Advertisment

Mood swings வருவதற்கான காரணம்!

Mood swings பொதுவாக வெவ்வேறு காரணங்களால் மாறிக்கொண்டே இருக்கிறது. காலையில், சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா போல் இருக்கும் நாங்கள், சற்று நேரத்திலேயே திமிரு படத்தில் வரும் ஈஸ்வரியைப் போல மாறிவிடுவோம். இதற்குக் காரணம் நம் உடம்பில் நடக்கும் பல மாற்றம் தான்.

author-image
Pava S Mano
New Update
Mood swings

Image is used for representational purpose only

பெண்களுக்கு mood swings வருவது மிகவும் பொதுவான விஷயமாகும். ஆனால் ஒருவருக்கு ஒருவர் விதமான மனநிலை இருந்து கொண்டே இருக்கும். காலையில் புத்துணர்ச்சியாக கலகலவென இருக்கும் அதே பெண் மதியம் வெறுப்பாக இருப்பாள். காலையில் சோகமாக இருக்கும் பெண் மாலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பார். இப்படி பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் சந்திக்கும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம் தான். 

Advertisment

Mood swings என்றால் என்ன?

நாம் தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் உணர்ச்சி மாற்றம் தான் mood swing என்று சொல்கின்றனர். ஒருவர் மிகவும் வெறுப்பாக இருக்கிறார் ஆனால் சிறிது நேரத்திலேயே மிகவும் புத்துணர்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் இது அவருக்கு ஏற்பட்ட mood swing ஆகும். குறுகிய காலத்தில் ஏற்படும் இந்த உணர்ச்சி மாற்றங்கள் தான் mood swing என்று சொல்லப்படுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இது அதிகமாக வருகிறது. அதன் காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

Mood swings காரணம் என்ன?

Advertisment

Mood swings

 

ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இது பொதுவானது தான். நான் பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். காரணம் அவர்கள் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும் பின்பும் அவர்களின் மனநிலை மாற்றம் என்பது அதிகமாகவே இருக்கும். 

Advertisment

PMS:

Mood swing ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணம் PMS எனப்படும் Premenstrual Syndrome dhan. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு காரணமே தெரியாமல் நம் மனநிலையில் அதிகப்படியான ஏற்றத்தாழ்வு உள்ள மாற்றம் தெரியும். இதற்குக் காரணம் நம் உடம்பில் இருக்கும் estrogen மற்றும் progesterone ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான். சரியாக தூக்கம் வராமல் இருப்பது ஏதோ ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவை எல்லாமே PMS இன் அறிகுறிகள் தான்.

PMDD:

Advertisment

Periods வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்பே mood swings, anxiety மற்றும் depression இருந்து கொண்டே இருந்தால் அதற்கு காரணம் Premenstrual Dysphoric Disorder தான். இது மாதவிடாய் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கிவிடும். இதனால் பெண்களின் மனநிலை என்பது சீராக இருக்காது.

Menopause:

மாதவிடாய் காலம் முற்றிலுமாக முடியும் நேரத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான மாற்றம் என்பது கண்டிப்பாக இருக்கும். இந்த நிலையை தான் menopause என்கிறார்கள். இந்த நிலையில் இயற்கையாகவே பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். அந்த சமயத்திலும் அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுவர்.

Advertisment

எப்படி கட்டுப்படுத்துவது?

Mood swings

  • உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்

  • எந்த விஷயத்தை செய்யும் பொழுது அல்லது யாருடன் இருக்கும்பொழுது mood swings ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். பின் சூழலுக்கு ஏற்றவாறு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • தூக்கம் மிகவும் அவசியமாகும். நம் அன்றாட வாழ்க்கை சரியாக நடப்பதற்கு தூக்கம் தான் முக்கிய காரணம்

  • உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள்

  • உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்யுங்கள்

Advertisment

இவை அனைத்தையும் தாண்டி தான் அவர்கள் தினசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்து ஆண்களும் மற்றும் குடும்பத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/weight-maintenance-tips-1362813

Advertisment

https://tamil.shethepeople.tv/health/7-yoga-poses-for-pcospcod-1345175

https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601

https://tamil.shethepeople.tv/health/no-more-loneliness-1378785

 

mood swings
Advertisment