ஆண் பிள்ளைகளுக்கு இதை கண்டிப்பா கற்றுக்கொடுங்கள்! (Male child Parenting)

ஆண் பிள்ளைகள் என்றாலே இதை செய்யக்கூடாது, பெண் பிள்ளைகள் தான் இதை செய்ய வேண்டும் என்று இன்றும் இருக்கும் இந்த பாகுபாட்டை பெற்றோர்களாகிய நம்மால் மட்டுமே மாற்ற முடியும்.நாம் அனுபவிக்கும் இந்த பாலின பாகுபாட்டை நாளை நம் குழந்தைகள் அனுபவிக்காமல் இருக்க வேண்டும்

author-image
Pava S Mano
Sep 16, 2023 16:11 IST
Male child parenting

Image is used for representational purpose only

"உனக்கென பா சிங்கம் மாதிரி பையன பெத்து வச்சிருக்க" என்று ஆண் பிள்ளைகளை பெற்றவர்களை பார்த்து இந்த சமூகம் எப்பொழுதும் கூறும் வார்த்தை இதுதான். ஆனால் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது என்பது தெரியும். இன்று பல இளம் தலைமுறை னர் தங்கள் வேலைகளுக்காக வெளிநாடுகளில் சென்று தங்கி விடுகின்றனர். அதன் வாழ்க்கை முறை பிடித்து விடுவதால் அங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் பெற்றோரை அழைத்து செல்கின்றனர் ஆனால் சிலரோ பெற்றோரை தாய் நாட்டிலேயே விட்டுவிட்டு செல்கின்றன. கடைசியில் சிரமப்படுவது ஆண்களை பெற்ற பெற்றோர்களாக தான் இருக்கிறார்கள். இது சில சமயங்களில் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் நடக்கும். அது அவரவர் சூழலை பொறுத்து. பெண் பிள்ளைகளுக்கும் சரி ஆண் பிள்ளைகளுக்கும் சரி சிறு வயதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது "சமத்துவம்" தான்.

Advertisment

Feminism is Equality:

Male child parenting

சிறுவயதிலிருந்தே ஆண் பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு தேவையான சமையல் திறன், வீட்டை சுத்தமாக வைத்தல், பாத்திரங்களை கழுவுதல் மற்றும் துணிகளை துவைத்தல் போன்ற life skills ஐ கற்றுக்கொடுங்கள். அதுவே அவர்கள் மனதில் சிறு வயதில் இருந்தே பழகிவிடும். எனவே இந்த வேலைகளை மனைவிதான் பார்க்க வேண்டும் அல்லது இந்த வேலை எல்லாம் பெண்களுக்கு உகந்த வேலை என்ற எண்ணத்தை சிறுவயதில் இருந்தே கலைத்து விடலாம். ஒரு மகனின் ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கம் என்பது பெற்றோர்களின் வளர்ப்பில் தான் இருக்கிறது. இவை அனைத்தையும் உங்கள் மகனுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தான், உங்கள் கணவனால் நீங்கள் படும் வேதனைகளை நாளை இன்னொரு பெண் அனுபவிக்க மாட்டாள்.

Advertisment

Cry whenever you want to:

"ஆம்பள பிள்ளை கண்ண கசக்க கூடாது" என்று சொல்லி சொல்லி ஆண்களை மிகவும் பாசம் அற்றவர்களாக இச்சமூகம் மாற்றிவிட்டது. அவர் படும் வேதனைகளை வெளியில் சொல்ல முடியாமல் அழுகவும் முடியாமல் மனதிற்குள் வைத்து புலுங்கியை அவரின் செயல்பாடுகள் வருங்காலத்தில் மாறிவிடுகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுக்கு  பெண்கள் தான் அழுகையை வெளிக்காட்டுவார்கள், அதற்கான சுதந்திரம் அவர்களுக்குத்தான் இருக்கிறது, ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி வளர்ப்பதை நிறுத்துங்கள். ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் இருவரும் மனித பிறவி தான் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். 

Gender centric work என்பது கிடையாது:

Advertisment

Male child parenting

இந்த சமூகத்தில் சமையல் என்பது பெண்களுக்கு உகந்த வேலை என்று ஒரு கருத்து இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமைத்தால் தான் நாம் சாப்பிட முடியும். சமையல் என்பது நம் வாழ்க்கைக்கு தேவையான ஒரு திறனை ஆகும். அது பாலின பாகுபாட்டை கொண்ட ஒரு செயல் அல்ல. யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்று உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். மேலும் உங்கள் குழந்தை என்ன தொழில் செய்தாலும் அதனை ஊக்கு வையுங்கள். இப்பொழுதெல்லாம் புடவை கட்டுவதற்கு என இருக்கும் saree stylist இல் பல பேர் ஆண்களாக தான் இருக்கிறார்கள். எனவே புடவை கட்டுவது கூட பெண்களின் வேலை இல்லை அதுவும் அனைவருக்கும் பொதுவான வேலை என்று மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அன்பை வெளிக்காட்டுவது பெண்களாக தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. அன்பையும் காதலையும் வெளிப்படுத்தினால் மட்டுமே உணர முடியும். நீங்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் உங்கள் அன்பிற்காக ஏங்கியே மற்றவர்கள் காயப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எந்த உணர்ச்சியையும் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். Parenting தான் அனைத்தையும் மாற்றும். அன்பு தானே எல்லாம்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/dangers-of-succulent-plants-1346930

https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974

https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife

https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30

#parenting