தை தெரிந்து கொள்ள அவர்களிடம் சுதந்திரமாக உரையாடுங்கள். அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அன்றைய நாள் எப்படி சென்றது? அவர்களிடம் பழகும் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள், ஆசிரியர்கள் எப்படி பாடம் எடுக்கிறார்கள், போன்ற கேள்விகளை கேட்டு அன்றைய நாள் அவர்களுக்கு எப்படி சென்றது என்று தெரிந்து கொள்ளுங்கள். அன்று அவர்கள் கற்றுக் கொண்ட விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் அன்றைய நாளில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம் என்ன என்பதையும் அவர்களுக்கு சொல்லுங்கள். Communication தான் எந்தவித பிரச்சனைக்கும் சரியான தீர்வாக இருக்கும். இப்பொழுது பல பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு முதல் காரணம் பிள்ளைகள் இதுபோன்ற விஷயங்களை பெற்றோர்களிடம் கூற மறுப்பது தான். இதற்கு காரணம் பெற்றோர்கள் அத்தகைய விஷயங்களை Taboo வாக பார்க்கிறார்கள். இது போன்ற விஷயங்களை சாதாரணமாக உங்கள் பிள்ளைகளிடம் பேசும் பொழுது அவர்கள் எதையும் உங்களிடம் இருந்து மறைக்க மாட்டார்கள். நமக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் பெற்றோர்கள் துணை இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை எப்படி வளர்ப்பது என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்யுங்கள்.
நண்பர்கள் செய்ய வேண்டியது:
இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் அதிகமாக இருக்கின்றன. இது தவறான விஷயம் அல்ல. ஒரு பெண் பல இடங்களுக்கு செல்லும் பொழுது ஒரு ஆண் நண்பன் இருந்தால் அவள் மிகவும் பாதுகாப்பாக உணர்வாள். அப்படி இருக்கும் பொழுது, சில சமயங்களில் அவர்களிடமும் கூற முடியாத சில சூழ்நிலைகளால் பெண்கள் மனரீதியான பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது பெண் நண்பர்களாக இருந்தாலும் சரி ஆண் நண்பர்களாக இருந்தாலும் சரி அவர்களை அந்தப் பிரச்சனையில் இருந்து எப்படி விடுவிப்பது என்பதை யோசித்து, judge செய்யாமல் இருங்கள். அப்படி நீங்கள் judge செய்கிறீர்கள் என்று தெரிந்து விட்டால் அவர்களின் மனம் இன்னும் காயமாகிவிடும். நண்பர்களே நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அது மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும்.
குடும்பத்தினர் செய்ய வேண்டியது:
மனைவியானவள் வீட்டு வேலைகளை செய்து விட்டு வெள்ளி வேலைகளையும் செய்து விட்டு குடும்பத்தை பற்றிய யோசனையை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார். அவளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணவன்மார்கள் கவனித்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் சரியாக இருக்கிறார்களா என்று கவனித்துக் கொள்ளுங்கள். சில வயதை தாண்டிய பிறகு பல பெண்களுக்கு தூக்கமின்மை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு காரணம் சில சமயம் குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள் தான். அவற்றைப் போக்க என்ன வழி என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்யுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது உங்கள் மனைவியை உணவகங்களுக்கோ அல்லது கோவில்களுக்கோ அல்லது அவர்களுக்கு பிடித்தமான இடம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அங்கு அழைத்து செல்லுங்கள். அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதாலேயே பல பிரச்சனைகள் யோசித்து யோசித்து மன ரீதியான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். பணம் அவசியம் தான் ஆனால் அதைவிட மனைவியின் ஆரோக்கியமும் மன அமைதியும் முக்கியம் என கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சம்பாதிப்பதே நம் குடும்பத்தாரின் சந்தோஷத்திற்காக தான், அந்த சந்தோஷமே இல்லாத பணம் எதற்கு?
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife
https://tamil.shethepeople.tv/health/lifestyle-changes-to-follow-after-40
https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin
https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow