Advertisment

How to control your Anxiety?

நீங்கள் இந்த கட்டுரையை படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு anxiety issues இருக்கிறது என்று அர்த்தம். எனக்கு இந்த பிரச்சனை இருந்து அதை சரி செய்ய நான் என்னென்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தேன் என்பதை இக்கட்டுறையில் தெளிவாக எழுதியுள்ளேன்.

author-image
Pava S Mano
New Update
Anxiety issues

Image is used for representational purpose only

இன்று வேலை காரணமாகவும், உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளாலும், இளம் வயதிலேயே anxiety issues வந்து விடுவதை பார்க்கிறோம். இதை மாற்றிக் கொள்வதற்கு நாம் முதலில் நம் மனதில் ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்க வேண்டும். சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் கோபம் வரும் என்று சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் ஆழ்ந்து கவனிக்காமல் இருந்திருப்பார்கள். இதனால்தான் அதனின் காரணம் புரியாமல் கோபம் வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதை பொறுமையாக யோசித்துப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஏற்பட்ட ஏதோ ஒரு காயத்தால் தான் இந்த anxiety issues வரும். இதை சரி செய்ய நம்மால் மட்டுமே முடியும். சிறந்த வாழ்க்கை முறை தான் இதற்கான ஒரே தீர்வாகும்.

Advertisment

எப்படி anxiety ஐ control செய்வது?

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அந்த சம்பவத்தை மிகவும் ஆழ்ந்த சிந்திக்காமல் மேலோட்டமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதாவது அந்த பிரச்சனையின் மீதான உங்கள் பார்வையை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். இதனால் நம் உடம்பிற்கு தான் நல்லது. மேலும் ஒரு இடத்தில் உங்களுக்கு கோபம் வருவது போல் ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால் அந்த இடத்தில் இருந்து வந்து விடுங்கள். அங்கேயே இருந்து உங்கள் கோபத்தின் தீவிரத்தை அதிகரித்துக் கொள்வதற்கு பதில் நீங்கள் அங்கிருந்து விலகி வந்து விட்டீர்கள் என்றால் இன்னும் உங்கள் கோபத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் கோபத்தை நீங்களே குறைத்துக் கொள்ள மற்றும் சமாளித்துக் கொள்ள இது ஒரு வழியாகும்.

Kamal Hassan சொன்ன ஒரு Tip:

Advertisment

Anxiety issues

பூனை பிக் பாஸ் சீசன் இல் கமல்ஹாசன் அஸீம் இருக்கு ஒரு அறிவுரை கூறினார். அது என்னவென்றால் உங்களுக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு 100 வரை எண்ணுங்கள் என்று கூறினார். இதை நானும் என் வாழ்வில் பயன்படுத்தி உள்ளேன் நிஜமாகவே இது நடக்கிறது. எனக்கு கோபம் வரும் பொழுது அந்த இடத்தை விட்டு விலகி தனிமையாக ஒரு இடத்தில் நின்று என் மனதில் ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுவேன். இதனால் கோவமும் குறைகிறது மேலும் நம் மனதும் ஒரு நிலையாக இருப்பதால் அந்தப் பதட்டத்தில் இருந்து வெளிவருவதற்கு ஆறுதலாக இருக்கிறது. கோபத்தை மற்றவர்கள் மேல் காட்டாமல் இருக்க இது ஒரு சிறந்த யுக்தியாகும்.

நாவினால் சுட்ட வடு:

Advertisment

 

நான் கோபத்தில் பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், திருவள்ளுவர் சொல்லியது போல "தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்பதற்கு இணங்க நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தி விட்டால் அந்த காயத்திற்கு மருந்தே கிடையாது என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு கோபமாக இருக்கும் பொழுது நாம் அமைதியாக இருந்து விட வேண்டும் அப்படி நம்மையும் மீறி பேச்சு வருகிறது என்றாலும் மேலே நான் கூறி இருந்தபடி தனியாக சென்று சற்று நேரம் அமைதியாக நின்று விடுங்கள். இதுவே உங்களையும் உங்கள் கோபத்தினால் மற்றவர்களும் பாதிக்காமல் இருப்பதற்கான சிறந்த வழியாகும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/societies-view-on-baby-planning-1519195

https://tamil.shethepeople.tv/health/back-pain-relief-tips-1518462

https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-1515246

https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390

 

anxiety issues
Advertisment