Advertisment

எனக்கு எந்த haircut set ஆகும்??

ஒரே look ல இருந்து இருந்து bore அடிக்கிறது. புதுசா getup மாத்தலாமா? ' என நினைப்பவர்களுக்கு, ஸ்டைலாக haircut செய்துகொண்டால் new look கிடைக்கும்.

author-image
Nandhini
New Update
samantha new.jpg

Image is used for representation purposes only.

எல்லாவிதமான haircut எல்லாருக்கும் செட் ஆகாதுதான்.அதற்கு, முக வடிவமைப்பே காரணம். சதுர வடிவம், வட்ட வடிவம், நீள் வடிவம், முக்கோண வடிவம், ஹார்டின் வடிவம், நீள் வட்ட வடிவம் என முக வடிவமைப்பில் நிறைய உள்ளன. ஒவ்வொரு வடிவ முகத்துக்கும் ஒவ்வொரு முடி வடிவமைப்புப் பொருத்தமாக இருக்கும். அதைக் கவனமாகத் தேர்வுசெய்வதில்தான் இருக்கிறது நமக்கான fashion.

Advertisment

 "இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்."

Types of hair cut based on face shape

 Heartin வடிவ முக அமைப்பு:

Advertisment

 Heartin வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கு, நெற்றி சற்று பெரியதாகவும், தாடை சிறியதாகவும், வளைவுகளுடனும் இருக்கும். இவர்களுக்கு ஃப்ரின்ஜ் கட் ( fringe cut), ஃப்ரென்ட் பேங்ஸ் ( front bangs) எனப்படும் நெற்றியின்மீது முடி படுவது போன்ற ஹேர்கட் பொருத்தமாக இருக்கும். இந்த ஃப்ரின்ஜ் கட், ஃப்ரென்ட் பேங்ஸ் இரண்டிலுமே ஸ்ட்டிரைட் கட், ஒன் சைடு கட், டபுள் சைடு கட் என வகைகள் உள்ளன. இதில், உங்களுடைய style க்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

 நீள் வடிவ முகம்:

 நீள் வடிவ முகம் உடையவர்களுக்கு, தாடைப் பகுதி நீளமாக இருக்கும். இவர்கள், முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து, முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். இது, உங்கள் முகத்தை matureடாகக் காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisment

 முக்கோண வடிவ முகம்:

 நெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ' கட் அல்லது `வி' கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், trendly look பெறலாம்.

 நீள் வட்ட வடிவம்:

Advertisment

 நீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.

 சதுர முகம்:

 நெற்றி, தாடை, கன்னங்கள் எல்லாமே சமமாக இருந்தால், உங்கள் முகம் சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இவர்களுக்குத் தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொள்ளும் `யூ' கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.

Advertisment

 வட்ட முகம்:

 முன் நெற்றியையும் கன்னங்களையும் இணைக்கும் விதமாகக் காதுகளுக்குப் பின்னால் முடிவருவது போன்ற லேயர் கட் பொருத்தமாக இருக்கும். லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். க்ராஜூவேடட் லேயர் கட் என்பது, சில இடங்களில் லேயர்களாகவும், சில இடங்களில் நார்மலாகவும் இருக்கும் .யூனிஃபார்ம் லேயர் கட் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயர்களாக இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பவர்கள் இதனை  uniform தேர்வுசெய்யலாம்.

 டிப்ஸ்:

Advertisment
  1.  ஃபெதர் கட் செய்துகொண்டால், எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் டிரண்ட்லியாகத் தெரியலாம்.
  2.  முடியின் அமைப்பை மாற்ற வேண்டாம் என நினைப்பவர்கள், மாதம் ஒருமுறை முடியை டிரிம் செய்துகொள்ளலாம்.
  3.  ஹேர்ஸ்டைலுக்கு என உள்ள ஆப்ஸை டவுன்லோடு செய்து, உங்கள் போட்டோவைப் பதிவிடுங்கள். அதில்வரும் ஹேர் கட் வகைகளில் உங்கள் முகத்துக்குப் பொருந்துவதைப் பார்த்து, அதன்பின் ஹேர்கட் செய்துகொள்ளலாம்.
  4.  French cut போன்ற ஹேர்ஸ்டைல்களை தேர்வுசெய்பவர்கள் ரெகுலராக அதைப் பராமரிப்பது அவசியம் அப்போதுதான் neat look இருக்கும்.
  5.  Haircut செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் பணி மற்றும் வயதையும் கருத்தில்கொண்டு தேர்வுசெய்வது அவசியம்.

 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/things-to-do-to-manage-pcos-properly-2054756 

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/natural-remedies-for-better-vision-2054754 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/stress-and-anxiety-control-2054752 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/powerhouse-of-plant-protein-2054751 

types of hair cut based on face shape
Advertisment