Dark Circle எப்படி சரி செய்வது?

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. அதை சரியாக பின்பற்றவில்லை என்றால் பல உடல் ரீதியான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு அடியில் கருவளையம் வருவதற்கு. எப்படி சரி செய்வது?

author-image
Pava S Mano
New Update
Dark circles

Image is used for representational purpose only

Dark Circle என்பது நம் உடம்பு சோர்வாவதாலோ அல்லது வயசாவதாரோ ஏற்படும். அதனால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். ஆனால் இன்று பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கிறது. ஆனால் சிலருக்கு இது எப்படி ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. 

எதனால் dark Circle வருகிறது?

  • வயது:

Advertisment

உங்கள் கண்களுக்கு கீழ் கருவளையம் வருவதற்கு காரணம் உங்கள் வயதாக கூட இருக்கலாம். வயதாக ஆக ஆக உங்கள் சருமம் மெல்லிசாக மாறிவிடும். மேலும் சருமத்தின் புளிப்புச் சத்து குறைந்து கொண்டே போகும். இதனால் சருமத்தை பொலிவாக வைத்திருக்கும் collagen குறைந்த நம் சருமத்தின் அடியில் இருக்கும் டார்க் ரத்தக்குழாய்கள் அதிகமாக தெரிவதற்கு வழி வகுக்கிறது. 

  • சோர்வு: Dark circles

நம் உடம்பிற்கு தேவையான தூக்கம் கிடைக்கவில்லை என்றாலும் நம் சருமம் சோர்வாக காணப்படும். இதனால் கூட சருமத்தின் அடிப்பகுதியில் இருக்கும் ரத்தக்குழாய்கள் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். நாம் நன்றாக தூங்கவில்லை என்றால் நம் கண்களுக்கு கீழ் ஒரு நீர் நிலை உருவாகும். இதனால் கூட கண்கள் வீங்கியது போல் தெரியும்.

  • கண்ணை உருத்துவது:

Advertisment

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இன்று செல்போன் இருக்கிறது. அன்பை விட இன்று செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. இது ஒரு வகையான தொழில்நுட்பம் முன்னேற்றம் என்று பார்த்தாலும், மற்றொருபுறம் இதனால் கண்களுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது. நாம் தொலைக்காட்சி மற்றும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் கண் களுக்கு அடிப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய்கள் பெரிதாவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் கூட கருவளையம் உண்டாகலாம்.

நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் சில ஆரோக்கியமற்ற மாற்றங்களால் தான் நாம் நோய்வாய் படுகிறோம். எனவே வாழ்க்கை முறை மாற்றம் என்பது ஆரோக்கியமான வகையில் இருப்பது அவசியம். கண்களில் ஏற்படும் கருவளையத்தை நம்மால் கண்டிப்பாக சரி செய்ய முடியும். இதை எப்படி செய்யலாம்?

  • நல்ல உறக்கம்:

உறக்கம் மற்றும் சோர்வின்மை உடம்பிற்கு மிகவும் தேவையாகும். அது சரி இல்லை என்றால் கண்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உடம்புக்கும் பிரச்சனையே ஆகும். எனவே தினமும் எட்டு மணி நேர தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகும். தூங்கும் பொழுது தலையணையை சற்று உயரமாக வைத்து தூங்கினால் அடி கண்ணில் வீங்காமல் இருக்கும்.

  • வெள்ளரிக்காய்:

Advertisment

தினமும் இரண்டு முறையாவது வெள்ளரிக்காவை துண்டுகளாக வெட்டி அதனை கண்களில் 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதனால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுவதோடு, கருவளையம் நீங்கும்.

  • பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின் E:

 நீங்கள் உறங்குவதற்கு முன் பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின் E கலவையை உங்கள் கருவளையத்தில் போட்டு மசாஜ் செய்யுங்கள். பின் காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். தினமும் இதை நீங்கள் செய்வதால் கண்டிப்பாக கருவளையம் குறையும்.

 தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் சரியாக தண்ணீர் குடிக்க வில்லை என்றால் கூட கருவளையம் ஏற்படும். எனவே தினமும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது குடித்து விடுங்கள். இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றத்தால் எந்த நோயும் வராமல் தவிர்க்க முடியும்.

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/foods-to-boost-vitamin-d-1513047

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455

https://tamil.shethepeople.tv/health/nail-maintenance-tips-1510479

https://tamil.shethepeople.tv/health/improve-uterus-health-1423384



dark circle