Inferiority complex என்பது ஒருவர் அவர்களின் மதிப்பை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களின் மேலே சந்தேகம் குறைந்த சுயமதிப்பு போன்றவற்றை வளர்த்துக் கொள்வது தான். தெரிந்தோ தெரியாமலோ நம்மை நாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். இதனாலேயே மற்றவர்களை காட்டிலும் நாம் குறைவாக இருக்கிறோம் அல்லது மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி பொறாமை உணர்வையும் தாழ்மை உணர்வையும் வளர்த்துக் கொள்கிறோம். இந்த உணர்வை நாம் தொடர்ந்து நம் உறவு கொள் ரித்துக் கொண்டே இருந்தால் நம் ஒழுக்கத்தில் மாற்றங்கள் வரக்கூடும். எப்பொழுதும் தாழ்வு மனப்பான்மை என்பது நம்மை அறியாமல் நம்மை ஒட்டிக் கொள்வதுதான். இதனைப் போக்க என்ன வழி?
எப்படி தாழ்வு மனப்பான்மை உருவாகிறது?
நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களின் வளர்ச்சியை எண்ணி நமக்குள்ளே வளர்ந்து விடும் எண்ணம் தான் இந்த தாழ்வு மனப்பான்மை என்பது. நம்மளுக்கு தேவையான ஏதோ ஒன்று நம்மிடம் இல்லாத பொழுது அதைவிட அதிகமாக அது மற்றவர்களிடம் இருக்கும் பொழுது அதை எண்ணி வரும் ஒரு பொறாமைத்தனம் கூட தாழ்வு மனப்பான்மை என்று சொல்லலாம். தாழ்வு மனப்பான்மை உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று, நம் பெற்றோர்கள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அசிங்கப்படுத்துவது மற்றும் பள்ளிகளில் கல்லூரிகளில் நம் வெளித்தோற்றத்தை கிண்டல் செய்வது போன்ற விஷயங்கள் நம்மை தாழ்வு மனப்பான்மையாக உணர வைக்கிறது. மேலும் நாம் தோற்றுப் போன பிறகு மற்றவர்கள் நம்மை பேசும் பேச்சைக் கூட நாம் தாழ்வாக எடுத்துக் கொண்டால் அதுவும் இதற்கான காரணம்தான். நம் மதிப்பை நாமே உணராத இருக்கும்பொழுது தான் இந்த தாழ்வு மனப்பான்மை நம்மை ஆட்டிக் கொண்டிருக்கும்.
எதை தாழ்வு மனப்பான்மை என்று சொல்லலாம்:
-
நம்மில் இருக்கும் நம்பிக்கை குறைவு
-
மற்றவர்களிடம் கண்ணை பார்த்து பேசாமல் இருப்பது
-
மற்றவர்களிடம் இருந்து தள்ளியே இருப்பது
-
நம்மை மதிப்பற்றவர்களாக உணர்வது
-
Criticism ஐ பொறுத்துக் கொள்ளாமல் இருப்பது
-
மற்றவர்களை நம்புவதில் தயக்கம் இருப்பது
-
மற்றவர்கள் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்று நம்மளே எண்ணிக்கொண்டு நம்மளை ஓரமாக இருப்பது
-
மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்தால் பொறாமையாக இருப்பது
-
நம்மை அடிமையாக நினைப்பது
இவை அனைத்தும் தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடம் இருக்கும் குணமே.
தாழ்வு மனப்பான்மையை எப்படி எதிர்கொள்வது?
நீங்கள் எதனால் தாழ்வாக உணர்கிறீர்கள் என்று முதலில் கண்டறியுங்கள். உங்கள் உடல் தோற்றத்தினாலோ அல்லது உங்கள் உடல் அமைப்பை சிறுவயதில் யாரேனும் தவறாக கூறி இருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது. அப்படி கிடையாது என்று ஆழமாக நம்புங்கள். அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குறைபாடு உள்ளவர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் போல் நம்மளும் இருக்க வேண்டும் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். அதேபோல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் நினைத்து நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை முதலில் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய நேர்மறை கருத்துக்களை நீங்களே பதிவு செய்து கொண்டே இருங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அத்தகைய மக்களுடன் சேர்ந்து பழகுங்கள். முதலில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்துங்கள் மேலும் உங்களுடைய மனம் மற்றும் உடல அமைதியை தேடி உங்கள் உடலையும் எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசியுங்கள். உங்கள் பயம் என்ன என்பதை ஒப்புக் கொண்டு அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பாருங்கள். நீங்கள்தான் உங்கள் மனதின் குருவாக இருக்க வேண்டும். மனம் சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது, நீங்கள் சொல்வதை தான் உங்கள் மனம் கேட்க வேண்டும்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731
https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974
https://tamil.shethepeople.tv/society/say-no-to-breakup-1344727
https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife