Advertisment

How should a girl behave in a relationship?

புரிதல் என்பதுதான் எந்த ஒரு உறவின் முக்கிய அங்கமாக இருக்கும். ஆனால் ஆண்களை எப்படி பெண்கள் புரிந்து கொள்ள வேண்டு,ம் எந்த விதத்தில் அவர்களின் உறவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிய சில டிப்ஸ் இதோ!

author-image
Pava S Mano
New Update
Relationship

Image is used for representational purpose only

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து உறவிற்குள் செல்லும் பொழுது இரு வேறுபட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி வெவ்வேறு வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் பொழுது பிரச்சினைகள் வருவது என்பது பொதுவான விஷயம்தான். ஆனால் அதனையும் தாண்டி இருவருக்கும் இருக்கும் புரிதல் தான் அந்த உறவை நீண்ட நாள் தக்க வைப்பதற்கான ஒரு பாலமாக இருக்கிறது. இதில் பெண்களுக்கு முக்கியமாக மனரீதியான குழப்பங்கள் என்பது கண்டிப்பாக அவர்கள் உடல் சூழலால் ஏற்படும். எனவே இதனை ஆண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஆண்களுக்கு வேலை சம்பந்தமான சில மன அழுத்தங்கள் இருப்பதால் அவர்கள் சற்று இறுக்கமானவர்களாகவே இருந்து விடுகிறார்கள். இதை பெண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இருவரையும் பொதுவாக பார்க்கும் பொழுது புரிதல் என்பதுதான் ஓர் உறவிற்கு முக்கியமான ஒன்றாகும். பெண்கள் எப்படி உறவில் புரிதலை வெளிப்படுத்துவது என்பதை இக்கட்டுறையில் காணலாம். How should a girl behave in a relationship?

Advertisment
  • எப்பொழுதும் ஆண்களின் வயதை விட பெண்களின் maturity level என்பது சற்று அதிகமாக இருக்கும் என்று மனோநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய சூழலில் நீங்கள் உறவிற்குள் இருக்கும் பொழுது உங்களின் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமாகும். நாம் வளர்ந்து விட்டோம் என்பதற்காக நீங்கள் எப்பொழுதும் வளர்ந்த பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களின் வீட்டு வேலைகளின் மேல் இருக்கும் சோர்வை நீங்கள் கணவரிடம் காட்ட நினைப்பதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். உங்களோடு சேர்ந்து அவர்களையும் வேலை செய்வதற்கான முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே ஆண்மகன் என்றால் வீட்டு வேலைகளை செய்யக்கூடாது என்ற சூழலில் அவர் வளர்ந்து இருப்பார்.

  • உங்கள் கணவருடைய நண்பர்களுடன் நீங்கள் சிறந்த உறவை மேம்படுத்தும் பொழுது உங்கள் கணவரை பற்றிய நிறைய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வருவதற்கு முன் அவரோடு பயணித்தது அவர்கள் தான். எனவே அவருக்கு யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறாரோ அவர்களுடன் ஒரு சிறந்த உறவினை நீங்கள் உருவாக்குங்கள்.

  • அவரை எந்த காரணத்திற்காகவும் மூன்றாம் நபரிடம் விட்டுக் கொடுக்காதீர்கள். மேலும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் அவர்களை ஏற்றுக் கொள்வதால் கண்டிப்பாக ஒருநாள் நீங்கள் என் என்னென்ன புரிந்து கொள்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களுக்காக அவர் கண்டிப்பாக மாறுவார்.

  • மேலும் உங்களின் ஈகோவை என்றைக்கும் உங்கள் கணவரிடம் காட்டாதீர்கள். ஏனென்றால் நீங்கள் உருவாக்கிய உருவா க்கப் போகின்ற வாழ்க்கை என்பது உங்கள் தனிப்பட்ட இருவருக்காக கிடையாது. நீங்கள் இருவரும் சேர்ந்துதான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இருவரிடம் இருக்கும் ஈகோவையும் தூக்கி எறிந்து விடுங்கள். உங்கள் குடும்பத்திற்காக தான் நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாழுங்கள்.

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/bangaru-adigalar-the-feminist-hero-1565114

Advertisment

https://tamil.shethepeople.tv/health/benefits-of-walking-10000-steps-a-day-1561345

https://tamil.shethepeople.tv/health/do-seeds-help-in-weight-loss-1563506

https://tamil.shethepeople.tv/health/frustrated-by-double-chin-do-this-exercise-immediately-1559371

 

How should a girl behave in a relationship
Advertisment