இன்று நம் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறிவிட்டது. வேலையின் தாக்கத்தால் நம் உடம்பையும் சரி மனதையும் சரி சரியாக பார்த்துக் கொள்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் நம் உடம்பில் அஜீரணக் கோளாறு (digestion problem) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்று பல பேர் விதவிதமான உணவுகளை ருசி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுவையான பல உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அதனை ஜீரணம் செய்வதற்கு ஏற்ற உடற்பயிற்சியை நாம் செய்கிறோமா என்று கேட்டால் அதில் சில பேர் இல்லை என்று தான் சொல்வார்கள். சரியான நேரத்தில் அளவான உணவை சாப்பிடாமல் இருப்பதால் இது போன்ற அஜீரணக் கோளாறுகள் வருகிறது. எனவே அதனை போக்க என்ன வழிகள் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது!
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
தினசரி 20 இல் இருந்து 35 கிராம் அளவிலான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நம் உடம்பிற்கு தேவை. எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் பயிர் வகைகள் மற்றும் நட்ஸ் வகைகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நம் இதயத்திற்கும் ரத்த சர்க்கரை அளவு சமநிலையாக இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் இத்தகைய உணவை சாப்பிடும் பொழுது பசி சீக்கிரம் அடங்கி வயிற்றில் இனி சாப்பிடுவதற்கு இடம் இல்லாதது போன்ற உணர்வு தோன்றுவதால், நான் நான் சற்று குறைவாக உணவை எடுத்துக் கொள்வோம்.
Chewing gum:
நாம் சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்களை பார்த்திருக்கும். எப்பொழுதும் chewing gum ஐ மென்று கொண்டு தான் இருப்பார்கள். இது style என்று நினைத்து பல பேர் காரணம் தெரியாமல் இதனை சாப்பிட்டு வந்தனர். ஆனால் உண்மையான காரணம் நாம் chewing gum ஐ மென்று கொண்டே இருப்பதால் நம் வாயில் எச்சில் சுரக்கிறது. இது நம் உடம்பில் இருக்கும் அமிலத்தை சமம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது. இதனால் எந்த உணவும் சீக்கிரம் ஜீரணம் ஆகிறது.
Weight loss:
நாம் அதிக எடையுடன் இருப்பதால் கூட அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை போக்குவதற்கு உடல் எடையை குறைப்பது அவசியம். சராசரி உடல் எடையை விட அதிகமாக இருப்பவர்களுக்கு இது போன்ற அஜீரணக் கோளாறு கண்டிப்பாக இருக்கும். எனவே அதற்கு ஏற்ப உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி உடல் எடையை குறைப்பது சிறந்த தீர்வாகும்.
குறைவாக சாப்பிடுங்கள்:
நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து புரதச்சத்து மற்றும் நீர்ச்சத்தை இருக்கக்கூடிய உணவை தேர்ந்தெடுத்து சமமான அளவில் உட்கொள்ளுங்கள்.
தண்ணீர் அவசியம்:
தினமும் 8 glass அளவில் நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம் ஜீரண சக்தி அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடலுக்கு தேவையான நீரை சரியாக எடுத்துக் கொள்ளவும். மேலும் பல சாறுகளாக கூட நீங்கள் நீரை எடுத்துக் கொள்ளலாம்.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/hip-pain-yoga-1424551
https://tamil.shethepeople.tv/health/foods-to-control-cholesterol-1386529
https://tamil.shethepeople.tv/health/benefits-of-flax-seeds-1385723
https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141