உடல் பருமன் ஆனவர்கள் ஒல்லியாக இருப்பவர்களை பார்த்து இவர்களைப் போல் நமக்கு உடல் வாக்கு வேண்டும் என்று நினைப்பர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தான் அதன் கஷ்டம் என்ன என்று தெரியும். ஒல்லியாக இருப்பவர்கள் அவர்கள் எடையை கூட்ட என்ன செய்தாலும் எடை ஏறவே ஏறாது. என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களின் எடை அப்படியே இருக்கும். உடல் பருமன் ஆனவர்களுக்கு என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூட கூடாது என்பதே கனவாக இருக்கும். ஆனால் ஒல்லியாக இருப்பவர்கள் எனக்கு சற்று உடம்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவர். அவர்களுக்கான டிப்ஸ் இதோ!
உணவு முறையை மாற்றுங்கள்:
அனிமியா, ஹைப்பர் தைராய்டு,மரபணு குறைபாடு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் எடை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எடை குறைவாக இருப்பவர்களின் உணவு பழக்கத்தை நன்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் காலையில் உணவை தவிர்ப்பவர்களாக இருப்பார்கள். துரித உணவு பழக்கமும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் கூட எடை குறைவாக இருக்க காரணமாக இருக்கலாம். ஒல்லியாக இருப்பவர்கள் மாவுச்சத்து கொழுப்புச்சத்து புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் பவுடர் போன்ற விஷயங்களை தவிர்த்து இயற்கையாக எப்படி எடையை கூட்ட வேண்டும் என்று ஒரு Nutritionist ஐ ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள்.
ஆழ்ந்த உறக்கம்:
சில சமயங்களில் உறக்கமின்மை கூட உடல் எடையை குறைக்கும். உதாரணத்திற்கு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் தோழி ஒருவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. அவள் தினமும் கண் விழித்து fiance உடன் பேசிக்கொண்டு இருந்தால். இப்படியே மூன்று மாத காலம் செய்த தாக்கம் அவள் நன்றாக உடல் மெலிந்து விட்டால். காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது அவளின் உறக்கம் சரியாக இல்லை என்பதுதான். இப்பொழுதெல்லாம் இளம் வயதினருக்கு தூக்கமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் மருத்துவர் களை பார்த்து அதற்கான தீர்வை சீக்கிரம் பார்த்து சரி செய்ய வேண்டும். மேலும் நல்ல தூக்கம் தான் நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கும். எனவே, தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியமாகும்.
Muscle exercise:
உடல் மெலிந்திருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களின் தசைகளை வலுப்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சி என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் உடலை நீங்கள் வலுப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த உடற்பயிற்சியினால் Weight gain சீக்கிரம் நடக்கும். உதாரணத்திற்கு, என் சகோதரன் மிகவும் மெலிந்து காணப்பட்டான். அவன் தினமும் தசை சார்ந்த உடற்பயிற்சிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு தற்பொழுது ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரித்து, active ஆக இருக்கிறான்.
எனவே தசை சார்ந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான எடை உயர்வுக்கு வழிவகுக்கும்.
வாழ்க்கை முறை மாற்றம்:
காலையில் உணவை தவறாமல் உட்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு. மேலும் மூன்று வேலை உணவையும் சத்தான உணவாக உட்கொள்ளுங்கள். நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் பரவாயில்லை ஆனால் அனைத்து வகையான சத்தும் நிறைந்த உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். இவற்றை செய்யும் பொழுது நமது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரித்து நிம்மதியாக இருங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/what-should-a-parent-talk-about-her-childs-vaginal-health
https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan
https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin
https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation