Advertisment

Benefits of drinking Hot water!

தண்ணீர் எப்படி குடிச்சா என்னங்க என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில். தண்ணீரை சூடாக குடிக்கும் பொழுது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் எடை குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

author-image
Pava S Mano
New Update
Hot water

Image is used for representational purpose only

தண்ணீரின் மகத்துவம் மற்றும் பயன்கள் அளவில் அடங்காதவை. ஒரு மனிதனின் உடம்பில் அறுபது சதவீதம் தண்ணீரால் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் தண்ணீர் தினமும் சரியான அளவில் குடிப்பது என்பது நம் உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுக்கும் உபயோகமாக இருக்கும். சிலர் அந்த விஷயத்தை தெரிந்து கொண்டு சரியான அளவில் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் தெரியாத சிலர் பல உடல் உபாதைகளை சந்திக்கும் பொழுது இதுதான் காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள். இப்பொழுது hot water குடிக்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்!

Advertisment
  • உடம்பின் செரிமானத்தை இது அதிகரிக்கிறது.

  • சூடான தண்ணீரை நாம் உட்கொள்ளும் பொழுது அது நேராக செரிமான பைப்பிற்குள் சென்ற பிறகு செரிமானத்தை தூண்டுகிறது மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

  • உணவின் சுவைக்காக நாம் இப்பொழுது பல வகையான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம் எனவே செரிமானத்தை சரியாக வைத்திருக்க சுடு தண்ணீர் மிகவும் முக்கியமானதாகும்

  • நம் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து கலோரிகளை நீக்குகிறது

  • Constipation இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் சுடுதண்ணீர் குடிப்பது அவசியம். 

  • இது செரிமானத்தை ஊக்கப்படுத்தி மலம் சுலபமாக வெளியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்

  • சுடுதண்ணீர் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்கிறது

  • இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

  • நமக்கு டென்ஷன் இருக்கும் பொழுது சுடு தண்ணீர் குடித்தால் அது குறையும் என்பது அறிவியல் உண்மையாகும்

  • ஜலதோஷம் பிடித்திருக்கும் சமயத்தில் சுடுதண்ணி குடிப்பதால் மூக்கடைப்பது நின்றுவிடும்

  • இப்பொழுது குளிர் காலமாக இருப்பதால் நீங்கள் சுடுதண்ணீரை குடிக்கும் பொழுது உங்கள் உடம்பிற்கு தேவையான நீரின் அளவு பராமரிக்கப்படும்

  • மேலும் குளிர் காலங்களில் சிலருக்கு குளிர் நடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உங்களின் உடல் உஷ்ணத்தை பராமரிப்பதற்கு சுடுதண்ணீர் இந்த சமயத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

  • நீங்கள் அதிகமாக வேலையால் மன அழுத்தம் சந்திக்கிறீர்கள் என்றால் நீங்கள் நாள் முழுவதும் சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் ஆகும்

  • உடல் வலி இருந்தால் கூட நீங்கள் சுடுதண்ணியை குடிக்கலாம். சுடுதண்ணீரில் குளிப்பதும் இத்தகைய சூழலில் உங்களுக்கு மிகவும் இதமாக இருக்கும்

  • நம் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு சுடுதண்ணி மிகவும் உறுதுணையாக இருக்கிறது

  • மேலும் பல் கூச்சம் பல்லில் ஏற்படும் ரத்த கசிவுகளுக்கு சுடுதண்ணீர் இதமாக இருக்கும்.

சுடுதண்ணியை இதமான சூட்டில் குடித்தால் போதும். அதன் வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் நீங்கள் குடித்தால் உடலுக்கு சில உபாதைகள் ஏற்படும். உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காப்பதற்கு சுடுதண்ணியை நீங்கள் தினமும் குடிக்கலாம்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-should-a-girl-behave-in-a-relationship-1565288

https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211

https://tamil.shethepeople.tv/health/love-spicy-food-know-the-after-effects-1675208

https://tamil.shethepeople.tv/health/good-guy-health-good-emotional-wellbeing-1675099

hot water
Advertisment