Advertisment

கணவன், மனைவி Quality time Spend பண்ணுவது எப்படி?

கணவன் மனைவியிடம் முக்கியமான பிரச்சனை வருவதற்கான காரணமே Quality time செலவிடாமல் இருப்பது தான். திருமணத்திற்கு முன் எனக்காக அவ்வளவு நேரம் செலவிடுவார் ஆனால் திருமணத்திற்கு பின் அவர் அப்படி செய்வதில்லை என்பதே ஒவ்வொரு மனைவியின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

author-image
Pava S Mano
New Update
Quality time

Image is used for representational purpose only

திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கான நேரத்தை கட்டாயமாக ஒதுக்குவார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கு முதல் உரிமை கொடுக்காமல் அந்தப் பெண் இருக்கோ அந்த ஆண் இருக்கோ முதல் உரிமை கொடுக்கப்பட்டு அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவோம். ஆனால் திருமணம் முடிந்த பிறகு பல கடமைகள் மற்றும் பொறுப்புகளின் காரணத்தால் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை தவிர்க்கிறோம். இது மனைவி வேலைக்கு செல்லும் பொழுது குறைவாகவே நடக்கிறது ஆனால் கணவன் வேலைக்கு செல்லும் பொழுது அவர்கள் வேலையைப் பற்றிய யோசனையை வைத்து குடும்பத்தை பார்ப்பதை மறந்து விடுகிறார்கள். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Advertisment

Communication is the best key:

Quality time

திருமணத்திற்கு முன்பே நாம் திருமணம் செய்த பிறகு எப்படி இருவருக்கும் ஆன நேரத்தை செலவிடப் போகிறோம் என்று முடிவு செய்யுங்கள். கணவன் மனைவி தனியாக இருக்கும் பட்சத்தில் இருவரும் வேலைக்கு சென்றால் இந்தப் பிரச்சனை குறைவாகவே இருக்கும். ஆனால் தனியாக இருக்கும் பொழுது, கணவன் வேலைக்குச் சென்று மனைவி வீட்டில் இருக்கும் பொழுது, காலை முதல் மாலை வரை கணவன் எப்பொழுது திரும்பி வருவார் என்று காத்துக் கொண்டிருக்கும் மனைவிக்காக, நீங்கள் வேலை முடிந்து வந்த உடனேயே செல்போனை பார்க்காமல், அன்றைய நாள் எப்படி சென்றது என்று மனைவியிடம் பேசுங்கள். மனைவிமார்களும் கணவன் வேலை முடித்து வந்த பிறகு சிறிது நேரம் அவர்களுக்கென ஒரு me time இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் பேசவில்லை என்ற வருத்தப்படாமல் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். கணவன்மார்களும் உங்களுடைய தனிப்பட்ட நேரத்தை செலவிட்ட பிறகு உங்கள் மனைவிக்கான நேரத்தை ஒதுக்குங்கள். 

Advertisment

கூட்டுக் குடும்பத்தில் Quality time:

தனியாக இருக்கும் பொழுது இருவரும் அவர்களுடைய Private space ஐ நன்கு புரிந்து நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பொழுது கணவனும் சரி மனைவியும் சரி குடும்பத்தை பார்த்த பிறகு தான் இருவருக்கும் ஆன நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி இருவருக்குமான நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்கள் மனைவி அவளுடைய குடும்பத்தை விட்டு தான் உங்களுடைய குடும்பத்திற்கு வந்து, உங்கள் குடும்பத்தையும் பார்த்து பின்பு உங்களையும் கவனித்துக் கொள்கிறார் என்பதை மனதில் கொண்டு அவளின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுங்கள். 

எப்படி Quality time Spend பண்ணுவது?

Advertisment

Quality time

நீங்கள் இருவரும் தனியே இருக்கும் சமயத்தில் உங்கள் வருங்காலத்திற்கு என்னென்ன தேவை என்பதை பேசி தெளிவாக முடிவு எடுங்கள். பின்பு அந்த ஒரு வாரத்தில் உங்களுக்கு ஏதேனும் சண்டை வந்திருந்தால் அப்பொழுது இருவரும் நடந்து கொண்ட விதத்தை பொறுமையாக ஆராய்ந்து உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். இதனால் ஒருவரை ஒருவர் emotional ஆக புரிந்து கொள்ள முடியும். மேலும் physical bond ஐ காட்டிலும் emotional bond மிகவும் முக்கியமானதாகும். Quality time இல் இருவரும் வெளியே சென்று ஒருவருக்கு ஒருவர் பிடித்ததை செய்து பாருங்கள். உதாரணத்திற்கு எனக்கு Adventure செய்ய பிடிக்கும், இதனால் நான் adventurous ஆக செய்யும் அனைத்து செயல்களுக்கும் என் கணவர் என்கூட இருப்பார். என் கணவருக்கு Hills Driving மிகவும் பிடிக்கும், எனவே நாங்கள் இருவரும் அடிக்கடி அருகில் இருக்கும் Ooty சென்று வருவோம். இருவரும் அவரவர் விருப்பத்தை புரிந்து அதற்கேற்ப நடந்து கொண்டாலே கணவன் மனைவி பிரச்சினை என்பது இருக்கவே இருக்காது!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/newly-married-couples-say-goodbye-to-misunderstanding

https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow

https://tamil.shethepeople.tv/society/stress-relief-tips-for-housewife

 

Quality time
Advertisment