Advertisment

1-3 years வரையிலான குழந்தை வளர்ப்பு

பிறந்தது முதல் 3 வயது வரை குழந்தையை வளர்ப்பதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள்.

author-image
Dhivya
New Update
nayan

Image is used for representation purpose only.

1-3 years வரையிலான குழந்தை வளர்ப்பு:

Advertisment

1-3 years child upbringing:

பிறந்தது முதல் 3 வயது வரை குழந்தையை வளர்ப்பதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள்

Advertisment

இதற்கு என்ன காரணம்? இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்..!

பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை, குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்.

இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே தேவை, தண்ணீர் கூட தேவையில்லை. மூளை வளர்ச்சியில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி வரை, தாய்ப்பால் உறுதியான, ஊட்டச்சத்து அடித்தளத்தை வழங்குகிறது!

Advertisment

குழந்தைக்கு எவ்வளவு வயதானாலும், இரவு நேரத்திலும், வெளியில் செல்லும் போதும் மட்டுமே டயப்பரைப் பயன் படுத்துவது, பகலில் டயப்பரைப் பயன்படுத்தாமல் இருந்தால், குழந்தைக்கு இது மிகவும் நல்லது. டயப்பர்கள் குழந்தையின் walking and crawling திறனைத் தடுக்கின்றன, தாமதங்கள் ஏற்படலாம். மேலும், ஈரமான டயப்பர்களால் ஏற்படும் அடைப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.

  • தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறக்காதீர்கள்.
  • உங்கள் குழந்தை நோய்வாய்ப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை கோப்புகளாக வைத்திருக்க வேண்டும்.
  • குழந்தைகள் 8-9 மாதத்தில் "தாத்தா", "அப்பா" என்று பேச ஆரம்பிக்கும் போது, ​​இந்த நேரத்தில் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் அவர்களிடம் அதிகம் பேச வேண்டும்.
  • 7 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையை "Potty Training" செய்து, 2 வயதில் "காக்கா வருது" என்று பெற்றோரிடம் சொல்லப் பழக வேண்டும்.
  • 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உடலுக்கு ஒரு நாளைக்கு 2 முறையும், தலைக்கு 2 நாட்களுக்கு ஒரு முறையும் குளிக்க வைக்க வேண்டும்.
Advertisment

 வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘social behaviour  எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..!

 

 

Advertisment

Suggested Reading https://tamil.shethepeople.tv/health/work-at-a-computer-all-day-1989890

Suggested Reading https://tamil.shethepeople.tv/health/herbs-for-vaginal-dryness-2000427

Suggested Reading https://tamil.shethepeople.tv/society/tips-to-follow-during-periods-1998618

Advertisment

Suggested Reading https://tamil.shethepeople.tv/health/what-do-eat-during-menopause-1987292

1-3 years child upbringing
Advertisment