சிலருக்கு loneliness பிடிக்கும். ஆனால் சிலருக்கோ தனிமையில் இருப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கும். இதனால் அவர்கள் பல மன வேதனையை அனுபவிக்கிறார்கள். அதிகம் ஒரே குழந்தையாக இருக்கும் நபர்களிடம் இந்த தனிமை அதிகம் காணப்படுகிறது. இதைத் தாண்டியும் பல காரணங்களால் தனிமையாக உணர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்கோ தனிமை இனிமை, ஆனால் பலருக்கும் தனிமை கொடுமை!
இந்த கட்டுரை தனிமையை விரும்பாதவர்களுக்கு எப்படி அந்த உணர்வில் இருந்து வெளி வருவது என்பதை விவரித்துள்ளது.
நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிவிங்கள்:
உங்கள் தனிமையில் இருந்து வெளிவருவதற்கான முதல் படியே அதை உணர்வது தான். பின் யாரிடம் பேசினால் உங்கள் தனிமையில் இருந்து வெளி வருகிறீர்கள் என்பதை உணர்ந்து அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் உங்கள் தோழர்களாக இருக்கலாம் அல்லது குடும்பத்தினராக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்தவரை நீங்கள் இழந்திருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த வேலையை இழந்திருக்கலாம், தாண்டியும் சில காரணங்களால் நீங்கள் தனிமையாக உணர வாய்ப்பிருக்கிறது. எந்த காரணமாக இருந்தாலும் அதை நீங்கள் முதலில் வெளிப்படுத்துங்கள். தனிமை தான் மனநோய்க்கான முதல் படி. அதே சரி செய்தாலே மனரீதியான பிரச்சினைகள் வருவதை தவிர்க்கலாம்.
உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்:
உதாரணத்திற்கு நீங்கள் வீட்டில் தனியாக இருக்கிறீர்கள் என்றால், யாரேனும் கூட இருப்பது போல் உணர உங்களுக்கு பிடித்த பாடல்களை சத்தமாக வைத்துக் கேளுங்கள். இதனால் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்ற எண்ணம் மாறி அந்தப் பாட்டை நோக்கி உங்கள் எண்ணம் போகும். உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு volunteer group இல் சேருங்கள். இதனால் நீங்கள் பிடித்ததை செய்தது போலும் இருக்கும் தனிமையில் இருந்து வெளி வருவதற்கும் இது ஒரு சிறந்த துணையாக இருக்கும். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி குழுக்களில் சேரும் பொழுது நல்ல தொடர்புகள் மற்றும் உறவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Prioritize yourself:
எல்லா சமயங்களிலும் யாரோ ஒருவர் உங்கள் கூட இருந்து கொண்டே இருக்க மாட்டார்கள். எனவே உங்களுக்கான நேரம் என்பதை நீங்கள் தனியாகத்தான் செலவிட வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்கள் உடலையும் மனதையும் அமைதி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். உடலை உறுதிப்படுத்த அதற்கு ஏற்ப உடற்பயிற்சியையும் மனதை அமைதி படுத்த அதற்கேற்ப யோகா தியானம் போன்றவற்றையும் செய்யுங்கள். தனிமையை உணர்பவர்களுக்கு தூக்கம் வருவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி நீங்கள் தூங்க முயற்சி செய்யுங்கள். சிறந்த தூக்கமே நிறைய பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.
மேலும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை படியுங்கள். புத்தகங்களை படிக்கும் பொழுது அதில் இருக்கும் கருத்துக்களும் கதாபாத்திரங்களும் நம் மனதில் இருக்கும் தனிமையை போக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் உங்களுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும் என்றால் அதைக் கூட செய்யலாம். தனிமையைப் போக்க நிறைய வழிகள் உண்டு, ஆனால் முதலில் அதை உணர்ந்து அதை சரி செய்ய என்ன வழி என்பதை தேடுங்கள்.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/8-things-you-should-have-in-your-handbag-1377354
https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923
https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731
https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601