கிரண் மஜும்தார் ஷா(Kiran Mazumdar Shaw) பல பெண்களுக்கு முன்னுதாரணம்

தொழில் முனைவர் கிரண் மஜும்தார் ஷா வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து, பல சமூக பாகுபாடுகளையும் உடைத்திருக்கிறார். அவரின் வாழ்க்கை பற்றியும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
biocon founder Kiran Mazumdar Shaw

Image of Kiran Mazumdar Shaw

பயோடெக் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் மஜும்தார் ஷா இந்தியாவின் பணக்கார பெண்மணிகளும் ஒருவர் ஆவார். அவர் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். தொழில் முனைவராக வேண்டும் என்பது அவருடைய கனவு கிடையாது. அவரது தந்தையால் ஈர்க்கப்பட்ட இவர் ஒரு ப்ரூ மாஸ்டர். அவரது கனவை நிறைவேற்றிக் கொள்ள அவர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மால்டிங் மற்றும் ப்ரூயிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆனால் துரதிஷ்டவசமாக எந்த நிறுவனமும் பெண்களை ப்ரூயிங் மாஸ்டர் பதவியில் அமர்த்தவில்லை.

Advertisment

இருப்பினும் இது அவரை முன்னேறுவதில் இருந்து தடுக்கவில்லை. அப்பொழுது 25 வயதான மஜும்தார் ஷா திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் பயோகான் இந்தியாவை நிறுவி 43 ஆண்டுகள் ஆகிறது மற்றும் வளரும் தொழில் முனைவோர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்த தற்செயலான தொழில் முனைவர் விடாமுயற்சிக்கு பலன் கிடைக்கும் என்ற செய்தியை தனது பயணத்தின் மூலம் வழங்குகிறார். 

1. சிறுவயதிலேயே பாலின பாகுபாடுகளை உடைத்திருக்கிறார்:

ஃபெனாவுக்கு(Femina) அளித்த பேட்டியில் கிரண் மஜும்தாரீ,1970களில் ப்ரூ மாஸ்டராக பயிற்சி பெற வேண்டும் என்று எடுத்த முடிவு ஒரு தைரியமான முடிவு என்று கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரேஷன் பல்கலைக்கழகத்தில் மால்டிங் மற்றும் ப்ரூயிங் பயின்ற வகுப்பில் முதலிடம் பிடித்தபோது அவர் தன்னம்பிக்கையையும் பெற்றார். 10 ஆண்களில் மஜும்தார் ஷா மட்டுமே பெண். படிப்பு அல்லது தொழிலை தேர்ந்தெடுக்கும் போது ஒருவரின் பாலினம் முக்கியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். அறிவு பொதுவானது, உங்கள் மனதில் நினைக்கும் எதையும் கற்றுக் கொள்வதும், திறமையை வளர்த்துக் கொள்வதும் உங்களுடையது என்று அவர் ஃபெமினாவிற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறினார்.

kiran mazumdar shaw

2. ஒரு ஆணின் உலகில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்:

Advertisment

மஜும்தார் ஷா இந்திய திரும்பிய பிறகு ப்ரூயிங்கில் ஒரு தொழிலை தொடர தயாராக இருந்தார். இருப்பினும் நிர்வாகப் பொறுப்பில் ஒரு பெண்ணை நியமிக்க யாரும் தயாராக இல்லை. அவர் பலமுறை முயற்சித்தாலும் ஆணாதிக்கம் செலுத்தும் தொழில் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. பின்னர் சர்வதேச சந்தையில் வேலை தேட ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ஐரிஷ் பயோடெக் தொழில் முனைவோரை தற்செயலாக சந்தித்தார். அது பயோகான் நிறுவனத்தை தொடங்க அவரை தூண்டியது. நான் அதை எப்படி செய்தேன் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் நான் மன ரீதியாக வலிமையாக இருந்தேன். ஒரு ஆணின் உலகில் தான் வெற்றி கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

3. அவர் கைவிடாமல் சவால்களை எதிர்கொண்டார்:

மஜும்தார் ஷாவின் பயணம் இனிதானது அல்ல. வங்கிகளும் அவர் பெண்ணாக இருப்பதால் பணரீதியான உதவிகள் செய்ய தயங்கினர். அவருக்கு போதுமான அனுபவங்கள் இல்லை என்று அதிகாரிகள் நினைத்தனர். அவர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு சென்றாலும் இந்த பலனும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வங்கி மேலாளர் கடன் வரியை நீடித்து அவருக்கு உதவ ஒப்புக்கொண்டார். இதன் மூலம் வருமானம் தேடும் இரண்டு ஓய்வு பெற்ற ட்ராக்டர் மெக்கானிக்கலை வேலைக்கு சேர்ந்தார். ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து தேவையான உபகரணங்களை கொண்டு வந்து நிறுவனத்தை தொடங்கினார்.

4. கிரண் மஜும்தார் தனது நிறுவனத்தை கேரேஜில் தொடங்கினார்:

25 வயதில் கிரண் ஒரு கேரேஜில் தனது நிறுவனத்தை தொடங்கினார்.  இது வேலைக்கு செருப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. அவரின் தோழியான பிரதிமா ராவ் செயலர் ஆதரவை வழங்குவதற்காக தனது வேலையில் இருந்து ஓய்வெடுத்தார் மஜும்தார் உடன் இணைந்து கொண்டார். இப்பொழுது அவர் பயோகான் பணி இயக்குனராக உள்ளார். மஜும்தார் ஷா பயோகானை இந்தியாவின் மிகப்பெரிய உயரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக மாற்றியதன் மூலம் தன்னை வாழ்த்தியவர்களின் எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார்.

5. வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை:

Advertisment

மஜும்தார் ஷாவின் கூற்றுப்படி ஒருவர் தனக்குத்தானே உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் வெற்றி பெற நிறைய விஷயங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். இறுதி இலக்கில் கவனம் செலுத்தாமல், பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு யோசனையிலிருந்து இன்னொரு யோசனைக்கு மாற வேண்டாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். மேலும் விரைவில் பணக்காரர் ஆக தொழில் முனைவராக வேண்டும் என்று நினைக்க கூடாது. நிறைய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் அவர்களில் பலர் அதை செய்வதில்லை. குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்று அவர் உறுதியாக நம்புகிறார்.



Suggested Reading: Digital Marketing பற்றி தமிழில் கற்று தருகிறார் Sangeetha S Abishek

Suggested Reading: ஊக்கமளிக்கும் ஐந்து பெண் தொழில் முனைவர்கள்

Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை

Advertisment

Suggested Reading: யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்?⁠⁠⁠⁠⁠⁠⁠

women entrepreneur Kiran Mazumdar Shaw Biocon