பெண்களின் சந்தோஷத்தை பொருத்தவரை அது திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று பிரிக்கலாம். சில பெண்களுக்கு திருமணத்திற்கு முன் அவர்களின் பெற்றோரின் நிழலிலேயே எந்த சிரமமும் தெரியாமல் வளர்ந்திருப்பர். இப்படியும் சொல்லலாம் அவர்களை சிரமப்படுத்தாமல் அவர்கள் பெற்றோர்கள் வளர்த்திருக்கலாம். சில பெண்களுக்கு அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரத்தை அவர்கள் பெற்றோர்கள் கொடுத்திருப்பதால் எப்படி வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு என ஒரு அறிவு இருக்கும். ஆனால் முதலில் கூறப்பட்ட வகையான பெண்களுக்கு திருமணத்திற்கு பின் அவர்களுடைய வாழ்க்கையில் நன்றாக இருந்துவிட்டால் பரவாயில்லை ஆனால் அதன் பின் அவர்கள் அனுபவிக்கும் சிறு சிறு வேதனைகளும் அவர்களின் சந்தோஷத்தை பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சந்தோஷம் இன்மைக்கான காரணம்!
ஆண்களை விட பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் மனநல பிரச்சனைகள், மனதிற்குள் இருக்கும் கோவங்கள் மற்றும் தனிமை தான் என்று ஆய்வுகள் கூறுகின்றது. என்னதான் பெண்களுக்கென சுதந்திரம் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் வந்துவிட்டாலும், சமூகத்தில் இன்னும் ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், சுதந்திரமும் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதை அவர்களுக்கு ஒரு மனநலப் பிரச்சினையாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பெண்களுக்கு பெண்களே உறுதுணையாக இருப்பதும் குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு, தன் பெண் குழந்தையை புரிந்து கொள்ளாத தாயும், தன் சகோதரியை புரிந்து கொள்ளாத தங்கையும், தன் மருமகளை புரிந்து கொள்ளாத மாமியாரும் இருந்து தான் வருகிறார்கள். இவை அனைத்தையும் தாண்டி ஆண்களால் மற்றும் ஆண் ஆதிக்கத்தால் அவர்களின் தனித்துவத்தை இழக்க நேரிடுகிறார்கள். இதுவே பெண்களின் சந்தோஷமின்மைக்கு காரணமாக இருந்து வருகிறது.
சிறந்த நோக்கமே, அளவில்லா ஆனந்தம்!
என்றைக்கும் நம் நோக்கத்தை கருத்தில் கொண்டு அதற்கான வழியை தேடிச் செல்வதால் நம் சந்தோஷத்தை நாமே தேடிக் கொள்ள முடியும். ஆம்! Happy woman ஆக நீங்கள் மாற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தேட ஆரம்பியுங்கள். பெண் என்றால் பிறந்து வளர்ந்த பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்பவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இந்த சமூகத்தில் ஆழமாக பதிந்து விட்டது. அதை மாற்றுவது நம் தலைமுறையினரால் மட்டுமே முடியும். உங்கள் நோக்கம் பெரிது என்றால் அதை அடைவதற்கான வழியைத் தேடி உங்களை நீங்கள் ஒவ்வொரு படியை எட்டும் பொழுதும் சந்தோஷப்படுத்திக் கொள்ளலாம். நான் எப்பொழுதும் என் சந்தோஷத்திற்காக மற்றொருவரை தான் நாடி இருப்பேன். ஆனால் காலங்கள் மாற மாற என் தோழி எனக்கு சொன்ன ஒரே ஒரு கருத்து தான் என் மனதில் நின்று கொண்டிருக்கிறது. "உன் சந்தோஷத்திற்காக யாரையும் எதிர்பார்க்காதே, உன் சந்தோஷத்திற்கான அளவை நீ தான் முடிவு செய்ய வேண்டும்" என்று நான் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் சொன்னது இன்றும் என் மனதில் ஆழமாக இருக்கிறது. எனவே நம் சந்தோஷம் என்றும் மற்றவர்களை பொறுத்து இருக்கக் கூடாது. அது நாம் செய்யும் செயலில் எவ்வளவு திருப்தி அடைகிறோம் மற்றும் மற்றவர்களை எப்படி நாம் சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
Only you can make yourself happy!
சமூகம் நமக்கு பிறந்ததிலிருந்தே சொல்லிக் கொடுப்பது, மற்றவர்களுக்காக, மற்றவர்களை நினைத்து தான் பெண்ணானவள் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும் என்று. ஆனால் மற்றவர்களைப் பற்றி யோசிக்கும் முன் முதலில் நீங்கள் உங்களைப் பற்றி யோசியுங்கள். மற்றவர்கள் உங்களை காயப்படுத்தும் பொழுது, அவர்களிடமிருந்து விலகி இருங்கள். ஏதோ ஒன்று உங்களுக்கு அழுத்தமாக இருக்கிறது என்றால் அமைதியாக இருக்காமல் யாரோ ஒருவரிடம் ஆவது பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் மட்டும் தான் நிற்க முடியும். யாரும் உங்களுக்காக நிற்க மாட்டார்கள். உங்கள் கனவை அடைய என்ன வழி என்பதை நோக்கி அதற்கான படிகளை எடுத்து வையுங்கள். உங்கள் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவரை தேர்ந்தெடுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் உங்களை சுற்றி இருப்பவர்களையும் உங்களால் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/say-no-to-breakup-1344727
https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife
https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30
https://tamil.shethepeople.tv/society/newly-married-couples-say-goodbye-to-misunderstanding