"எல்லாமே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.நான் அதற்க்காக நிறைய உழைத்தேன். என் வாழ்க்கையில எப்பவுமே நான் ஒரு போராளியா இருந்திருக்கிறேன். எனக்கு அந்த போராட்டங்கள் பிடிக்கும், அதை ஜெயிக்கவும் பிடிக்கும். நான் அதை ஒரு சவாலாக பார்க்கிறேன்"
சமந்தா எப்பொழுதுமே அவர் வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்த்து நின்று அதை கடந்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் அவரின் ரசிகர்களுக்கும் அவ்வப்போது வாழ்க்கையின் போராட்டத்தை எதிர்கொள்ள சில ஊக்கவிக்கும் பதிவுகளையும் அவர் வெளியிடுகிறார்.
"மனதளவில் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அதன் பிறகு வெளி தோற்றத்தின் அழகை பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், மனதளவில் ஸ்ட்ராங்காக இல்லாமல் இருந்தால் எளிமையாக உடைந்து விட முடியும்"
எப்பொழுதுமே நாம் மன அளவில் உறுதியாக இருந்தால் அனைத்துமே நாம் நினைத்தபடி நடக்கும். ஒருவேளை நமது வெளி தோற்றம் பிறருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை பற்றின எதிர்மறையான கருத்துக்கள் வருகிறது என்றாலும் நாம் உள்ளிருந்து வலிமையாக இருந்தால் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
"வெற்றிக்கான அர்த்தம் மாறிவிட்டது என நான் நினைக்கிறேன். ஆரோக்கியம் முக்கியமானது, குடும்பம் முக்கியமானது, குடும்பத்திற்கான நேரம் முக்கியமானது, நேரம் முக்கியமானது, சந்தோஷம் முக்கியமானது. இந்த நொடி நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமானது"
வெற்றி என்பது எப்பொழுதுமே பணத்தைப் பற்றியது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சமந்தா ஒரு மேடையில் மாணவர்களுக்காக கூறியது:
"நான் படிச்சிட்டு இருந்தப்போ என் அப்பா, அம்மா எப்பயும் என்ன படி, படி, படி, படின்னு தான் சொல்லுவாங்க. நீ பெரிய ஆளா வருவ அதனால படின்னு சொன்னாங்க. நான் அட்வைஸ் பண்ண கூடாதுன்னு தெரியும் ஆனா, நான் ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன். 10th மற்றும் 12 ஆம் வகுப்பில் டாப்பர் ஆனேன். காலேஜ்ல டாப்பரா இருந்தேன். நான் மேலும் படிக்க வேண்டும் என்று நினைத்தபோது என் பெற்றோர்களால் அதற்கான பணத்தை திரட்ட முடியவில்லை. அப்போழுது எனக்கு எந்த கனவும் இல்ல, வருங்காலம் எப்படி இருக்கணும் என்று தெரியவில்லை. நான் என்ன சொல்ல வர்றேன்னா, மத்தவங்க உங்களுக்காக தேர்ந்தெடுக்கிற பாதையில நீங்கள் போகணும்னு நினைப்பாங்க. ஆனா, நான் உங்களை கனவு காண சொல்றேன். நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் கனவு காணுங்கள், உங்களால் அதை சாதிக்க முடியும். நீங்கள் அதில் தோல்வி பெறலாம், அது உங்களுக்கு கடினமாக இருக்கலாம், இருந்தாலும் நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். அதை தான் நானும் செய்தேன். நான் ரெண்டு மாதத்துக்கு ஒருவேளை சாப்பாட்டுடன் மட்டும் வாழ்ந்திருக்கிறேன். நிறைய வேலைகளை பார்த்து இருக்கிறேன். இன்னைக்கு நான் இங்க இருக்கேன். அப்போ என்னால முடியும்னா, உங்களாலையும் முடியும்"
"உங்கள் மகள்களை யார் திருமணம் செய்து கொள்வார் என்ற கவலை இல்லாத படி அவளை தகுதியானவளாய் வளருங்கள். அவள் திருமணத்திற்காக பணத்தை சேர்த்து வைக்காமல், அவள் படிப்பிற்காக அதை செலவு செய்யுங்கள். முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக, அவளுக்காக அவளை தயார் செய்யுங்கள். அவளுக்கு சுய அன்பையும், நம்பிக்கையையும் கற்று கொடுங்கள்"
"எளிமையான கடந்த காலத்தை கொண்ட எந்த ஒரு ஸ்ட்ராங்கான மனிதனையும் நான் பார்த்ததில்லை"
ஒருவர் மனதளவில் வலிமையாக இருக்கிறார் என்றால் அவர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கடந்து வந்திருக்கிறார் என்று அர்த்தம். எந்த ஒரு நபரும் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் படாமல் உயர்ந்திருக்க முடியாது. எனவே, எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், கஷ்டப்படாமல் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தவறானது.
Suggested Reading: சாய்பல்லவி கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்
Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்
Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்