இந்தியாவைப் பொறுத்தவரை சப்பாத்தி என்பது காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு சத்தான உணவாக கருதப்படுகிறது. இந்தியாவின் பிரபல ரொட்டி வகைகளில் ஒன்றான சப்பாத்தி கோதுமை மாவில் தயார் செய்யப்படுகிறது. கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து அதனை உருண்டையாக ஒரு மாவு பதத்திற்கு கொண்டு வந்த பின்னர், சப்பாத்தி கட்டைகளை கொண்டு தேய்த்து தவாவில் சுட்டெடுத்தால் சப்பாத்தி ரெடி. சிலருக்கு சப்பாத்தி பிணைவது என்பது சுலபமாக இருந்தாலும் பலர் சப்பாத்தி பிணைவதை மிகவும் கடினமாக எண்ணுகிறார்கள். மேலும் சிலருக்கு சப்பாத்தி மென்மையாக வந்தாலும் பலருக்கு அப்படி வருவதில்லை என்பதே புகார். சப்பாத்தியை பொறுத்தவரை மாவு பதம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. மாவு சரியாக இல்லை என்றால் மென்மையான சப்பாத்திகள் கிடைக்காது.
Hidden facts you should know about Atta Kneading என்ன என்று பார்க்கலாம்:
-
நீங்கள் எப்பொழுதெல்லாம் சப்பாத்திக்கு மாவு பிணைகிறீர்களோ அப்பொழுது என்னை அல்லது நெய் ஊற்றி பிணையுங்கள். இதனால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
-
அதிக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிணைவதை தவிர்த்து விடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிணைவதே சரியாகும். சப்பாத்தி மாவு சற்று இலகுவாகிவிட்டால் தவாவில் போட்டு எடுக்கும் பொழுது சப்பாத்தி மிகவும் கடினமாகிவிடும்.
-
சப்பாத்தி மாவு பிணையும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிணையுங்கள். மேலும் 10 லிருந்து 15 நிமிடங்கள் ஆவது சப்பாத்தி மாவை நன்றாக பிணைய வேண்டும்.
-
மாவு பதத்தை அடைந்த பின்னர் அதன் மேல் என்னை அல்லது நெய்யை தடவி வையுங்கள். மேலே எண்ணெய் அல்லது நெய் தடவுவதால் சப்பாத்தியின் மேல் விரிசல்கள் வராமல் தவிர்க்கும்.
-
சப்பாத்தி மாவை தயார் செய்த பின்னர் air tight container இல் போட்டு விடுங்கள்.
-
ஒவ்வொரு முறையும் நீங்கள் கண்டெய்னரில் இருந்து சப்பாத்தி மாவை எடுக்கும் பொழுது அதனை cling film அல்லது அலுமினியம் பாயில் கொண்டு மூடி விடுங்கள்.
-
சப்பாத்தி மாவை செய்து முடித்த பிறகு ஈரத் துணியும் அல்லது மேலே குறிப்பிட்டது போல் cling film கொண்டு மூடி 30 நிமிடம் ஆவது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
-
சில சமயம் உங்களுக்கு ஒரே மாதிரியான சப்பாத்தியை சாப்பிட்டு போர் அடித்து விட்டது என்றால், அதில் உங்களுக்கு பிடித்த சிலவற்றை நீங்கள் அதை சேர்த்துக் கொள்ளலாம்.
-
உதாரணத்திற்கு palak சப்பாத்தி நீங்கள் செய்யலாம். Palak கீரையை அரைத்து அதை நீங்கள் சப்பாத்தி மாவு பிசையும் பொழுது கூடை சேர்த்தால் பாலக் சப்பாத்தி ரெடி ஆகிவிடும்.
-
சில குழந்தைகளுக்கு காய்கறியை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் பீட்ரூட் சப்பாத்தி செய்து கொடுங்கள். பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து அதை சப்பாத்தி மாவோடு கலந்தால் பீட்ரூட் சப்பாத்தி தயார்.
-
ஒரே மாதிரியான சப்பாத்தியை செய்வதற்கு இதுபோன்ற விதவிதமாக செய்தால் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவார்கள்.
-
இப்பொழுது multigrain சப்பாத்தி மிகவும் பிரபலமாகி வருகிறது எனவே நீங்கள் அதையும் கூட முயற்சி செய்து பார்க்கலாம்.
எந்த உணவாக இருந்தாலும் உங்கள் கைகளால் சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறும் பொழுது அதில் கிடைக்கும் திருப்தியை தனி தான்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/cooking-tips-and-tricks-for-beginners
https://tamil.shethepeople.tv/society/dangers-of-succulent-plants-1346930
https://tamil.shethepeople.tv/health/how-to-maintain-liver-health-1557088
https://tamil.shethepeople.tv/society/how-to-control-your-anxiety-1520573