வீட்டிலே செய்யக்கூடிய hip pain yoga:

பெண்கள் குறிப்பிட்ட வயது அடைந்த பிறகு அவர்களுக்கு வரும் Hip pain ஐ சாதாரணமாக வழியாக எடுத்துக்கொண்டு அதோடு வாழ பழகி விடுகின்றனர். ஆனால் அதனால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கிறது. எனவே இடுப்பு வலி வரும் முன்னரே இந்த யோகாவை தினமும் செய்ய வேண்டும்!

author-image
Pava S Mano
New Update
Hip pain

Image is used for representational purpose only

பெண்களுக்கு ஒரு வயதை கடந்து விட்டால் இடுப்பு வலி சாதாரணமாக வந்துவிடும். ஆனால் இன்று பெண்களுக்கு இருக்கும் பல்வேறு வேலையின் காரணமாக இடுப்பு வலி வருகிறது. நிறைய பேர் அமர்ந்தே வேலை பார்ப்பது கூட இதற்கான காரணங்களில் ஒன்றாகும். மேலும் சிலர் சரியாக உட்காராமல் இருப்பதாலும் இடுப்பு வலி வரும். கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் இடுப்பு வலி வரும். இடுப்பில் உள்ள தசைகள் வலுவிழந்தால் அதுவும் ஒரு காரணம். இதனை சரிசெய்யாக இருந்தால் இந்த வலி கால் தசைகளுக்கும் சென்று விடும். எனவே ஆரம்பத்திலேயே இதனை குணப்படுத்த நம்மால் முடிந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். குறிப்பாக யோகாவில் இடுப்பிற்கு செல்லக்கூடிய தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக செலுத்துவதற்கான ஆசனங்கள் நிறைய இருக்கிறது. அதில் சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.

Advertisment

Baddha Konasana:

Baddha Konasana

இந்த ஆசனத்தை செய்யும் பொழுது நம் இடுப்பிற்கு தேவையான அனைத்து தசைகளும் முழுமையாக வேலை செய்து உடம்பிற்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. ஏதாவது எலும்பு பிணைப்புகளில் தடை இருந்தால் அதனை சரி செய்வதற்கும் இந்த ஆசனம் மிகவும் உதவியாக இருக்கிறது. தினமும் இந்த ஆசனத்தை பயிற்சி செய்தால் முதுகு மற்றும் இடுப்பிற்கு தேவையான ஆறுதலை கொடுத்து பெண்களின் பாலின உறுப்புகளை வலுவூட்டுகிறது.

Ardha Matsyendrasana:

Ardha Matsyendrasana

உடலின் மேல் பக்கத்தை நன்றாக stretch செய்யும்பொழுது முதுகிலும் இருக்கு சிறந்த flexibility ஐ கொடுக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான detox ஆக இந்த ஆசனம் செயல்படுகிறது. உள் உறுப்புகள் சரியாக வேலை செய்வது மட்டுமின்றி தோள்பட்டை இடுப்பு கழுத்து மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு தேவையான ஊக்குவிப்பை இந்த ஆசனம் கொடுக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சோர்வு மற்றும் முதுகு வலிக்கு இந்த ஆசனம் மிகவும் நன்மை தருகிறது.

Ananda Balasana:

Ananda Balasana

நம் உடம்பில் இருக்கும் இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகளை முழுவதுமாக stretch செய்வதற்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும். நம் உடம்பின் ஒட்டுமொத்த stamina வை உயர்த்துவது மட்டுமல்லாமல் நம் உடம்பின் ரத்த ஓட்டத்தையும் அதிகரித்து இடுப்பில் உள்ள தசைகளையும் இது tone செய்கிறது. நம் மனதை அமைதிப்படுத்துவதற்கான தன்மையும் இந்த யோகாவில் உள்ளது.

Advertisment

Gomukhasana:

Gomukhasana

இந்த ஆசனத்தை செய்யும் பொழுது கால்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கிறது. இதனால் முதுகெலும்பு இந்த stress ஐ எடுத்துக்கொண்டு தசைகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. இந்த ஆசனத்தை செய்யும் பொழுது உடலுக்கும் மனதிற்கும் ஒரு தளர்வான உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே இடுப்பு வலி நீங்கி விடுகிறது. இடுப்பு மட்டுமில்லாமல் உங்கள் தொடைகளில் மற்றும் கால்களில் உள்ள வலியை குணப்படுத்தவும் உதவியாக இருக்கிறது.

Anjaneyasana:

Anjaneyasana

அதிகமாக உட்கார்ந்த வேலை செய்யும் நபர்களுக்கு இந்த ஆசனம் கண்டிப்பாக செய்ய வேண்டியது. இதை தினமும் செய்வதால் இடுப்பு எலும்பு தளர்ந்து இடுப்பில் உள்ள தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றது.

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/improve-uterus-health-1423384

https://tamil.shethepeople.tv/health/foods-to-control-cholesterol-1386529

Advertisment

https://tamil.shethepeople.tv/health/benefits-of-flax-seeds-1385723

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

hip pain