Facial hair removal பயம் வேண்டாம்!

Facial hair இருப்பதால் சிலருக்கு அது அவர்களின் சுயமதிப்பை குறைப்பதாக எண்ணி தாழ்வாக நினைக்கின்றனர். அப்படி என்றுமே நினைக்க கூடாது. உங்கள் தைரியம் மற்றும் நம்பிக்கை மனதின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமே தவிர உடல் அமைப்பின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது.

author-image
Pava S Mano
New Update
Facial hair removal

Image is used for representational purpose only

அனைத்து பெண்களுக்கும் முகத்தில் சில இடங்களில் முடி வளரும். அது சாதாரணமான விஷயமே. அதை நினைத்து வருத்தப்படுவதற்கோ வெட்கப்படுவதற்கோ எதுவும் இல்லை. உங்களுக்கு முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்கிறது என்று நினைத்து வருந்தினீர்களானால் அதனை எடுப்பதற்கும் நிறைய வழிகள் உண்டு. ஆனால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்வது உங்கள் உடலில் ஏற்படும் ஒரு விதமான ஹார்மோன் மாற்றம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப உங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.Facial hair removal செய்வது சுலபமான விஷயமே.

Hair removal cream:

Advertisment

உங்கள் முகத்தில் எந்த இடத்தில் முடி வளர்வதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு இதுபோன்ற depilatory கிரீம் களை போட்டுக் கொள்ளுங்கள். பின் 5 லிருந்து 10 நிமிடம் கழித்து மிதமான நீரில் கழுவி விடுங்கள். இது சுலபமான ஒரு வழியாகும். ஆனால் சில சமயங்களில் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு நீங்கள் இந்த கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

Waxing:

Facial hair removal

இந்த முறை சற்று வலித்தாலும் நீங்கள் வீட்டிலேயே waxing kit வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம். இது நீண்ட நாட்களுக்கு வரும். Hot wax அல்லது facial waxing strip உபயோகிக்கும் பொழுது நான்கு வாரங்களுக்கு முடி வளராமல் காக்கும். உங்களுக்கு sensitive skin ஆக இருந்தால் சில சமயங்களில் இது சருமத்தை சிவப்பாக்கும்.  waxing செய்வதற்கு முன் skin exfoliator பயன்படுத்தி பின் waxing செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். Waxing செய்த பிறகு moisturizer போட்டு விடுங்கள்.

DIY Sugar Waxing:

Advertisment

இந்த முறையை பயன்படுத்தும் பொழுது முடியை வேரிலிருந்து எடுத்து விடுகிறது. இதனால் மூன்று வாரம் வரை சருமம் முடி இல்லாமல் இருக்கும். ஒரு கப் சர்க்கரை எடுத்து பின் கால் தேக்கரண்டிக்கும் கம்மியாக எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பின் அதே அளவு மிதமான தண்ணீரை கலந்து கொள்ளவும். இதனை நன்றாக சூடு செய்து, bubble வந்த பிறகு, கிளறிக் கொண்டே இருங்கள். பின் பின் அடுப்பை நிறுத்தி பாத்திரத்தை இறக்கி அந்த கலவை hot syrup மாதிரி ஆன பிறகு இறக்கி விடுங்கள். 30 நிமிடம் ஆற வைத்து விடுங்கள். இதனை சருமத்திற்கு அப்ளை செய்யும் முன் சருமத்தை சுத்தமாக கழுவி விடுங்கள். மேலும் இதை முகத்தில் அப்ளை செய்து பின் ஒரு cloth strip ஐ வைத்து விடுங்கள். மூன்று வினாடிகள் கழித்து அந்த துணியை கொண்டு wax ஐ strip செய்யுங்கள். ஐஸ் கட்டிகளை வைத்து சருமத்தை சற்று நேரம் ஆற்றுங்கள்.  Moisturizer போட்டு விடுங்கள். 

Threading:

நீங்கள் சலூன் கடைகளுக்கு சென்றாலே அங்கு உங்களுக்கு ஏற்றவாறு தேவையற்ற முடிகளை இந்த முறையை பயன்படுத்தி எடுத்து விடுவார்கள்.

Laser hair removal:

Facial hair removal

Advertisment

இந்த முறை தான் இப்பொழுது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. நிரந்தரமாக நம் உடம்பில் மற்றும் முகத்தில் இருந்து தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு இம்முறை பெரும்பாலானவர்களிடம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/health/weight-maintenance-tips-1362813

https://tamil.shethepeople.tv/health/hair-wash-mistakes



facial hair removal