Advertisment

Ritu Karidhal -Chandrayaan 3 பயணத்தின் பின்னால் இருக்கும் Rocket Women

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, இன்று விண்ணிலே ராக்கெட் செய்வது எப்படி என்று இந்த உலகிற்கே கற்றுக் கொடுத்து வருகின்றார்கள். சந்திரயான் 3 இன் வெற்றிக்குப் பின்னால் இருப்பது ஒரு பெண் என்று நினைக்கும் பொழுது வரும் ஆனந்தம் எண்ணில் அடங்காது.

author-image
Pava S Mano
New Update
Ritu Karidhal

Ritu Karidhal - Rocket Women of India

இன்று உலகே கொண்டாடி வரும் Chandrayaan 3 விண்கலத்தின் வெற்றிக்கு பின்னால் இருப்பது இந்தியாவின் Rocket Women என அழைக்கப்படும் Ritu Karidhal என்னும் பெண் விஞ்ஞானி தான். இவர் லக்னோவை சேர்ந்தவர். மங்கள்யான் மிஷன் முதல் சந்திராயன் 3 மிஷன் வரை இவரின் பங்கு என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இவர் விஞ்ஞான பயணத்தில் மட்டும் சாதித்தவர் அல்ல ஒரு பெண் எந்த எல்லைக்கு வேணாலும் சென்று அவள் சாதனையை காட்டி அதில் வெற்றி பெறுவார் என்று நிரூபித்துள்ளார்.

Advertisment

Chandrayaan 3

STEM என்று அழைக்கப்படும் Science. Technology. Engineering and Mathematics துறையில் பெண்கள் சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால், அந்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் அவருக்கான ஆற்றலை வளர்த்து இன்று உலகமே போற்றக்கூடிய சாதனையை அடைவது என்பது சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

யார் இந்த Rocket Women?

Advertisment

Ritu Karidhal

உத்திர பிரதேச மாவட்டம் லக்னோவில் பிறந்து லக்னோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்தார். இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அதே பிரிவில் ஆறு மாத காலங்கள் ஆராய்ச்சி அறிஞராக இருந்தார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை படிப்பதற்காக பெங்களூரில் உள்ள ஐஏஎஸ்சியில் சேர்ந்தார். இவர் 1997இல் முதல் முறையாக இஸ்ரோவில் சேர்ந்தார். மங்கள்யான் மிஷினின் துணை செயல்பாட்டு இயக்குனராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதை பயணத்திற்காக கைவினைப் பொருளின் முன்னோக்கி தன்னாட்சி அமைப்பை (Forward autonomous system) வடிவமைத்து செயல்படுத்தும் பொறுப்பையும் வகுத்தார். மேலும் 2019ல் சந்திராயன் 2 இன் பணி இயக்குனராக இருந்தார். 

இவர் பெற்ற விருதுகள்:

Advertisment

முன்னாள் குடியரசு தலைவர் APJ ABDUL KALAM ஐயா அவர்களிடம் 'இஸ்ரோ இளம் விஞ்ஞானி விருது', 'இஸ்ரோ டீம் விருது அம்மா', 'ஏ எஸ் ஐ அணி விருது', 'விண்வெளியில் சாதனையாளர்கள்' போன்ற பல விருதுகளை தன் வசம் வைத்துள்ளார் Ritu Karidhal.

Ritu Karidhal இளம் தலைமுறைக்கு சொன்னது:

Stem

Advertisment

"என் இளம் வயதில் இருந்தே எனக்கு அறிவியலில் மீது நாட்டம் அதிகம். அறிவியல் என்பது வெறும் பாடம் மற்றும் ஆக எனக்கு இல்லை, அதுவே எனது குறிக்கோள் என்பதை நான் உணர்ந்தேன். எனக்கு முதல் முறையாக இஸ்ரோவில் இருந்து வேலை கிடைத்த பொழுது, எனது பெற்றோர் என் மீது வைத்திருந்த அளவில்லா நம்பிக்கையே நான் இங்கு வந்து சாதனை புரிய முதல் படியாக அமைந்தது. நான் முதலில் Mission designer ஆக தான் பணியில் சேர்ந்தேன். நீங்கள் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தீர்கள் என்றால் அதுவே உங்களை வெற்றிப் பயணத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லும். எந்த தடைகள் உங்கள் முன் வந்து நின்றாலும் உங்கள் ஆர்வத்தின் முன் அது ஒரு பெரிய விஷயமாக இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் ஒரு பெண்ணால் அவள் இலக்குகளை அடைய முடியாது. என் பிரசவத்தின் போதும் நான் வீட்டில் இருந்தே வேலை செய்தேன். அப்பொழுது என் கணவர் எனக்கு மிகவும் துணையாக இருந்தால். குடும்ப ஆதரவு இருந்தாலே நீங்கள் எதிர்கொள்ளும் எந்த சிக்கல்களையும் சுலபமாக கையாளலாம். எங்கள் கணவன்,மனைவி உறவுக்குள் இருக்கும் Mutual Understanding தான் இதற்கு காரணம். உங்கள் வேலையின் மீது உங்களுக்கு இருக்கும் அளவில்லா ஆர்வமும் நேர்மையும் தான் உங்களை சுற்றி உள்ளவர்களையும் உங்களுக்கு ஆதரவளிக்க வைக்கும். இளம் பெண்களுக்கு நான் கூறுவது எந்தவித கவலையும் இல்லாமல் உங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் நோக்கி சென்று கொண்டே இருங்கள். எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கனவை விட்டுக் கொடுக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நான் கூறும் ஆலோசனை என்னவென்றால் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் மகள்களை நம்புங்கள் அவர்கள் உங்களை கண்டிப்பாக பெருமைப்படுத்துவார்கள்" என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவரை inspiration ஆக கொண்டு நம் வாழ்வில் வரும் தடைகளை உடைத்து சிங்க பெண்ணாக உயர்ந்து நிற்போம்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

https://tamil.shethepeople.tv/news/rights-of-working-women

https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship

Advertisment

https://tamil.shethepeople.tv/society/problems-women-entrepreneurs-face



chandrayaan 3
Advertisment