Advertisment

இந்த 8 things-ஐ கண்டிப்பாக Handbag இல் வைக்க மறந்துறாதீங்க!

Handbag என்றாலே அதில் Snacks, Chocolates, makeup kit போன்றவற்றை தான் அதிகமாக வைத்திருப்போம். ஆனால் அதைத் தாண்டி நம் பாதுகாப்பிற்காகவும், அவசரத்திற்காகவும் தேவையான சில பொருட்களை கண்டிப்பாக நம் கைப்பையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

author-image
Pava S Mano
New Update
Handbag

Image is used for representational purpose only

பெண்கள் எங்கு சென்றாலும் hand bag ஐ எடுத்து செல்ல மறப்பதே இல்லை. நமக்கு தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்து செல்வதன் மூலம் நாம் செல்லும் இடத்தில் இருந்து எதையும் தேடி அலைவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த  பொருட்களை நீங்கள் கண்டிப்பாக உங்கள் handbag இல் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அலுவலகத்திற்கு அல்லது வெளியில் வேலைக்கு செல்வோர் இதனை வைத்திருப்பதால் உங்கள் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லதாகும்.

Advertisment
  • Power Bank- பவர் பேங்க் மறக்காமல் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எப்பொழுது உங்கள் மொபைல் சார்ஜ் கம்மியாகும் என்று உங்களுக்கு தெரியாது. சிரமமான சூழலில் சார்ஜ் இல்லை என்றால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும். எனவே பவர் பேங்க் ஐ எப்பொழுதும் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • Pocket Knife மற்றும் Pepper Spray- இது கண்டிப்பாக உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எதிர்பாராத சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும் போது, இரவு நேரங்களில் நீங்கள் அதிகம் வெளியில் சென்று வருபவர்களாக இருப்பீர்கள் ஆனால் இது கண்டிப்பாக தேவை. தற்காப்பிற்கு இது மிகவும் அவசியம்.

  • Tide to go Stain remover Pen- இதை நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஆப்களில் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகத்திலோ அல்லது எங்காவது உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் பொழுது உங்கள் ஆடைகளில் ஏதேனும் கறை பட்டால் இதை வைத்து அந்தக் கறைகளை உடனடியாக நீங்கள் சரி செய்து விடலாம். நாள் முழுவதும் அந்த கரையுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.Handbag

  • Compact First aid kit - இந்த முதலுதவி கிட்டில் உங்களுக்கு தேவையான band aid, mini antiseptic மற்றும் cotton கண்டிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர உங்களுக்கு ஏதேனும் medical conditions இருந்தால் அதற்கேற்ப மருந்துகளையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

  • Sanitary Pads, Tampons- பெண்களைப் பொறுத்தவரை எந்த நேரமும் வேண்டுமானாலும் தேவைப்படுவது இவைகள் தான். இதனை எப்பொழுதும் ஒரு mini purse இல் வைத்து உங்கள் கைப்பையில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம் இல்லை மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் கொடுத்த உதவலாம்.Handbag

  • Sunscreen மற்றும் facial Spray- நம் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே, நம் கைப்பையில் பேசியல் ஸ்பிரே வைத்துக் கொள்வதன் மூலம் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். மேலும் முகம் எப்பொழுதும் வாடாமல் இருக்கும்.

  • Water bottle- நம் முகத்திற்கு எப்படி புத்துணர்ச்சி தேவையோ அதே போல் நம் உடம்பிற்கு புத்துணர்ச்சியை தருவது நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் தான். சராசரியாக ஒரு நாளைக்கு 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நாம் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான பாட்டிலை கைப்பையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

  • Compact Umbrella- இன்றைய காலத்தில்  எப்பொழுது வெயில் அடிக்கிறது எப்பொழுது மழை பெய்கிறது என்று தெரிவதில்லை. எனவே இரண்டிற்கும் பொதுவாக உங்கள் கைப்பையில் குடையை வைத்திருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்.

 இந்த 8 பொருட்களை கண்டிப்பாக நீங்கள் கைப்பையில் வைத்து எங்கு வேண்டுமானாலும் தைரியமாக செல்லலாம்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923

https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731

https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974

https://tamil.shethepeople.tv/news/how-to-improve-work-life-balance

 

Handbag
Advertisment