இந்தியாவில் 15.7 மில்லியன் பெண்களால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் இருக்கிறது. இந்த ஐந்து வருடத்தில் Female Entrepreneurship இன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் அது 90 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண் தொழில் முனைவோர் Gender inequality, பணரீதியான உதவி இன்மை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இவை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுவர். அந்த சிரமத்தை போக்கவே இந்திய அரசு அவர்களுக்கென தனித்திட்டங்களை நிறுவியுள்ளது.
Mudra yojana:
முத்ரா யோஜனா ஸ்கீம் என்பது பெண்களால் தொடங்கப்படும் MSME தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது Women Entrepreneurs ஐ ஆதரவிற்கும் பொருட்டு தொடங்கப்பட்டதாகும். முத்ரா யோஜனாவில், Collateral ஏதும் இல்லாமல் 10 லட்சம் வரை கடன் கிடைப்பதற்கான வசதி மற்றும் பெண்களுக்கெனவே பிரத்தியேகமாக குறைந்து வட்டி உடன் கடன் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது இந்த திட்டம்.
Stand-up India Scheme:
பட்டியல் இனம் மற்றும் பழங்குடியின பெண்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கான தொழில் முனைவு எண்ணத்தை ஆதரிக்கவே இத்திட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் குறைந்தபட்சம் ஒரு பட்டியலினம் மற்றும் பழங்குடியின பெண்ணுக்காவது கடன் கொடுத்திருக்க வேண்டும். தனிநபர் நிறுவனம் இல்லை என்றால், அந்தக் குறிப்பிட்ட பெண்ணுக்கு குறைந்தபட்சம் 51% ஆவது நிறுவனத்தில் உரிமை இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை அவர்கள் தொழிலை ஆரம்பிக்கவும் இல்லை விரிவு செய்யவும் கடன் வாங்கலாம்.
Mahila Coir Yojana:
பெண்களுக்கான தொழில் அதிகாரத்தை பெருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த மகிலா காயர் யோஜனா. இதன் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு Coir Spinning Equipment 75% மானியத்துடன் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த இயந்திரத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று திறன் வளர்ச்சி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டமானது 18 வயதிற்கு மேல் உள்ள கிராமப்புற பெண்களுக்கு என முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. Coir Board Training institute இல் பயிற்சியை முடித்த பிறகு இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த மானியத்தில் தொழில் தொடங்கலாம்.
Udyam Shakti Portal:
Ministry of MSME ஆள் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, Social entrepreneurship மூலம் குறைந்த பொருள் மற்றும் சேவைகளை மக்களுக்கு எப்படி அளிப்பது என்ற உதவியை வழங்குகிறது. இதில் Business planning, Incubation, training, mentorship மற்றும் பல உதவிகளை பெண் தொழில் முனைவோர் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 25 லட்சத்திற்கு மேல் இருக்கும் தொழில் திட்டங்கள் தான் இதற்கு தகுதியானது.
இப்படி பல திட்டங்கள் இந்திய அரசால் பெண்களுக்கென நிறுவப்பட்டாலும், அவர்களுக்கான சமூக அந்தஸ்து என்பது குடும்பத்திலும் கிடைப்பதில்லை நிறுவனத்திலும் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற என்ன திட்டத்தை செயல்படுத்துவது?
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/problems-women-entrepreneurs-face
https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know
https://tamil.shethepeople.tv/news/ritu-karidhal-rocket-women-behind-chandrayaan-3
https://tamil.shethepeople.tv/news/rights-of-working-women