Advertisment

Silk saree(பட்டுப் புடவை) எப்படி Maintain செய்வது?

பட்டுப் புடவைகள் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் எத்தனை பட்டு புடவைகள் வாங்கினாலும் அதை எப்படி பராமரிப்பது என்ற குழப்பத்திலேயே பல பெண்கள் இருக்கின்றனர். உங்கள் சந்தேகங்களை போக்க இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்!

author-image
Pava S Mano
New Update
Silk saree maintenance

Image is used for representational purpose only

Silk saree(பட்டுப் புடவை) எப்படி Maintain செய்வது?

Advertisment

பட்டுப் புடவைக்கு என்று பெண்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்று soft silk, Raw silk, Jute silk என பல வகையில் Silk sarees இருக்கிறது. அதை நெய்யும் இடத்திலிருந்து வாங்குவதற்கு பல பெண்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்கின்றனர். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் பட்டுப் புடவை காலத்திற்கு ஏற்ப மெருகேறி வருகிறதே தவிர அதனின் மவுஸ் குறைவதே இல்லை. முன்பு இருந்ததை விட இன்று பல ஜவுளி கடைகள் வந்துவிட்டது. விதவிதமான புடவைகளும் வந்துவிட்டது. பட்டிலே பலவிதம் இருக்கிறது. பெரிய பெரிய கதாநாயகிகள் எல்லாம் பட்டுப் புடவை வைப்பதற்கு என்று தனி வீடு கட்டி வைத்துள்ளனர். ஆசையாக வாங்கிய பட்டு புடவைகள் எல்லாம் சரியாக பராமரிக்காவிட்டால் பாழாகிவிடும். 

பட்டுப்புடவைகளை Maintain செய்வது எப்படி?

Silk saree maintenance

Advertisment
  • நீங்கள் பட்டுப் புடவையை கட்டிய பின் அதனை மடித்து சிறிது நேரம்  காய போடுங்கள். தயவுசெய்து உங்கள் பட்டுப் புடவைகளை தண்ணீரில் சுவைக்காதீர்கள். அப்படி கண்டிப்பாக பட்டுப் புடவைகளை துவைக்க வேண்டும் என்றால், dry cleaning செய்து விடுங்கள். 

  • பட்டுப் புடவைகளை வெயிலில் காய வைக்காதீர்கள். இதனால் நிறம் வெளுக்க வாய்ப்பு உள்ளது.

  • உங்கள் பட்டுப்புடவைகளை மற்ற புடவைகளுடன் சேர்த்து வைக்காதீர்கள். மற்ற புடவைகளுடன் ஏற்படும் உராய்வின் காரணத்தால் பட்டு சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அதனால் பட்டுப் புடவைகளை மஸ்லின் துணிகளில் மடித்தோ அல்லது ரெடிமேடாக விற்கப்படும் சாரி பேகிலோ வைத்து அலமாரிக்குள் வையுங்கள்.

  • பட்டுப் புடவைகளை நீண்ட நாட்களுக்கு அலமாரியில் வைத்திருந்தால் அது தேய்ந்து போக வாய்ப்பிருக்கிறது. எனவே வரும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதனை காய வைத்து திரும்பவும் திருப்பி மடித்த அலமாரிக்குள் வைக்கவும்.

  • மடித்து வைப்பதை காட்டிலும் saree hangers மூலம் உங்கள் புடவையை மாட்டி வைப்பது மிகவும் சிறப்பாகும். மேலும் இரும்பாலான hangers ஐ வாங்காமல் பிளாஸ்டிக் ஆனதை வாங்குங்கள். ஏனென்றால் சில சமயம் இரும்பாலானது பட்டுடன் சேர்ந்து புடவையை சேதமடைய செய்யும்.

  • பட்டுப் புடவைகளை பிளாஸ்டிக் cover இல் வைக்காதீர்கள். இதனால் புடவையில் இருக்கும் ஜரிகை நூல் இருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • உங்கள் பட்டுப் புடவைகளை ஈரப்பதம் அதிகம் உள்ள செவிடர்களின் ஓரத்தில் இருக்கும் அலமாரியில் வைக்காதீர்கள். அப்படி இருந்தால் naphthalene balls போட்டு விடுங்கள்.

பட்டு புடவைகளை எப்படி அலமாரியில் வைப்பது:

  • நீங்கள் பட்டுப்புடவைகளை கட்டிய பின் அதை சற்று நேரம் காய வைத்து பின் பொறுமையாக மடித்து மஸ்லின் துணிகளிலோ அல்லது காட்டன் துணிகளிலோ வைத்து ஒரு ஒரு புடவையாக அடுக்கி வையுங்கள். மேலும் நீங்கள் புடவையை மடித்து வைப்பதை காட்டிலும் plastic hangers இல் மாட்டி வைக்கலாம்

Advertisment

கரையை நீக்குவது எப்படி?

Silk saree maintenance

  • தண்ணீரில் மறையக்கூடிய கரையாக இருந்தால்  பஞ்சு துணியில் சிறிது தண்ணீர் எடுத்து அதை கரை உள்ள பகுதியில் வைத்து தேய்த்து கரையை எடுத்து விடுங்கள். பின் அயன் செய்து விடுங்கள்.

  • எண்ணெய் கரையாக இருந்தால் dark color sarees இல் அசிட்டோன் (acetone) ஐ பஞ்சு துணியில் நனைத்த கரையுள்ள பகுதியில் இருந்து கரையை எடுத்து விடுங்கள்.

  • Light color sarees ஆக இருந்தால் talcum powder போட்டு கரையை நீக்கி விடுங்கள்.

  • தண்ணீரும் வினிகரும் ஒரே அளவு கலந்து கொள்ளுங்கள். பின் புடவையை கட்டும் பொழுது தெரியாத இடத்தில் சிறிதளவு இந்த கலவையை ஒரு டிராப் வையுங்கள். சிறிது நேரம் கழித்து உங்கள் புடவையில் ஏதேனும் நிறம் மாற்றம் உள்ளதா அல்லது ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா என்று கவனியுங்கள்.

  • இல்லையென்றால் ஒரு ஸ்பாஞ்சை அந்த கலவையில் வைத்து உங்கள் புடவையில் எங்கு கரையுள்ளதோ அங்கு மெதுவாக வையுங்கள். 

  • பத்து நிமிடம் கழித்து மிதமான சூடு உள்ள தண்ணீரில் பேபி ஷாம்பூ போட்டு கலந்து கொள்ளுங்கள்

  • இவை அனைத்தும் வேலை செய்யவில்லை என்றால் கடைகளில் விற்கும் silk stain remover வாங்கி உபயோகித்து பாருங்கள்.

Advertisment

பட்டின் பாரம்பரியம் தொடர நம் வருங்கால சந்ததியினருக்கும் கலாச்சாரத்தை எடுத்து செல்ல பட்டுப்புடவைகளை பராமரிப்பதும் எப்படி என்று கற்றுக் கொள்வோம்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/why-household-chores-is-only-meant-for-women

Advertisment

https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife

https://tamil.shethepeople.tv/society/single-child-parenting-tips

https://tamil.shethepeople.tv/society/newly-married-couples-say-goodbye-to-misunderstanding

Advertisment



Silk saree
Advertisment