Weight Maintenance கஷ்டமா?

Weight loss ஐ செய்துவிடும் மக்கள், weight Maintenance என்று வந்துவிட்டால் திணறுகிறார்கள். இதை எப்படி பராமரிப்பது, என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது என்பதையெல்லாம் சுருக்கமாக இக்கட்டுரை விளக்கியுள்ளது!

author-image
Pava S Mano
Sep 19, 2023 18:00 IST
Weight Maintenance

Image is used for representational purpose only

நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், உடல் எடையை குறைப்பது என்பது கஷ்டமே. ஆனால் அதே சமயம் உடல் எடையை பராமரிப்பது அதைவிட கஷ்டமே. உடம்பை குறைத்த பிறகு அதை எப்படி பராமரிப்பது என்பதற்கு சரியான ஆலோசனையை யாரும் தருவதில்லை. மிகவும் சிரமப்பட்டு எடையை குறைத்த நம்மால் அதே எடையை மூன்று மாதத்திற்கு மேல் தக்க வைத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த எடையை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் குறைத்து விடுகிறோம். ஆனால் இதே எடையை பராமரிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். இனி அந்த பயம் வேண்டாம்.

Advertisment

எதனால் உடல் எடை கூடுகிறது?

நம் உடல் எடையை குறைத்த பிறகு என்ன செய்வதென்று பலருக்கு தெரிவதில்லை. 80 சதவீத மக்களுக்கு உடல் எடையை குறைத்த பின் அதே இடையில் வாழ்நாள் முழுதும் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்கின்றனர். நம் உடம்பில் எடை ஏறுவதற்கு காரணம் கலோரிகளால் மட்டுமல்ல. நம் உடம்பில் பராமரிக்கப்படும் ஹார்மோன்களும் இதற்கு காரணம் தான். Stress மற்றும் Hormonal imbalance இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே நாம் சாப்பிடும் முறை என்பது மிகவும் முக்கியமாகும்.

வாழ்க்கை முறை மாற்றம்:

Advertisment

Weight Maintenance

நம் எடையை குறைப்பதற்கு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை நாம் செய்திருப்போம். அதே மாதிரி தான் எடையை பராமரிப்பதற்கும் சில விஷயத்தை பின்பற்ற வேண்டும்.

  •  ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவதை தவிர்த்து ஐந்து வேலையாக கொஞ்சமாக உணவை எடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால் நம் உடம்பில் இருக்கும் metabolism சரியாக வேலை செய்யும். ஆனால் உடல் எடை பராமரிக்கப்படும். 

  • உங்களுக்கு போதும் என்று தோன்றி விட்டால் உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். மீதி இருக்கிறது என்பதற்காக சாப்பிடாதீர்கள்.

  • தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது நம் உடம்பை எப்பொழுதும் hydrated ஆக உதவுகிறது

  • Healthy Snacks சாப்பிடுங்கள். பழங்கள் காய்கறிகள் மற்றும் சிறுதானியங்களால் ஆன உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • போதுமான அளவிற்கு தூங்குங்கள். நீங்கள் தினமும் 7 லிருந்து 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்படி தூங்கவில்லை என்றால் பசியை தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்க ஆரம்பித்து விடும். ஏதோ ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புகள் இருக்கிறது.

  • நீங்கள் மல்லிகை சாமான் வாங்கும் பொழுதே எதில் அதிகம் புரதச்சத்து இருக்கிறது என்று யோசித்து அதற்கு ஏற்ப வாங்குங்கள். அதிக கலோரிஸ் இருக்கின்ற உணவை தவிர்த்து விடுங்கள்.

Advertisment

Exercise Maintenance:

Weight Maintenance

உடல் அளவில் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளை குறைப்பதற்கும் உடல் பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். தினமும் 30 நிமிடத்திற்கு உடற்பயிற்சி செய்தாலே நம் உடம்பில் இருந்து வரும் வேர்வையின் மூலமாக உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் நீங்கிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தினமும் 30 லிருந்து 60 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை பராமரிப்பு சுலபமாக இருக்கும்.

Advertisment

Weight Maintenance சுலபமே, நீங்கள் நினைத்தால்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/7-yoga-poses-for-pcospcod-1345175

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731

https://tamil.shethepeople.tv/health/hair-wash-mistakes

https://tamil.shethepeople.tv/health/nayanthara-beauty-secret

 

#weight Maintenance