Advertisment

Benefits of Walking 10,000 steps a day!

உடல் ஆரோக்கியம் தான் ஒவ்வொரு மனித வாழ்விற்கும் முக்கியமான ஒன்றாகும். மேம்படுத்துவதற்கு அனைவரும் பல முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் நடைப்பயிற்சி. அதனால் ஏற்படும் பயன் என்ன?

author-image
Pava S Mano
New Update
Walking

Image is used for representational purpose only

உங்கள் உடம்பின் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும் மிகவும் எளிமையான ஒரு பயிற்சி இருக்கிறது என்றால் அதுதான் நடை பயிற்சி (walking). நீங்கள் நடப்பதன் மூலம் உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் நடக்கும் பொழுது உங்கள் நண்பர்களோடு சேர்ந்து அல்லது உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து நடக்கும் பொழுது மன ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது மற்றும் உங்கள் இருதயத்தின் பாதுகாப்பு அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

மனசோர்வை நீக்குகிறது:

நீங்கள் மிகவும் கடினமான ஒரு நாளை சந்தித்துள்ளீர்கள் என்றால் ஒரு பீஸ் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் போதும் என்று நினைப்பவர்கள் ஆக இருப்பீர்களானால் கலோரிகளே இல்லாமல் உங்களின் மனசோர்வை போக்குவதற்கு நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும். பத்து நிமிடம் நடந்த பின்னரே நீங்கள் ஒரு உற்சாகத்தை உணர்வீர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் அதிகம் கோபப்படுபவர்களாக இருந்தால் கூட நடைபயிற்சி உங்களை மாற்றும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் நீங்கள் நடக்கும்பொழுது உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது உங்கள் நண்பர்களோடு சேர்ந்து நடக்கும் பொழுது இன்னும் அந்த உறவின் பாலம் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் உங்கள் மனம் சந்தோஷமடையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடல் பராமரிப்பு:

Advertisment

நீங்கள் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்கும் பொழுது, உங்களுக்கு அது சிறந்த உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கின்றது. மேலும் காலையில் இருந்து நீங்கள் சாப்பிட்ட உணவின் கலோரிகளை எளிதாக கரைத்து விடலாம். ட்ரெட்மிலில் நடை பயிற்சி செய்வதை விட ஓபன் பேசில் நடை பயிற்சி செய்வதால் இயற்கையோடு இணைந்து இயற்கை காற்றையும் சுவாசித்து நம் மனம் மிகவும் குதூகலமாகிவிடும். நடப்பதற்கு முன்னர் சில மணி நேரமாவது வார்மப் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு கால் வலியோ மற்ற எந்த வழியும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. Speed walking செய்வதால் உடல் எடை பராமரிக்கப்படுகிறது. மேலும் உங்கள் இருதயத்திற்கு இது மிகவும் நல்லதாகும்.

தூக்கம் வருவதற்கான ஒரு துணை:

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இரவு நேரத்தில் சரியாக தூங்குவதற்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கிறது. பொதுவாகவே உடல்ரீதியான பயிற்சிகளை நாம் செய்யும் பொழுது நம் உடம்பில் மலடோனின் என்கின்ற ஒரு ஹார்மோன் சுரக்கும். இதுதான் தூக்கம் வருவதற்கு ஏற்ற ஹார்மோன் ஆகும். உடற்பயிற்சி இந்த ஹார்மோனை தூண்டுவதால் இரவு தூக்கம் இன்மை என்பது அறவே இருக்காது. உங்களின் மன அழுத்தத்தையும் தூக்கத்தையும் இது சரியான நிலைக்கு மாற்றிவிடும் என்பதே உண்மை.

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211

https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455

Advertisment

https://tamil.shethepeople.tv/news/clothes-to-wear-in-monsoon-1559303

https://tamil.shethepeople.tv/health/hidden-facts-you-should-know-about-atta-kneading-1557533





Walking
Advertisment