இல்லத்தரசிகள் என்றாலே குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் மனதில் கொண்டு அயராது உழைப்பவர்களாக இருந்து வருகிறார்கள். இதில் அவர்களைப் பற்றிய யோசனை என்பது மிகவும் கம்மியாகவே இருக்கிறது. இதனாலே பல உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்களை இல்லத்தரசிகள் அதிகம் எதிர்கொள்கின்றனர். மற்ற நாடுகளை காட்டிலும், இந்திய பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் மற்றவர்களின் தேவையை நோக்கி ஓடுகிறார்களே தவிர தங்கள் உடலுக்கும் மனதுக்கும் எது அமைதி தரும் என்று எப்பொழுதும் என்னவதில்லை. இவை அனைத்தையும் செய்து விட்டு, நாம் நம்மை கவனிக்காமல் இருப்பதற்காக மற்றவர்களை குறை கூறுவது என்பது தவறான விஷயமாகும். உங்களை கவனித்துக் கொள்ள உங்கள் மனதை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கிறது.
இல்லத்தரசிகளின் மீதான சமூக பார்வை:
தொடர்ந்து மாறிவரும் சமூகத்தில் பெண் படித்தே இருந்தாலும் அவள் கோல்ட் மெடலிஸ்ட் ஆக இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு வேலைக்கு செல்லாமல், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று நிபந்தனை கூறும் பல குடும்பங்கள் இன்றும் இருக்கிறது. அப்படியே திருமணம் முடிந்த பிறகு வேலைக்கு சென்று கொண்டு இருந்தாலும், குடும்பத்தை சரியாக பார்ப்பதில்லை என்று சொல்லி வேலையை விட்டு நிறுத்தி பல மன சுமையை அவள் மனதில் ஏற்றுகின்றது சமூகம். பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பல்வேறு எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு கல்வியறிவு இருந்தும், இல்லத்தரசிகளாக மாறும் பொழுது ஒதுக்கப்பட்டவள் ஆகவும் சுயமரியாதை குறைவாக இருப்பதாகவும் உணர்கிறாள். இத்தகைய சம்பவம் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதை தீர்ப்பதற்கான வழி என்ன?
-
உங்களுக்கென ஒரு பொழுதுபோக்கு:
வீட்டு வேலையை செய்து முடித்த பிறகு உங்களுக்கென ஒரு பொழுதுபோக்கை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு art and crafts இல் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்களால் முடிந்ததை கைவினைப் பொருட்களாக செய்து வீட்டை அலங்கரிங்கள். Gardening செய்யுங்கள். இப்படி உங்கள் நாளை வேலையிலும் பொழுதுபோக்கிலும் செலுத்திக் கொண்டிருந்தால் உங்களுக்கான மன அழுத்தம் என்பது குறைய வாய்ப்புள்ளது. மேலும், சில சமயங்களில் உங்களுடைய பொழுதுபோக்கே, கூட உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை தர வாய்ப்பு உள்ளது.
-
Work from home:
வீட்டிலிருந்தே உங்கள் திறனுக்கு ஏற்ற வேலையை செய்ய பல வாய்ப்புகள் இன்று சமூகத்தில் இருக்கிறது. அப்படியே இல்லை என்றாலும் அதற்கான திறனை வளர்த்துக் கொண்டு அத்தகைய வேலையை செய்து உங்கள் கவனத்தை திசை திருப்பி மன நிம்மதியை பெறுங்கள்.
-
Me-time:
உங்கள் நாளை எப்படி உபயோகிக்க போகிறீர்கள் என்று திட்டமிட்டு கொள்ளுங்கள். அதில் உங்களுக்கான நேரம் என்பதையும் ஒதுக்கங்கள். உங்கள் ஆர்வத்தை அதிகரிக்க திறனை மேம்படுத்த உடற்பயிற்சியை வளர்த்துக் கொள்ள என்ன செய்யப் போகிறீர்கள் என்பதே உங்கள் Me-time இன் goal ஆக இருக்கப் போகிறது. இல்லை உங்களுக்கு வெளியே செல்வதில் ஆர்வம் இருக்கிறது என்றால் அதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் daily routine ஆள் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் தினமும் அனுபவிக்கும் மனரீதியான பிரச்சனைகள் இருந்து வெளிவந்து நிம்மதியாக இருங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/rights-every-married-woman-should-know
https://tamil.shethepeople.tv/society/things-you-should-never-do-in-front-of-children
https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling
https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-good-parenting