Married woman - கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

திருமணம் என்பது நமது சமூகத்தில் பார்க்கப்படும் ஒரு பெரிய விஷயமாகும். இருவருக்கும் திருமணம் செய்யும் போது பல எதிர்பார்ப்புகளும் கடமைகளும் உண்டு. அவைகளை இருவரோடு சேர்த்து குடும்பத்தினரும் பூர்த்தி செய்ய வேண்டும்.

author-image
Pava S Mano
New Update
Married woman

Image is used for representational purpose only

இந்தியாவில் திருமணம் என்பது இருவருக்கும் இடையே மட்டும் நடக்கும் ஒரு தனிப்பட்ட விஷயமாக பார்க்கப்படுவதில்லை. அது குடும்பமே சேர்ந்து நடத்தி வைக்கும் ஒரு ஆடம்பர நிகழ்வாகும். திருமணம் முடிந்த பிறகு பெண் தான் ஆணின் வீட்டில் வசிப்பவராக இருக்கிறார். அவளின் பாதுகாப்பை மற்றும் கண்ணியத்தை கருதி இந்திய அரசு அவர்களுக்கென சில உரிமையை வழங்கியுள்ளது. அது என்ன என்பதை கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisment

Right to reside in Marital home:

ஒரு பெண் திருமணமான பிறகு அவள் புகுந்த வீட்டில் இருப்பதற்கு முழு உரிமை உண்டு. அது அவள் கணவனின் சொந்த வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தாலும் சரி. ஒருவேளை அவர்கள் இருவரும் பிரிகிறார்கள் என்றாலும் இந்த உரிமையானது எடுத்துக் கொள்ள முடியாது.

Right to Streedhan:

ஒரு ஹிந்து பெண் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அவர்களுக்காக அளிக்கப்படும் விலைமதிப்புள்ள பொருட்கள்தான் சீதனம். Dowry உம் சீதனமும் வேறு. ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளுக்கு கொடுக்கப்பட்ட சீதனத்தின் மீது முழு உரிமை உண்டு என்று நீதிமன்றம் சொல்கிறது.

Right to maintenance by husband:

ஒரு கணவன் தன் மனைவிக்காக திருமணத்திற்கு பிறகு பொருளாதார ரீதியாக உதவலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்து திருமண சட்டம் 1955 இன் படி ஒரு பெண் முதல் கணவரால் பிரிக்கப்பட்டு பின் வேறொரு நபரை திருமணம் செய்ய ஆயுத்தமானால் அதன் வரை அவளுக்கான financial maintenance ஐ முன்னாள் கணவரிடம் பெற்றுக் கொள்ளலாம். விவாகரத்து ஆன பெண்கள் ஜீவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம். அது பாலினத்தை சம்பந்தப்பட்ட இருக்காது. இது ஒரு கணவன் மனைவியின் மீது Financially Dependent ஆக இருந்தால் மனைவி கணவனுக்கான அனைத்து நிதி உதவியும் கொடுக்க வேண்டும்.

Advertisment

Right to Live with dignity and respect:

ஒரு திருமணமான பெண் எப்படி அவள் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தார் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ்கிறார்களோ அவ்வாறே வாழ்வதற்கான முழு சுதந்திரமும் அவளுக்கு இருக்கிறது. Indian constitution's article 21 திருமணமான பெண்ணிற்கான கண்ணியமான வாழ்க்கையை உறுதியளிக்கிறது. அவள் எந்த சித்தரவாதையையும் அனுபவிக்க அவசியம் இல்லை என்று நீதிமன்றம் சொல்கிறது. 

Right to succession in Parental Property:

Hindu Succession Act 1956 இன் படி சுப்ரீம் கோர்ட் திருமணமான பெண் அவள் பெற்றோரின் சொத்துக்கள் மீது முழு உரிமை உண்டு என்று சொல்கிறது. திருமணம் ஆனாலும் சரி ஆக விட்டாலும் சரி ஒரு மகனுக்கு எப்படி பெற்றோரின் சொத்தின் மேல் அதிக உரிமை உண்டோ அதே அளவு உரிமை மகள்களுக்கும் உண்டு என்று சட்டம் சொல்கிறது.

Right against Violence:

இந்தியாவைப் பொறுத்தவரை குடும்ப வன்முறை என்பது அதிகமாக இருக்கிறது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அது கணவராக இருந்தாலும் கணவனின் குடும்பத்தாராக இருந்தாலும் வன்முறை மற்றும் கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து அல்லது பிற சட்டபூர்வமான தீர்வுகளுக்கு வழி வகுக்கிறது.

Advertisment

பெண்களின் உரிமை அரசால் பாதுகாக்கப்பட்டாலும் சமூகத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கண்ணோட்டமே ஓங்க வேண்டும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/schemes-that-help-women-entrepreneurs-grow

https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know

Advertisment

https://tamil.shethepeople.tv/news/rights-of-working-women

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

Right