Advertisment

Pimple/acne வருவதற்கு இதுதான் reason ஆ?

நான் எங்கேயாவது வெளியே செல்கிறோம் என்றால் போதும், அழைக்கா விருந்தாளியாக வந்து விடுவது இந்த Pimples. என்ன செய்தால் இதனை கட்டுப்படுத்த முடியும் ஏன் இப்படி வருகிறது என்று உங்களின் பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலளிக்கிறது!

author-image
Pava S Mano
New Update
Pimple/Acne

Image is used for representational purpose only

பெண்கள் தொடங்கி ஆண்கள் வரை அனைவரும் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிப்பது pimple ஐ எப்படி கட்டுப்படுத்துவது என்பதுதான். நம் முகத்தில் பருக்கள் நெற்றியில் தொடங்கி தாடை வரை எல்லா இடங்களிலும் வரும். ஆனால் எந்தெந்த இடத்தில் முகப்பரு வருகிறது என்பதை வைத்து நம் உடம்பில் ஏற்படும் பிரச்சனையை தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு நம் தாடை பகுதியில் அதாவது chin or jawline இல் முகப்பருக்கள் வந்தால் அது நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன் fluctuations ஐ குறிக்கும். இப்படி முகப்பரு வரும் பகுதியை வைத்து நம் உடம்பில் எதனால் ஏற்படும் பிரச்சனையால் வருகிறது என்பதை கண்டறியலாம்.

Advertisment

எதனால் pimple/acne வருகிறது?

Pimple/Acne

நம் முகத்தில் இருக்கும் பாக்டீரியா, அதிகமாக முகத்திலிருந்து என்னை வடிதல் மற்றும் இறந்த செல்கள் தான் முகப்பரு வருவதற்கான காரணம். முகப்பரு blackhead அல்லது Whitehead, pimples, cysts போன்ற பல வகைப்படும்.

Advertisment

பொதுவாக முகப்பரு வருவதற்கான காரணம் நாம் அதிகமாக hair மற்றும் skin care products ஐ மாற்றுவதனால், இல்லை நம் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நாம் அதிகப்படியான இனிப்பை எடுத்துக் கொண்டாலும் அது ஒரு காரணமாகும். சிலருக்கு பரம்பரையாகவே இது இருக்கும். மேலும் மன அழுத்தத்தின் காரணத்தால் கூட முகப்பரு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

Forehead acne/pimple- காரணங்கள்:

நம் தலைமுடியில் இருந்து வரும் என்னை நெற்றியில் படும்பொழுது அதுவே நெற்றியில் ஏற்படும் முகப்பருக்கான காரணமாகி விடுகிறது. தலைமுடியில் எப்படி எண்ணெய் சுரக்கும் என்றால் நாம் அடிக்கடி தலை முடியை சரியாக கழுவவில்லை என்றால் இது நடக்கும். அடிக்கடி ஷாம்பூ மாற்றுவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். மன அழுத்தமும் ஹார்மோன் மாற்றமும் நெற்றியில் முகப்பரு வருவதற்கான காரணம் ஆக இருக்கும்.

Advertisment

Cheeks:

Pimple/Acne

நம் கன்னத்தில் ஏற்படும் முகப்பரு, நாம் எந்த அளவுக்கு இனிப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ அதனை குறிக்கும். நாம் அதிகம் இனிப்பு எடுத்துக் கொள்கிறோம் என்றால் நம் கன்னங்களில் முகப்பரு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கன்னங்களில் முகப்பரு வராமல் தடுக்க அதிகப்படியான இனிப்பை எடுப்பதை தவிர்க்கவும்.

Advertisment

T-Zone:

Forehead, Chin மற்றும் nose இல் தான் அதிகமாக oily ஆக இருக்கும். இந்த இடங்களில் நீங்கள் முகப்பரு வருவதை கவனித்தீர்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் cosmetics தான். 

எப்படி கட்டுப்படுத்துவது?

Advertisment
  • முகப்பரு வருகிறது என்று அதிகப்படியாக எந்த ரசாயனம் கலந்த மருந்தையும் முகத்தில் தடவாதீர்கள்.

  • அடிக்கடி உங்கள் முகத்தை தொட்டுக் கொண்டே இருக்காதீர்கள்

  • முகப்பரு வந்தால் அதனை கைகளால் எடுக்காதீர்கள்

  • எப்பொழுது வெளியே சென்றாலும் sunscreen போட்டு செல்லுங்கள்

  • அடிக்கடி முகம் கழுவுங்கள்

  • தலை முடியை சரியாக பராமரியுங்கள்

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/no-more-loneliness-1378785

Advertisment

https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601

https://tamil.shethepeople.tv/health/weight-maintenance-tips-1362813

https://tamil.shethepeople.tv/health/7-yoga-poses-for-pcospcod-1345175





Pimple/Acne
Advertisment