Advertisment

How to move on after Divorce?

Divorce என்பது மிகவும் வலியுடைய விஷயம்தான். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி தனக்கென்று ஒரு வாழ்வை உருவாக்குவதற்கு ஒவ்வொரு பெண்ணும் எத்தனை சவால்களை தாண்டி வருகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். விவாகரத்துக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

author-image
Pava S Mano
New Update
Divorce

Image is used for representational purpose only

முன்னொரு காலத்தில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் காதல் திருமணம் என்றாலே அதை தாழ்வாக பார்க்கக்கூடிய மனப்பான்மை அதிகமாக இருந்து வந்தது. அதிலும் ஒரு பெண் விதவை ஆகிறாள் என்றால் அவளுடைய வாழ்வு வீட்டிலேயே முடக்கப்பட்டது. இல்லை அவள் கணவரை புரிந்து வாழ்கின்ற பெண்ணாக இருந்தால் அவளின் மேலான சமூக பார்வை என்பது கொடூரமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து வந்த நம் பெற்றோர்களும் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறுவதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் விவாகரத்துக்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்களை நம்மால் காண முடிகிறது. இது இந்த சமூகத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான்.

Advertisment

பலவித காரணங்களால் ஏற்படும் விவாகரத்து!

விவாகரத்து ஆன ஒவ்வொரு பெண்ணையும் ஏன் நீங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தீர்கள் என்று கேட்டால் ஆயிரம் காரணங்களை அவள் வைத்திருப்பாள். சந்தோஷமாக தன் கணவனுடன் வாழப் போகிறாள் என்ற கனவோடு செல்லும் ஒவ்வொரு பெண்ணும், அங்கு எத்தனை சிரமங்களை பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். சிலர் அந்த சிரமத்தோடு பழகி adjust செய்து கொண்டு வாழ்ந்து பல மனநல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். ஆனால் சிலரோ தங்களுக்கென்று சுயமரியாதை இருக்கிறது என்று அந்த திருமணத்தில் இருந்து விலகுகின்றனர். நாம் ஒருவரை பார்த்த ஏளனமாக பேசும் முன் அவர்கள் வாழ்க்கையில் எத்தனை தாண்டி வந்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு divorcee க்கு பின் ஒவ்வொரு சொல்லப்படாத கதை இருக்கிறது. ஆனால் அதனை எடுத்துக் கொள்ளும் கண்ணோட்டம் இன்று மாறியுள்ளது. நாம் சில வருடங்கள் முன்னர் பார்த்தால், விவாகரத்து செய்வது என்பதே ஒரு தவறான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று எந்த காரணத்திற்காகவும் நம் சுயமரியாதையை விட்டு வாழ வேண்டும் என்பதை புரிந்து கொண்ட பெண்கள் விவாகரத்தை மேற்கொள்கின்றனர். அன்று போல் முடங்கி கிடக்காமல் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து சுயமாக சம்பாதித்து அவர்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகின்றன.

வித்தியாசமான அணுகுமுறை!

Advertisment

Divorce

Wedding photoshoot, pre and post wedding photoshoot, pregnancy photoshoot, baby photoshoot என்றெல்லாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் என்னை வியக்க வைத்தது, சமீபமாக ஒரு பெண் நடத்திய divorce photoshoot தான். முன்பெல்லாம் விவாகரத்து என்றாலே அதை வெளியில் சொல்வதற்கு தயங்குவார்கள். ஆனால் இன்று அதை ஒரு photoshoot அதை எடுத்த சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். 

எனவே பெண்கள் அவர்களுக்கான வாழ்வை வாழ தொடங்கி விட்டனர். பெண்கள் என்றால் படிக்கக் கூடாது சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும், திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை தான் பார்த்துக் கொள்ள வேண்டும் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும், பின் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும், என்று பல கருத்துக்கள் பெண்களின் மேல் திணிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அவை அனைத்தையும் உடைத்துக் கொண்டு பெண்கள் அவர்களுக்கென ஒரு சுயமரியாதையையும் அவர்களுக்கென தனிப்பட்ட பெயரையும் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்களின் மேல் வைக்கப்படும் விமர்சனத்தையும் வித்தியாசமான அணுகு முறையில் கையாண்டு வருகின்றனர். 

Advertisment

விவாகரத்துக்கு பின் என்ன செய்யலாம்?

உங்களுக்கென்று சுய சம்பாத்தியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் மனநலத்தில் பாதிப்பு இருக்கும். எனவே உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை காட்டுங்கள். மேலும் உங்களுக்கு என்னென்ன சொத்துக்கள் வரவேண்டும் மற்றும் குழந்தை இருந்தால் அவர்களை பார்த்துக் கொள்வது எப்படி என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை மற்றும் பயத்தை நீங்கள் நம்பும் ஒருவரிடம் கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள். மேலும் உங்களின் உணர்ச்சிகள் சமமாவதற்கு முன் உங்கள் முன்னால் கணவரிடமோ மனைவியிடமோ பேசுவதை தவிருங்கள். விவாகரத்துக்கு பின் வாழ்க்கை இருக்கிறது. அதை எப்படி மாற்றி அமைப்பது என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/choose-between-career-and-marriage-1425614

https://tamil.shethepeople.tv/society/how-to-handle-long-distance-relationship-1418095

https://tamil.shethepeople.tv/society/how-to-handle-relationship-breakup-1385371

https://tamil.shethepeople.tv/society/healthy-relationship-green-flags-1381170





divorce
Advertisment