Advertisment

How to fall asleep fast?

இரவில் தூங்காதவர்களை எல்லாம் Batman என்று சொல்லி உசுப்பேத்திக் கொண்டுள்ளோம். ஆனால் இதனால் வருங்காலத்தில் வரும் பிரச்சனைகளை பேச நான் மறந்துவிடுகிறோம். தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன மற்றும் சுலபமான தூக்கத்தை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.

author-image
Pava S Mano
New Update
Sleep

Image is used for representational purpose only

நம் உடலும் மனமும் எந்த அளவிற்கு Relax ஆக இருக்கிறதோ அந்த அளவிற்கு தூக்கம் எளிதாக வந்துவிடும். நீங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளும், உங்களின் வாழ்க்கை முறையும் மற்றும் பழக்க வழக்கங்களும் உங்கள் sleep pattern ஐ பாதிக்கும். நம் மனதை அமைதிப்படுத்துவதற்கு மற்றும் உடம்பின் அனைத்து செயல்பாட்டிற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும். இன்று பலருக்கு sleeplessness பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வேலை காரணமாகவும் பல பிரச்சனைகளை யோசித்து மன அழுத்தத்தின் காரணமாகவும் இன்று நிறைய பேர் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். செல்போன் பயன்படுத்துவது கூட இன்று தூக்கமின்மைக்கான ஒரு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதுவும் கொரோனா வந்த பின்பு, அனைவரின் screen time அதிகமாக இருக்கிறது. இதுவும் தூக்கமின்மைக்கான ஒரு காரணமாக கருதப்படுகிறது. படித்த உடனே நிம்மதியாக தூங்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பின்பற்றுங்கள்.

Advertisment

விருப்பமான பாடலை கேளுங்கள்:

Sleep

நீங்கள் தூங்கும் இடம் மிகவும் சத்தம் நிறைந்ததாக இருந்தால் கூட தூங்குவதற்கு சிரமமாக இருக்கலாம். ஏதேனும் வெளிப்புற சத்தத்தை கேட்டால் கூட உங்கள் தூக்கம் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்களுக்கு பிடித்த பாடலை ஒரு playlist ஆக தயாரித்து தினமும் தூங்குவதற்கு முன் பத்திலிருந்து 20 நிமிடம் வரை கேளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் மனதை அமைதி படுத்தக்கூடிய ஏதேனும் உரையாடலை கூட கேட்கலாம். உதாரணத்திற்கு, Spotify இல் நிறைய podcasts இருக்கிறது. அதைக் கேட்கலாம். இல்லையென்றால் ஏதேனும் கதை கூட கேட்டு உறங்கலாம். சிறுவயதில் இருந்தே எனக்கு கதை கேட்டு பின் உறங்கும் பழக்கம் இருக்கிறது. அப்பொழுது எனக்கு என் அப்பா கதை சொல்வார். பின் கல்லூரிக்கு சென்ற பிறகு youtube இல் ஏதேனும் ஒரு கதையை போட்டுவிட்டு உறங்குவேன். இப்படி செய்வதால் நாம் தினசரி வாழ்வில் நடக்கும் பிரச்சனையை யோசிப்பதில் இருந்து மனதை divert செய்கிறோம். எனவே, தூக்கம் சுலபமாக வந்துவிடும்.

Advertisment

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

நீங்கள் படுத்த பிறகு, உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்வது போல் கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் வெளியில் செல்ல விருப்பப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எப்படி தயார் ஆவீர்கள் உங்கள் பெற்றோர்களிடமிருந்து எப்படி அனுமதி பெறுவீர்கள், நீங்கள் செல்லவிருக்கும் இடம் எப்படி இருக்கும், நீங்கள் அங்கு சென்றால் என்னென்ன செய்யப் போகிறீர்கள், அங்கு என்ன விதமான ஆடைகள் அணிய போகிறீர்கள், உங்கள் நண்பர்களுடன்  சேர்ந்து எப்படி சந்தோஷமாக இருக்க போகிறீர்கள், என்ன விதமான உணவுகளை உட்கொள்ளப் போகிறீர்கள், உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின் உணர்ச்சி வெளிப்பாடு எப்படி இருக்கும், என்ன விதமான photos எடுக்கப் போகிறீர்கள், உங்கள் சந்தோஷத்தை எப்படி பகிர்ந்து கொள்ள போகிறீர்கள், யாரிடம் பகிர்ந்து கொள்ள போகிறீர்கள் என்பதை பற்றிய கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு imagery soundtrack நிறைய online இல் இருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் நாம் ஏதோ ஒரு விஷயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் தூக்கம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிலருக்கு புத்தகம் படித்தால் தூக்கம் வந்துவிடும் என்பர். அதையும் கூட நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

உடற்பயிற்சி மற்றும் தியானம்:

Advertisment

Sleep

இப்பொழுது நிறைய பேர் உடல் ரீதியான உழைப்பை செலுத்துவது இல்லை. அவர்கள் அமர்ந்தே வேலை செய்வதால் நிறைய உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறார்கள். இதனால் கூட தூக்கம் பாதிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. என்ன வேலை இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது மிகவும் முக்கியமாகும். இதனால் நம் உடம்பு relax ஆவது மட்டுமில்லாமல் மன அமைதியும் கிடைக்கிறது. முடிந்த அளவிற்கு தினமும் தியானம் செய்வதை ஒரு பழக்கமாக வைத்திருங்கள். உங்கள் படித்த உடனே பத்து நிமிடத்திற்குள் தூங்கி விடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு தூக்கமின்மை இல்லை என்று சொல்லலாம். அதை அந்த நேரத்தை தாண்டி செல்லும்பொழுது அது தூக்கமின்மைக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். தூங்கும் பொழுது எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்குவதன் மூலம் உடலில் எந்த பிரச்சனைகளும் வராமல் இருக்கும். முடிந்த அளவிற்கு தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமாகும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/8-things-you-should-have-in-your-handbag-1377354

https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923

https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974

 

sleeplessness
Advertisment