postpartum depression போக்க எளிய குறிப்புகள்!!

கர்ப்ப காலங்களில் , இவளைப் பற்றி மட்டுமே இவள் கணவர், உறவினர் அனைவரும் யோசிப்பார்கள். அவர்களுக்கும் ஒரு விதமான பாசம் மற்றும் அரவணைப்பு எப்போதும் கிடைக்கும்.

author-image
Nandhini
New Update
postpartum dep.jpg

Image is used for representation purposes only.

அதுவே பிள்ளைப் பெற்ற பிறகு, அந்த பாசம் எல்லாம் இருக்கும் ஆனால் , அவர்களது கவனங்கள் எல்லாம் அந்த குழந்தை மீது தான் இருக்கும். இந்த சமயத்தில் அவர்களது குணாதிசையங்கள் மாறும். எதற்கு எடுத்தாலும் கத்துவார்கள். சட்டென்று அழுவார்கள். திடீரென சோகத்தில் மூழ்கி , அமைதியாக இருப்பார்கள். இதெல்லாம் வைத்துதான் அவர்கள் “Postpartum depression யைமேற்கொண்டிக்கிறார்கள் என தெரியும். ஆனால் இதை மேற்கொள்ளும் பெண்கள், இதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை இதில் பார்ப்போம்

simple tips to overcome postpartum depression

Advertisment

பிள்ளைப் பெற்ற பின்பு ஹார்மோனல் (harmonal ) மாற்றங்களால், அவர்களது வழக்கமான வாழ்க்கை முறை மாறும். குழந்தை, சாப்பாடு, தூக்கம் என்று அவர்களது மனம் சுற்றிக் கொண்டே இருக்கும். அதையும் தாண்டி பல யோசனைகள் வரும். அதில் மிகவும் ஆபத்தானது இந்த "தனிமை". என்னதான் உறவினர்கள் , கணவர் எல்லாம் அருகில் இருந்தாலும், அவர்களுடன் சாதாரணமாக பேசினாலும், இதை மனரீதியாக மாற்றப்பட வேண்டிய ஒன்று. அது முழுக்க முழுக்க அந்த பெண் மீது உள்ளது.

அப்படி நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என நினைத்தால் ,உடனே அருகில் இருக்கும் நபரிடம் ஏதாவது பேச ஆரம்பியுங்கள். அருகில் யாருமில்லையா? நெருங்கிய நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து பேசலாம்.

உங்களுக்கு தெரிந்த பெண்கள் எவரேனும் பிள்ளைப் பெற்றிருந்தால், அவர்களிடம் பேசி அவர்கள் இந்த postpartum depression யை எப்படி கையாண்டார்கள் என கேட்டு அதை பின் படுத்தலாம்.

Advertisment

தனியாக இருப்பதில் என்ன ஆபத்து என்று எண்ணிவிடதீர்கள். தனிமை, நிறைய தேவையற்ற எண்ணங்கள் திணிக்கும், அது காலப்போக்கில் " உயிரை மாய்த்துக்கொள்ளும் " அளவிற்கு கூட செல்லலாம்.முடிந்த வரை தனிமையை தவிர்த்துவிடுங்கள்.

Suggested Reading : https://tamil.shethepeople.tv/news/what-happens-when-protein-is-low-2060873

Suggested Reading : https://tamil.shethepeople.tv/news/can-i-get-pregnant-before-my-period-2060866

Advertisment

Suggested Reading : https://tamil.shethepeople.tv/society/how-to-be-confident-2059357

Suggested Reading : https://tamil.shethepeople.tv/news/stress-and-anxiety-control-2054752

simple tips to overcome postpartum depression