Advertisment

Breakup ஆகாம இருக்க என்ன செய்ய வேண்டும்?

Breakup என்பது இப்பொழுது ஒரு சாதாரணமாக வார்த்தையாக மாறிவிட்டது. எந்த காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. அதற்கு காரணம் இந்த தலைமுறையினரிடம் இல்லாமல் இருக்கும் பொறுமை மற்றும் நேர்மைதான். Breakup வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை படியுங்கள்!

author-image
Pava S Mano
New Update
Breakup

Image is used for representational purpose only

நம் பெற்றோர்கள் காலத்தில் காதல் என்றாலே மிகவும் தவறான வார்த்தையாக பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுதும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இருந்தார்கள். இப்பொழுது யாரை வேண்டுமானாலும் காதல் செய்யலாம். ஆனால் கடைசி வரை அந்த காதல் கல்யாணத்தில் முடிகிறதா என்பது தான் கேள்வி. பல காரணங்களால் காதல் வெற்றி அடைவதில்லை. அன்று பல காதல் தோல்வியடைவதற்கான காரணம் சமூகம், பெற்றோர்கள் மற்றும் ஜாதி போன்றவைகளாக இருந்தது. ஆனால் இன்று காதலை களைப்பதற்கு மூன்றாவதாக ஒரு நபர் வேண்டுமென்று அவசியமே இல்லை. ஏனென்றால் அவர்களே புரிதல் இல்லாமல் breakup செய்து விடுகிறார்கள். இப்படித்தான் பல காதல் என்று தோல்வி அடைகிறது.

Advertisment

தோல்விக்கான காரணம் என்ன?

Breakup

பார்த்தவுடனே காதல், பார்க்காமல் காதல் என்று பல விதத்தில் காதல் இருந்தாலும் இருவருக்கான புரிதல் என்பது தான் முக்கியமான ஒன்று. இன்று அனைத்தும் instant இல் கிடைப்பது போல் காதலும் விரைவில் கிடைத்து விடுகிறது. அன்று ஒருவரை பார்த்து அவர்கள் பின்னாலேயே அலைந்து அவர்களிடம் பேசுவதற்குள் ஒரு வருடம் முடிந்து விடும். ஆனால் இன்று instagram id தெரிந்தால் போதும் உடனே இருவரும் chat செய்து கொள்கின்றனர். எவ்வளவு விரைவாக காதல் மலர்கிறதோ அவ்வளவு விரைவாக காதல் முடிந்து விடுகிறது. இதற்கு காரணம் இந்த தலைமுறையினரிடம் இல்லாமல் இருக்கும் patience தான். இருவருக்குமான private space ஐ அனுமதித்து அவர்களுக்கான சுயமரியாதையை கொடுப்பதால் அந்த காதல் நீண்ட நாள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

Advertisment

என்ன செய்ய வேண்டும்:

Breakup

காதலிக்க இருவருக்குமான சிந்தனை, சுதந்திரம் மற்றும் சுயமரியாதை என்பது மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் வளர்ந்த விதம் வேறு, எனவே இருவருக்கும் ஆன சிந்தனையும் செயலும் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள். இந்த சிந்தனை ஒற்றுமையாக இல்லாவிட்டால் வருங்காலத்தில் பல பிரச்சனைகள் வருவதற்கான காரணம் உண்டு. மேலும் நீங்கள் காதலிக்கும் பொழுது பாதுகாப்பாக உணர்கிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதேனும் அசோகரிம் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிகிறதா என்று பாருங்கள். முடியும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்றால் பிரச்சனை இல்லை. ஒரு ஒருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு உங்கள் காதலி திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அவளை அதற்கான சுதந்திரத்தை அனுபவிக்க விடுங்கள். மேலும் யாரையும் கட்டுப்படுத்த கூடாது. காலம் முழுவதும் காதல் வாழ வேண்டும் என்றால் இருவருக்கும் இடையேயான romance மற்றும் chemistry மிகவும் முக்கியமாகும். அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Breakup  செய்யலாமா?

காதலில் இருவரும் சேர்ந்து பழகும் பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இருவருக்குமான கருத்து வேறுபாடு வரும் பொழுது தான் அதன் பிரச்சினை பெரிதாக. எந்த ஒரு நபரும் தவறு செய்யாமல் இருக்க மாட்டார்கள். தவறு செய்வது மனித இயல்பாகும். ஆனால் சூழல் என்று ஒன்று இருக்கிறது. உங்களின் தேவையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அந்த உறவு இருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. மேலும் toxic relationship என்று உங்களுக்கு பட்டு விட்டால் உடனே அந்த உறவில் இருந்து வெளியே வருவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறது. காதலிக்கலாம், ஆனால் அது காயப்படுத்தாமல் இருக்கும் வரை!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt

https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage

 

Breakup
Advertisment