Advertisment

Eye makeup ? இதை செய்து பாருங்கள்!!!

கண்களுக்கான மேக் - அப் பயன்பாட்டில் நீங்கள் என்ன பொருள்களை எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். கண்கள் முகத்துக்கு அழகூட்டுபவை. அதற்கு என்ன மாதிரியான அழகு பொருள்களை பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

author-image
Nandhini
New Update
eye makeup.jpg

Image is used for representation purposes only.

கண்கள் முகத்தின் முக்கிய உறுப்பு. கண்களின் அழகுக்கு மெருகூட்ட நீங்கள் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கண் மை மட்டுமே பயன்படுத்திய காலத்தில் இருந்து நவீன காலத்தில் இருக்கிறோம். தற்போது கண்களை அழகுப்படுத்த ஐ liner, shadow, mascara என பல பொருள்கள் கிடைக்கிறது. அவற்றிலும் dark, light என்று பிரத்யேக நிறங்களிலும் கிடைக்கிறது. இதை எப்படி பயன்படுத்தலாம்? கண்களுக்கு என்னென்ன தேவை என்பதை இங்கு பார்க்கலாம்

Advertisment

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

Eye makeup tips

 புருவங்கள்

Advertisment

 கண்களுக்கான மேக் அப் பொருள்கள் பல உண்டு என்பதே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். முதலில் புருவங்களிலிருந்து அழகை தொடங்க வேண்டும். பலரும் புருவத்தை தங்கள் முகத்துக்கேற்றபடி ஓர் அழகான வடிவில் வைத்திருப்பார்கள். சிலருக்கு புருவத்துக்கு இடையில் ஒரே புருவத்தின் இடையிலும் கூட இடைவெளி இருக்கலாம். இது பார்க்க நன்றாக இராது.  Eyebrow பென்சில் கிடைக்கும். Grey கலர், brown கலர், black கலர் போன்றவற்றில் கிடைக்கிறது. இதை கொண்டு புருவத்தில் இருக்கும் இடைவெளியை குறைக்கலாம். இதை பயன்படுத்தும் போது இவை பார்க்க artificial-லாக இருக்கும் என்று நினைப்பவர்கள் ஐ-ப்ரோ டிஃபைனர் பவுடர் கடைகளில் கிடைக்கும். மேக் அப் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்கள் இது குறித்து அறிந்திருப்பார்கள். இதை பயன்படுத்தும் போது அது இயற்கையாக இருக்கும்.

 போர்ன் ப்ரோ eye லைட்டர் ( brow bone eye lighter)

 கண் புருவத்தில் மேல் கீழ் இரண்டு பக்கமும் இருக்கும் போர்ன் பகுதியை ஐ லைட் செய்ய வேண்டும். இது brow bone eye lighter என்று அழைக்கப்படுகிறது. இது கண்கள் வெளிப்புறம் இருப்பது போன்று, பெரியதாக இருக்கும். கண்கள் அழகாக தெரியும்.

Advertisment

 eye shadow 

 eye shadow போடுவதற்கு முன்பு shadow ப்ரைமர் பயன்படுத்திய பிறகு ஐ shadow பயன்படுத்தலாம். இது டிரஸ் கலருக்கேற்ப இதை மேட்ச் செய்து பயன்படுத்தலாம். விருப்பமான கலரில் பயன்படுத்தலாம். இது நிறைய கலரில் கிடைக்கும். பர்ல், மேக், மெட்டாலிக், ஷிம்மரிங் என தனித்துவமாகவும் கிடைக்கும். சிம்பிளாக முதல் ஷைனிங் ஆக இருக்கும்.

 eye liner

Advertisment

 eye liner பயன்பாடு அதிகரித்துவருகிறது. இது பென்சில் வடிவிலும் திரவ நிலையிலும் கிடைக்கிறது. பென்சில் போன்று இருப்பது கடினமாக இருக்கும். பென் போன்றும் கிடைக்கிறது. இது ஈஸியாக பயன்படுத்தலாம்.

 Mascara 

 இது கண் இமைகளை நீளமாக அடர்த்தியாக காட்டும். ஃபால்ஸ் ஐ lash கிடைக்கிறது. இது கண் இமைகள் நீளமாக காட்டும். இதில் பல வகை உண்டு. உண்மையான முடி இழைகள் கொண்டும், செயற்கை இழைகள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.

Advertisment

 கண்களுக்கு lens

 இதிலும் அதிக கலர் உண்டு. நமது இந்திய மக்களின்கண்களின் நிறத்துக்கேற்ப கிடைக்கிறது. இது dress கலருக்கேற்ப கிடைக்கிறது.

 கண் மை அல்லது காஜல்

Advertisment

 கண் மைக்கு மாற்றாக காஜல் வந்திருக்கிறது. இதை தினமும் பயன்படுத்துகிறோம். இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும். கலர் காஜல் கிடைக்கிறது. மை போட்டு அவுட் லைன் கொடுப்பதற்கேற்ப கலர் காஜல் கிடைக்கிறது.

eye lash கர்லர்

கண் இமைகள் சுருளாக வைக்க ஐ லாஷ் கர்லர் கிடைக்கிறது. இதை பயன்படுத்திய பிறகு மஸ்காரா பயன்படுத்தினால் கண் இமைகள் நீளமாக அடர்த்தியாக காட்டும். கண் புருவங்களை அழகாக வடிவமாக தீட்டி கொள்ளலாம். இது எல்லோருக்குமானது. லைட் ஷேட் அல்லது டார்க் ஷேட் கொண்ட ஐ ஷேடோ பயன்படுத்தலாம். பிரவுன், பீச் போன்றவை எல்லா டிரஸ் வகைக்கும் பொருந்தும்.

Advertisment

pen eye லைனர் பயன்படுத்தலாம். கண்களுக்கு மேல் இருக்கும் பகுதியில் எளிமையாக வரையலாம். மஸ்காரா கண் இமைகளை அழகாக காட்டும். காஜல் பயன்படுத்தலாம்.

 கண்களை அழகாக்க புருவங்களை சரி செய்து ஐ- ப்ரோ, ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா, காஜல் மட்டுமே போதுமானது. இன்னும் அழகாக காட்டும் போது ஐ லைட்டர், ஐ ஷேடோ பிரைமர், ஐ லென்ஸ் போன்றவை பயன்படுத்தலாம். கண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காண்பிக்க எளிமையான இந்த பொருள்களே போதுமானது. சரியான முறையில் பயன்படுத்தினால் கண் அழகும் அற்புதமாக இருக்கும்.

 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/how-does-combined-protein-reduces-bloating-2027725 

 Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/causes-of-pelvic-inflammatory-disease-2025764 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/things-to-keep-in-mind-before-menopause-2025743 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/plant-based-proteins-over-other-options-2025727 

Eye makeup tips
Advertisment