Advertisment

அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவர்

author-image
Devayani
New Update
law student

நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு சட்ட கல்லூரிக்கு தனது வரவிருக்கும் திரைப்படமான Thankam படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியானது. 

Advertisment

அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் நடிகையுடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு வந்து போது தகாத முறையில் தொட்டதால் அது அவருக்கு அசௌகரியமாக இருந்தது. இந்த வீடியோவை ஒன் இந்தியா மலையாளம் ட்விட்டரில் வெளியிட்டது.

இந்த வீடியோ வைரல் ஆனதை எடுத்து அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலரும் கோரிக்கை விடுத்தனர். “என்ன, இது சட்ட கல்லூரி இல்லையா?” என்று சூரரைப் போற்று நடிகர் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

இது போன்று நடந்து கொள்வது சிரிப்பாக உள்ளதா?

Advertisment

அந்த வீடியோவில் இருந்த அத்தனை பேரும் அதை பார்த்துக் சிரித்துக் கொண்டிருந்தனர். மேலும் சக மாணவர்கள் கத்தி அதை ஆதரித்துக் கொண்டிருந்தனர். இந்த மாதிரி தகாத முறையில் நடந்து கொள்வது வேடிக்கையாகி விட்டதா? இப்படி செய்தால் தான் மாணவர்கள் அதை வீரம்(heroism) என நினைக்கிறார்களா?
நடிகர்கள் அந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க வந்துள்ளனர். மாணவர்களின் தகாத நடத்தையை பொறுத்துக் கொள்ள அல்ல? இதைவிட வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் அது ஒரு சட்ட கல்லூரி. அந்த மாணவர் வருங்காலத்தில் வழக்கறிஞராக படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான்.

stopvio⁠⁠⁠⁠⁠⁠⁠

தினம்தோறும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை:

Advertisment

மேலும் பிரபலங்கள், குறிப்பாக பெண்கள் பொது மக்களால் இதுபோல் தகாத முறையில் தொடப்படுவது மிகவும் சகஜமாக உள்ளது. சிலர் பிரபலங்கள் என்பதால் அவர்களிடம் அப்படி நடந்து கொள்வது தவறில்லை என்று நினைக்கின்றனர். அவர்கள் திரைப்படத்துறையின் வேலை செய்வதால் இது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு சாதாரணமாக இருக்கும் என நம்புகின்றனர். ஒரு சிறிய தொடுதல் ஏன் அவர்களை தொந்தரவு செய்யப் போகிறது என்று நினைக்கின்றனர். துரதிஷ்டவசமாக, இந்த செயல்களை அனைவரும் சாதாரணமாக நினைக்கின்றனர். ஆனால், அது ஒருவரை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர்.

மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகு பலர் நடிகைகளுக்கு இதெல்லாம் சாதாரண ஒரு விஷயம், இதை தானே அவர்கள் திரைப்படத்திலும் செய்கின்றனர், ஒருவேளை நடிகர்கள் அல்லது டைரக்டர்கள் அதை செய்திருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள், இதுபோன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதிலிருந்து சமூகத்தில் மக்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. யாராக இருந்தாலும் ஒருவரை தகாத முறையில் நடத்துவது தவறு என முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட எல்லைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள:

Advertisment

மேலும் நம்மில் எத்தனை பேர் தனிப்பட்ட வரம்பு பற்றி அறிந்திருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் அதை நம் வாழ்வில் திணித்திருக்கிறோம்? தனிப்பட்ட எல்லைகள் என்பது நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான அடிப்படை வழிகாட்டுதல். ஒரு அன்னியர் நமக்கு மிக அருகில் வருவது அல்லது தொடுவது உடல் எல்லையை மீறுவதாகும். நமது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி உறவினர்கள் கேள்வி கேட்பது நச்சரிப்பு உணர்ச்சி எல்லைகளை மீறுவதாகும். பள்ளி, கல்லூரி அல்லது வேலை செய்யும் இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்வது உளவியல் எல்லைகளை மீறுவதாகும்.

இது போன்ற எல்லையை மீறுபவர்களுக்கு இது தவறு என்று தெரிவதில்லை. இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு இதனை பற்றி கற்றுத் தர வேண்டும். கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது அவசியம்.

மேற்கூறிய இந்த சம்பவம் ஒரு பிரபலத்திற்கு நடந்த எல்லை மீறுதலுக்கான உதாரணம். தினமும் பெண்கள் இந்த மாதிரி தகாத நடவடிக்கைகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அது அவர்களின் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, அன்னியர்களாக இருந்தாலும் சரி எல்லைகளை மீறுவது தவறாகும். சில சமயங்களில் மற்றவர்கள் நம்மிடம் எல்லையை மீறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கே நமக்கு நேரம் எடுக்கிறது. எனவே, உங்களின் தனிப்பட்ட எல்லைகளை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, அதைப்பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது இன்றியமையாததாகும்.

Advertisment

Suggested Reading: பணரீதியான சுதந்திரம்(financial independence) தரும் நன்மைகள்

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

அபர்ணா பாலமுரளி Aparna Balamurali
Advertisment