திருமணம் ஆன உடனே அனைவரும் கேட்கும் கேள்வி இருவரும் சண்டை போடாமல் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்பதுதான். கணவன் மனைவி உறவில் சண்டை வருவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் அதுவே பூகம்பம் ஏற்படும் அளவிற்கு பிரளயத்தை ஏற்படுத்தினால்? பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு ஏற்படும் சண்டையில் மூன்றாவது நபர் உள் வருவதால் அந்த சண்டை மீண்டும் அதிகரிக்கும். இப்படி பல காரணங்களால் கணவன் மனைவி உறவு வலுவிழக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான குழப்பத்தையும், சூழலையும் எப்படி சாமர்த்தியமாகவும், தெளிவாகவும் சமாளிப்பது என்பதை பார்க்கலாம்.
Communication:
திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி இருவரும் அவரவர் விருப்பத்தை தெளிவாக பேசி புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு இருவருக்குமான Space ஐ கொடுங்கள். அனைத்து உறவுகளுக்கும் communication என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உதாரணத்திற்கு, கொண்டு வாருங்கள் என்று சொல்வதற்கு பதில், கொன்று வாருங்கள் என தவறாக வார்த்தை சிந்தியதால் தான் கண்ணகியால் மதுரை எரிக்கப்பட்டது. முறையான communication பல குழப்பத்தை தவிர்க்கிறது. மேலும் இருவரையும் புரிந்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் பொழுது இருவருக்கும் இடையேயான புரிதல் அதிகம் ஆகிறது மற்றும் இது போன்ற குழப்பமான சூழல் தவிர்க்கப்படுகிறது.
சேர்ந்து முடிவு செய்யுங்கள்:
எந்த ஒரு முடிவாக இருந்தாலும் சரி, மனைவியும் தான் நினைத்ததை தான் நடக்க வேண்டும் என்று நினைக்காமலும், கணவன் தான் சொல்வதை தான் மனைவி கேட்க வேண்டும் என்று நினைக்காமலும் இருவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். உதாரணத்திற்கு இருவரும் வெளியே செல்ல இருக்கிறீர்கள் என்றால் இருவருக்கும் ஆன பிடித்த இடங்களை சேர்ந்து முடிவு செய்யுங்கள். இதன்மூலம் புரிதலும் வலுப்படும் மேலும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதனால் இருவருக்கும் ஒருவரின் மேல் மரியாதையும் நன்மதிப்பும் கூடும். பல குடும்பங்களில் மீனாட்சி ஆட்சியா? சிதம்பரம் ஆட்சியா? என்று பேசிக் கொண்டிருப்பர். மனைவியின் கை ஓங்கி இருந்தால் அந்த குடும்பத்தில் மீனாட்சி ஆட்சி என்று சொல்லுவர். அதே கணவனின் கை ஓங்கி இருந்தால் அந்த குடும்பத்தில் சிதம்பர ஆட்சி என்று சொல்லுவர். நான் சொல்லுவது, மீனாட்சி ஆட்சியும் வேண்டாம், சிதம்பர ஆட்சியும் வேண்டாம், அர்த்தநாரீஸ்வரர் ஆட்சி தான் சிறந்தது. எப்படி சிவன் பாதியாகவும், சக்தி பாதியாகவும் இருந்த ஒரே உருவமாக காட்சியளிக்கின்றனாரோ, அதேபோல் கணவனும் மனைவியும் சமமாக ஒருவரை ஒருவர் மதித்தும், அனுசரித்தும் வாழ வேண்டும்.
Equality தான் சிறந்தது:
பெரும்பாலான குடும்பங்களில் திருமணத்திற்குப் பிறகு எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் கணவர்களுக்கு சார்ந்தே உள்ளது. இதில் மனைவியின் சகிப்புத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் தனியாக இருந்துவிட்டால் தெரியாது. பெண் அவள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு வரும் பொழுது அங்கு அவள் சகித்துக் கொள்வது ஏராளம். இதனை சமம் செய்வதற்கு கணவன் மனைவிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இதனாலேயே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமணம் என்பது ஒரு பெரிய Commitment. அது வாழ்நாள் முழுவதும் தொடரும் பந்தமாக பார்க்கப்படுகிறது. Newly married couples ஆரம்பத்திலேயே இந்த புரிதலை உங்கள் உறவிற்கு நுழைத்து விட்டால், எந்த சண்டையும் வராது. அந்த உறவு செழிக்க இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டாலே, காதல் பூத்து, வாழ்க்கை ஓங்கும்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/why-household-chores-is-only-meant-for-women
https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow
https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage
https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship