ஒரு பெண் தன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவளுக்கென்று ஒரு வேலையை தேடி financial Independence ஐ அவள் வாழ்வில் அமைத்துக் கொள்ள உரிமை இருக்கிறதா என்று கேட்டால், ஓரளவுக்கு மனநிலை மாறி உள்ளது ஆனால் இன்னும் நிறைய பெண்கள் திருமணத்திற்காக அவர்களின் career ஐ தியாகம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு பெண் படிப்பை முடித்து விட்டால் என்றால் இந்த சமூகமும் சரி அவர்களின் பெற்றோர்களும் சரி, எப்படி திருமணப் பேச்சு தொடங்கலாம் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு முன் அவளுக்கென்று ஒரு வேலை அவளுக்கென்று ஒரு சம்பாத்தியம் வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆண்களை சம்பாதிக்க சொல்லி திணிக்கும் இந்த சமூகம் ஏன் பெண்களுக்கு அந்த உரிமையை கொடுப்பதில்லை?
அது அவளின் சுய விருப்பம்!
படிப்பிற்குப் பிறகு திருமணம் தான் வாழ்க்கை என்னும் எண்ணம் பெற்றோர்களால் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் திணிக்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே திருமண வாழ்க்கைக்காக ஒரு பெண்ணை இந்த சமூகம் தயார் செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த நிலை ஒரு ஆணிடம் இருப்பதில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம்தான் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி என்றால் பெண்ணை தயார்படுத்தும் என்ற முகம் ஏன் ஒரு ஆண்மகனை அதற்காக தயார்படுத்துவது இல்லை? ஆண் என்றால் சம்பாதிக்க வேண்டும் பெண் என்றால் சமைக்க வேண்டும் இந்த மனநிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஆண் தனக்கான பாதையை நோக்கி தைரியமாக செல்வதற்கு இச்சமூகம் ஒரு வழியில் உறுதுணையாக இருக்கிறது. ஆனால் இதே சமூகம் ஒரு பெண் படிப்பை முடித்த பிறகு வேலையை தேடினால் என்றால், உன் வேலைக்கேற்றவாறு மணமகனை நாங்கள் எவ்வாறு தேடுவது என்று தான் கேட்கிறார்கள்?
இது யாருடைய தவறு? படிப்பை முடித்த பிறகு கேரியர் ஆ திருமணமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தப் பெண்ணின் விருப்பமே தவிர, அதில் குறுக்கே நிற்க யாருக்கும் உரிமை கிடையாது.
மாற வேண்டிய மனநிலை:
படிப்பை முடித்த பிறகு ஒரு பெண்ணை திருமணத்திற்காக தயார்படுத்தும் இச்சமூகம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு வேலைதான் முக்கியம் என்று ஏன் கற்றுக் கொடுப்பதில்லை? இன்னாரின் மனைவி என்று சொல்வதற்கும் இந்த நிறுவனத்தில் இந்த position இல் வேலை பார்க்கிறார் என்று சொல்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் அவளின் career ஐ வளர்த்துக் கொள்ள அவள் நினைத்தால் அதற்கான சந்தர்ப்பத்தையும் இட் சமூகம் கொடுப்பதில்லை. பல்கலைக்கழகங்களில் தங்கப்பதக்கம் வாங்கிய எத்தனையோ பெண்களின் நிலைமை இன்று சமையலறையில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் சமூகமா இல்லை சமூகத்தின் பிடியால் மாட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பெற்றோர்களா? 25 வயதை தாண்டி விட்டால் ஒரு பெண்ணை ஏன் இன்னும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்று கேள்வியை எழுப்பும் சமூகம், பெண் படிப்பை முடித்து விட்டாலே எப்பொழுது வேலைக்கு செல்ல போகிறார் என்று கேட்பவரின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது. இந்த மனநிலை மாறுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரியாது. பல நகரங்களில் இந்த நிலை சற்று மாதிரி இருந்தாலும் இன்னும் கிராமங்களிலும் town இளும் இந்த நிலை மாறவே இல்லை.
Career தான் முக்கியம்!
பெண்ணானவள் வீட்டிலேயே தான் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை தான் பார்க்க வேண்டும், சமையலை அவள் மட்டுமே செய்ய வேண்டும், இன்னும் எண்ணம் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நம் பெற்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு நாம் வாழும் வாழ்க்கை முறை வேறு. ஒருவேளை அவர்கள் நம்முடைய வாழ்க்கை முறையை வாழ்ந்து இருந்தால் இந்த தலைமுறையினருக்கு கேரியர் ஐ பற்றிய முக்கியத்துவமும் விழிப்புணர்வும் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் நம் பிள்ளைகளுக்கு பாலின சமத்துவத்தையும் படிப்பிற்குப் பிறகு வேலை பார்ப்பதும் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆண் என்றால் படிப்பை முடித்த பிறகு சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை பெண் என்றால் படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் அது அவர்களின் சுய விருப்பமாகும். அதனை மதிப்பது தான் உத்தமம்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-long-distance-relationship-1418095
https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923
https://tamil.shethepeople.tv/society/teach-your-kids-how-to-face-failure-1381436
https://tamil.shethepeople.tv/society/8-things-you-should-have-in-your-handbag-1377354