Advertisment

weightlossக்கு 9 புரோட்டீன் உணவுகள்!

நம்முடைய உடல் எடையை குறைப்பதில் புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே தான் நீங்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தசைகள் வலிமையாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

author-image
Nandhini
New Update
protein weightloss.jpg

Image is used for representation purposes only.

அந்த வகையில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அறிந்து கொள்வது உங்க உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். 

Advertisment

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்

9 புரோட்டீன் உணவுகள் | 9 protein foods for weightloss 

புரத உணவுகள்

Advertisment

புரத உணவுகள் உங்க கிலோ வில் சிறுதளவு குறைக்க கை கொடுக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம். புரத உணவுகளை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உங்களுக்கு அடிக்கடி பசிப்பதில்லை.

புரத உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது. எனவே அந்த வகையில் உங்க எடையை குறைக்கும் 9 வகையான புரத உணவுகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

முட்டை

Advertisment

முட்டைகள் ஒரு ஆரோக்கியமான உணவின் தொகுப்பாகும். இது கூடுதல் எடையை குறைத்து அதே நேரத்தில் தசைகள் அதிகரிக்க உதவுகிறது. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு நல்ல புரதம் ஆறு கிராம் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் ஆகியவைகள் உள்ளன.

நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இவை புரதத்தின் சிறந்த மூலமாக மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. உப்பு மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிருங்கள். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை அப்படியே எடுத்து பயன் அடையுங்கள்.

Advertisment

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச் சிறந்த மூலமான உணவு என்றால் அது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் தான். எனவே இந்த பருப்பு வகைகளில் அதிக அளவு புரோட்டீன் சத்து நிறைந்து உள்ளது. சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்க எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

சிக்கன்

Advertisment

அனைத்து அசைவ உணவுகளிலும் புரதச்சத்து என்பது காணப்படுகிறது. ஆனால் குறிப்பாக சிக்கனில் புரதம் அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி மற்றும் பன்றிறைச்சியை விட இதில் அதிகமாக காணப்படுகிறது. எனவே சிக்கன் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கிரேக் யோகார்ட்

யோகார்ட்டில் அதிகளவில் புரதம் காணப்படுகிறது. புரதம் இருமடங்காகவும் சர்க்கரை குறைவாகவும் உள்ளன. எனவே கிரேக்க தயிரை உங்க அன்றாட உணவில் சேர்ப்பது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இருப்பினும் கடையில் பெறப்படும் தயிரில் அதிகளவு சர்க்கரை சத்து சேர்ப்பதால் வீட்டிலேயே யோகார்ட் தயாரிப்பது நல்லது.

Advertisment

பிரக்கோலி

பிரக்கோலி தாவர அடிப்படையிலான புரதம் ஆகும். இதில் உடலுக்கு அவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் இந்த காய்கறிகளில் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகள் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

 குயினோவா

Advertisment

குயினோவா எடை இழப்பை தரக்கூடிய தானியமாகும். இறைச்சியைப் போலவே இந்த தானியத்திலும் முழுமையான புரதங்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான ஒன்பது அமினோ அமிலங்களை கொண்டிருக்கும் சூப்பர் ஃபுட் ஆகும்.

மீன்

மீன்களில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளன.

சிவப்பு இறைச்சியைப் போலன்றி, மீன் நிறைய புரதங்களை வழங்குகிறது, அதுவும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் வழங்குவது இதன் சிறப்பு. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் முக்கிய மூலமாக இருக்கிறது.

கொண்டைக்கடலை

நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான புரதத்துடன் கொண்டைக்கடலை காணப்படுகிறது. சுண்டலும் உங்க எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இதன் மூலம் எடை இழப்பில் புரதம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க புரத வகை உணவுகளையும் உங்க அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

 Suggested Reading: https://tamil.shethepeople.tv/society/how-to-be-confident-2059357 

 Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-a-period-calender-2059339 

 Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/benefits-of-maintaining-a-period-calender-2059335 

 Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/types-of-hair-cut-based-on-face-shape-2059328 

9 protein foods for weightloss
Advertisment