Advertisment

30 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் என்ன ஆகும்?

30 வயது ஆகிவிட்டாலே, "என்ன இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?" என்று ஏதோ தவறு செய்வது போல் இச்சமூகம் பார்க்கிறது. ஆனால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் இருக்கிறது. அது அவரவர் சூழலை பொறுத்து.

author-image
Pava S Mano
New Update
30

Image is used for representational purpose only

இன்று உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. வாழ்க்கை முறை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கை வாழ்வதுதான் சரி என்ற எண்ணம் வளம் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், சமூகத்தின் gossips ஐ மனதில் ஏற்றுக் கொள்ளாமல், அவருக்குப் பிடித்ததை செய்வதற்கான சுதந்திரத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டு வருகின்றனர். நம் பெற்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் நாம் இன்று வாழும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதற்கு காரணம் நம் உலகத்தில் உண்டாகி வரும் பரிணாம மாற்றம் தான். 

Advertisment

30 வயதிற்கு மேல் திருமணம் செய்ய விரும்புவோர்:

30

இன்று பல பெண்களிடமும் சரி ஆண்களிடமும் சரி 30 வயதிற்கு மேல் நான் settle ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வதை கேட்டிருப்போம்.  ஆனால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது சரி இல்லை என்று ஒரு பக்கம் கருத்துக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நம் பெற்றோர்களின் தலைமுறையில் திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கையை அவர்களுக்கு பிடித்த மாதிரி செதுக்கி கொண்டு வந்துள்ளனர். ஆனால் இன்று இளம் தலைமுறை பல எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் வாழ்க்கையின் மேல் வைத்து அவை நிறைவேறும் வரை திருமணத்தை தள்ளிப் போடுகின்றனர். எனக்குத் தெரிந்த நண்பர்களே, தங்களுக்கென சில bucket list வைத்து, அதை முடித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தனர். இது சரியா தவறா என்ற விவாதம் சமூகத்தில் அதிகம் இருந்து கொண்டிருக்கிறது.

Advertisment

30 வயதிற்கு மேல் திருமணம் செய்வதால் வரும் நன்மைகள்:

30 வயதிற்கு மேல் தான் மனிதனின் விடலை பருவம் முடிந்து வாழ்க்கையில் ஒரு maturity வருகிறது. எனவே அந்த சமயத்தில் வாழ்க்கையை மற்றும் சமூகத்தை நன்கு புரிந்து அவர்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பார்கள். இந்த வயதில் தங்களுக்கு என்ன தேவை என்கிற தெளிவு அவர்களிடம் இருக்கும். மேலும் 30 வயது வரை அவர்கள் கடந்து வந்த பாதை என்பது அவர்களுக்கு தேவையான அனைத்து வாழ்க்கை புரிதலையும் கற்றுக் கொடுத்திருக்கும். இதனால் ஒருவரிடம் பேசும் பொழுது கூட, எப்படி பேச வேண்டும், எதை பேச வேண்டும், எந்த சமயத்தில் பேச வேண்டும் என்ற நிலவு சுளிவுகள் தெரிந்து, மனம் பக்குவம் அடைந்திருக்கும். இதனால் நம் வாழ்க்கைத் துணையுடன் எந்த பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ள முடியும். மேலும் 30 வயதிற்கு மேல் நிரந்தர வேலை என்று ஒன்று வந்து விடும். நான் இருவருக்கமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்தும் இருக்கும். அதனால் குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் சிறப்பான பண்பு வந்து விடும்.

எதுவும் உங்கள் விருப்பமே!

Advertisment

30 வயது ஆனால் என்ன உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தேர்வு செய்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. மற்றவர்கள் என்ன சொன்னாலும் கடைசியில் உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்தையும் அனுபவிக்க போவது நீங்களே. ஆதலால் அதற்கான முடிவை தெளிவாக நீங்கள் எடுங்கள். உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க உங்களுக்கு 100% சுதந்திரம் இருக்கிறது. உங்களைப் பற்றி உங்களுக்கு தான் தெரியும். எனவே உங்களால் முடிந்ததை உங்களுக்கு பிடித்ததை செய்து நிம்மதியாக வாழுங்கள்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/newly-married-couples-say-goodbye-to-misunderstanding

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-silk-sarees

https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt

Advertisment



30
Advertisment