Advertisment

Back Pain relief - இவ்ளோ சுலபமா?

இன்று ஒவ்வொருவரின் வேலை நிமித்தமாக அமர்ந்தே வேலை பார்க்கும் சூழலில் உள்ளோம். இதனால் பல உடல் ரீதியான பிரச்சனைகள் வருகிறது. முக்கியமாக முதுகு வலி ஏற்படுகிறது. இதை சரி செய்ய அன்றாட வாழ்க்கை முறை மாற்றமே போதுமானது!

author-image
Pava S Mano
New Update
Back pain

Image is used for representational purpose only

நீங்கள் பல காரணங்களுக்காக தினமும் முதுகு வலியை அனுபவிப்பவர்கள்? நாம் தினமும் செய்யும் ஏதோ ஒரு வேலையாளோ அல்லது செய்ய முடியாமல் இருக்கும் சில விஷயங்களாலோ முதுகு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மருத்துவர்களிடம் சென்ற பிறகு x ray எடுங்கள் என்று சொல்லி அதற்காக மாத்திரைகளும் மருந்துகளும் பரிந்துரைப்பார்கள். ஆனால் தினசரி வாழ்வில் நாம் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே அதன் தாக்கத்தை முழுமையாக குறைக்க முடியும். சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த மாதிரியான வலிகளில் இருந்து உங்களை காக்கும்!

Advertisment

Start your day with Stretches:

தினமும் காலையில் எழுந்த உடனேயே உங்கள் உடம்பை நன்றாக stretch செய்யுங்கள். முதுகு முதல் இடுப்பு வரையில் உள்ள அனைத்து எலும்பும் இதனால் நன்றாக வளைந்து கொடுக்கும். Cat to cow stretch என்று சொல்லுவார்கள் இதனை 10 நிமிடங்கள் ஆவது திரும்பத் திரும்ப செய்யுங்கள். இடுப்பு மற்றும் முதுகு சார்ந்த stretch செய்து பழகிக் கொள்ளுங்கள்.

Heels பயன்படுத்துவது குறைத்துக் கொள்ளுங்கள்:

Advertisment

காலணிகள் என்று வந்துவிட்டால் நாம் உடைக்கு தகுந்தவாறு உயரத்துக்கு தகுந்தவாறு நமக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை தான் தேர்ந்தெடுப்போம். நீங்கள் சரியான காலணியை தேர்ந்தெடுக்க வில்லை என்றால் உங்களுடைய நடக்கும் முறை என்பது மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் உங்கள் ஜாயிண்ட் இல் ஏற்படும் வலி அதிகரிக்கும். இதனால் முதுகு வலி  ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நடைப்பயிற்சி செய்யுங்கள்:

நடப்பது என்பது உங்கள் இருதயத்திற்கு மட்டும் நல்லது கிடையாது. அதைத் தாண்டி நடப்பதால் உடலில் உள்ள பல உறுப்புகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது. நம் தசைகளில் ஏற்படும் தளர்வுகளை நடைப்பயிற்சி மூலம் சரி செய்யலாம். தினமும் சாப்பிட்ட பிறகு கூட அரை மணி நேரம் கழித்து ஒரு பத்து நிமிடம் நடந்தாலே போதும்.

Advertisment

Position ஐ மாற்றுங்கள்:

ஒரே இடத்தில் ஒரே மாதிரி பொசிஷனில் அதிக நேரம் நிற்கவோ அல்லது உட்காரவோ செய்யாதீர்கள். இதனால் அதிகமான எதிர்மறை விளைவுகள் ஏற்படும். உங்கள் முதுகு எலும்பிற்கு இதனால் வரும் விளைவுகள் அதிகம். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் உங்கள் பொசிஷனை மாற்றிக் கொண்டே இருங்கள்.

Meditation செய்யுங்கள்:

Advertisment

மூச்சுப் பயிற்சி என்பது நம் உடலில் இருக்கும் மனதிற்கும் மிகவும் நல்லதாகும். முதுகு வலி நீங்குவதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும். தினமும் 5 லிருந்து 10 நிமிடம் ஆவது மூச்சு பயிற்சி செய்யுங்கள். Back pain Relief சுலபமே!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/how-to-get-rid-of-dark-circles-1516351

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455

https://tamil.shethepeople.tv/health/how-to-handle-digestion-problem-1508413

https://tamil.shethepeople.tv/health/hip-pain-yoga-1424551

Back pain relief
Advertisment