Advertisment

Nail Maintenance Tips

நாம் ஜீன்ஸ் படத்தில் "நகம் என்ற கிரீடம் அதிசயமே" என்ற வரியை கேட்டு வியந்திருப்போம். அப்படி நம் நகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்!

author-image
Pava S Mano
New Update
Nail Maintenance

Image is used for representation purpose only

Nail Maintenance என்பது நம் அனைவரும் செய்ய தவறுகின்ற ஒரு விஷயமாகும். ஆனால் நம் விரல்களின் அடுக்குகளில் இருக்கும் அழுக்கில் எண்ணிலடங்கா பாக்டீரியா இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. நம் நகத்தை பராமரிப்பதன் மூலம் நம் உடம்பிற்கு ஆரோக்கியத்தை கூட்டுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

என்ன செய்யலாம்?

Nail Maintenance

  • உங்கள் நகங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள். அடிக்கடி உங்கள் கை தண்ணீரில் பட்டால் நகங்கள் விரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பாத்திரங்களை கழுவும் பொழுது gloves அணிந்து கழுவுங்கள். ஏதேனும் தீவிரமான ரசாயன பொருட்களை தொடுவதற்கு முன் gloves அணிந்து கொள்ளுங்கள்.

  • மேலும் உங்கள் நகங்களை கூர்மையான manicure kit கொண்டு சரியாக மற்றும் வடிவாக வெட்டுங்கள்.

  • நகம் வெட்டியபின் moisturizer கொண்டு இதமாக massage செய்யுங்கள்

  • நகத்தின் மேல் hardener போட்டுக் கொள்வதால் நகங்கள் வலுவாக இருப்பதற்கு உதவுகிறது

  • உங்களின் நகம் பலவீனமாக இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால், பயோட்டின் எனப்படும் ஊட்டச்சத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் நகம் வலுவாக மற்றும் சீக்கிரம் உடையாமல் இருக்கும்.

  • நீங்கள் எப்படி உங்கள் முடியை பராமரிக்கிறீர்களோ அப்படியே உங்கள் நகங்களையும் சரியாக சுத்தம் செய்து மற்றும் சரியான வடிவில் வெட்டி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • குளிர் காலங்களில் நகங்கள் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அந்த சமயத்தில் hand gloves போட்டுக் கொள்வது அவசியம்.

  • உங்கள் நகங்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதற்கு எப்பொழுதும் moisturize செய்யுங்கள்

  • நீங்கள் உபயோகிக்கும் நெயில் கட்டர் மற்றும் மற்ற பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்து மாற்றிக் கொள்ளுங்கள்

  • Nail polish remover பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். வேறு வழி இல்லை என்றால் non-acetone remover ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  • நகங்கள் வளர்வதை நீங்கள் பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்

  •  உங்களின் நகம் மென்மையாக இருந்தால் சோப் மற்றும் ஹேண்ட் வாஷ் அடிக்கடி பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

  • துணி துவைக்கும் போதும் கையுறை அணிந்து கொள்ளுங்கள்

  • வீட்டில் சமைக்கும் பொழுது முக்கியமாக நகங்களை பராமரித்துக் கொள்ளுங்கள் மிகவும் அவசியமாகும்

  • தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீரை குடிக்கும் பொழுது நகத்தின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது

Advertisment

 என்ன செய்யக்கூடாது?

Nail maintenance

  • உங்கள் விரல் நகங்களை கடிப்பதை நிறுத்துங்கள். மேலும் சுற்றியுள்ள தோல்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் நகங்களை கடிப்பதன் மூலம் இடுக்குகளில் இருக்கும் பாக்டீரியா உங்கள் வயிற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

  • மேலும் அதிகமாக nail polish மற்றும் nail remover ஐ பயன்படுத்தாதீர்கள்

  • நகசுத்தி வந்துவிட்டால் மஞ்சள் மற்றும் மருதாணியை அரைத்து வைத்துக் கொள்ளலாம்

  • நகங்களை அழகாக ட்ரிம் செய்து கொள்ளுங்கள்

  • வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

  • நகத்தின் நிறத்தில் வேறுபாடு தெரியும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதன் தீர்வை கண்டறியுங்கள்

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/travel-tips-during-periods-1509939

https://tamil.shethepeople.tv/society/how-to-move-on-after-divorce-1425842

Advertisment

https://tamil.shethepeople.tv/news/how-to-improve-work-life-balance

https://tamil.shethepeople.tv/health/how-to-handle-digestion-problem-1508413

 

Nail Maintenance
Advertisment