Advertisment

Work-Life Balance எப்படி மேம்படுத்துவது?

"நான் வேலைக்கு போறேன் பா, குடும்பத்து கூட எல்லாம் time spend பண்ண நேரம் இல்ல" என்று சொல்பவரை நாம் தினமும் சந்தித்திருக்கிறோம். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது நம் அன்பிற்கு உள்ளோர் தான். எனவே சிறந்த work-life balance என்பது எல்லோருக்கும் நிச்சயமாக வேண்டும்.

author-image
Pava S Mano
New Update
Work Life Balance

Image is used for representational purpose only

தொழிலோ அல்லது வேலையோ செய்தால் மட்டுமே வாழ முடியும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த வேலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதற்காக நம் குடும்பத்தையும், நமக்கான நேரத்தையும் தியாகம் செய்யக்கூடாது. Work-Life Balance என்பது ஒருவரின் வேலைக்காகவும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகவும் சமமாக கொடுக்கப்படும் நேரமே ஆகும். ஒருவருக்கு குறைவான work life balance இருப்பதற்கான காரணம், நீண்ட நேரம் வேலை செய்வது, வேலையில் அதிக பொறுப்பு இருப்பது மற்றும் வீட்டில் முக்கிய பொறுப்பு இருப்பது போன்றதாகும். நம் வாழ்க்கையில் சிறந்த work-life balance இருப்பதால், அதிகமான நேர்மறை விளைவுகளும், குறைந்த மன அழுத்தமும், சந்தோஷமான வாழ்க்கையை உண்டாகும். எந்த ஒரு நிறுவனத்தில், employees கான work-life balance கடைபிடிக்கப்படுகிறது, அங்கு நேர்மையான மற்றும் சிறந்த உற்பத்தித்திறன் மிகுந்த பணியாளர்கள் இருப்பதற்கான வாய்ப்புண்டு. 

Advertisment

எப்படி இதனை கடைபிடிப்பது?

Work Life Balance

முதலில் உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும், என்பதற்காக உங்கள் வேலையை நீங்கள் பிடிக்காமல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் உங்களால் சந்தோஷமாகவும், இயல்பாகவும் இருக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையின் அனைத்து பகுதியையும் ரசிக்கவில்லை என்றாலும், காலையில் நீங்கள் எழும் பொழுது அந்த வேலையை செய்வதற்கான ஒரு புத்துணர்ச்சி உங்களிடமிருந்து வரவேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையை செய்யும்பொழுது, மனரீதியாகவும் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். இதனால் வேலையை முடித்து வந்த பிறகு உங்களுக்கென me-time மற்றும் குடும்பத்திற்கான நேரத்தையும் நிம்மதியாக செலவழிக்க முடியும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு நிம்மதியை தரவில்லை என்றால் அது சிறந்த work life balance ஐ கொடுக்காது.

Advertisment

ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்:

Work Life Balance

உங்களின் உடல், உணர்வு மற்றும் மன அமைதியை நீங்கள் அக்கரையாக பார்த்துக் கொள்ள வேண்டும். Anxiety மற்றும் depression  வருவதற்கான காரணம் சரியான work life balance இல்லாததால் தான். சில சமயங்களில் அதிக வேலையின் காரணமாக உங்கள் உடம்பு மிகவும் சோர்ந்து விடும். இதனால் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அதனால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை யோசியுங்கள். தினமும் தியானம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மேலும் உங்கள் தினசரி வாழ்வில் இருந்து (daily routine) விடுபட, ஏதாவது ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். இதனால் உங்கள் மனம் புது யோசனைகளை உங்களுக்கு கொடுக்கும். 

Advertisment

Vacation செல்லுங்கள்:

சில நாட்களுக்கு உங்கள் வேலையை நிறுத்தி வைத்து உங்களுக்கென ஒரு உடல் மட்டும் மனப்புத்துணர்ச்சியை அதிகரிக்க எங்காவது புது இடத்திற்கு சென்று வாருங்கள். இதன் மூலமாக உங்களின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து பயணிக்க மற்றும் சந்தோஷமாக இருக்க நேரம் கிடைக்கும். வேலைக்காக நம் குடும்பத்தை விட்டுக் கொடுக்க முடியாது. எனவே எவ்வளவு busy ஆன வேலையாக இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் கொடுக்கும் நேரத்தை சரியாக கொடுத்து விடுங்கள். ஏனென்றால் அவர்கள் தான் உங்களுடன் நிலையாக இருப்பவர்கள். மேலும் உங்களின் நேரத்திற்காக அவர்கள் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பர். இந்த நேரத்தில் தான் இந்த வேலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து, அந்த நேரத்தில் அந்த வேலையை முடித்துவிட்டு, மீதி உள்ள நேரத்தில் வேலையைப் பற்றி யோசனையை விடுங்கள். Quality time குடும்பத்தினருடன் மிகவும் முக்கியம்.

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி work life balance என்பது சரியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சிறந்த உறவை மேம்படுத்த இது மிகவும் முக்கியமாகும்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt

Advertisment

https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30

https://tamil.shethepeople.tv/society/be-careful-when-you-have-a-girl-child

 

Work-Life Balance
Advertisment