நாம் வாழ்வில் வெற்றியை சந்திக்கும் நாட்கள் குறைவு. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்காக தினமும் தோல்வியை சந்தித்து கொண்டிருப்போம். இதனை புரிந்து கொண்டவர்கள் சுலபமாக சூழ்நிலையை கையாண்டு விடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு இந்த சூழ்நிலை புரியாது. தன் சக நண்பன் பெற்ற அடையும் பொழுது உங்கள் குழந்தை தோல்வியை சந்திக்கிறான் என்றால் அதனை அவர்களால் தாங்க முடியாது. எனவே இந்த சூழலை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நம்மளுக்கு இதில் அனுபவம் அதிகம். மேலும் பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் role model.
வெற்றியை மட்டுமே கற்றுக் கொடுக்காதீர்கள்:
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுக்கிறீர்களோ அதை தான் அவர்கள் வாழ்வில் பின்பற்றுவார்கள். நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்று சொல்வது சரிதான். ஆனால் அந்த வெற்றியை சந்திக்க அவர்கள் எவ்வளவு தோல்வியை சமாளிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுங்கள். மேலும் உங்களால் முடியாததை அவர்களை வைத்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே விட்டு விடுங்கள். பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல், அதனாலேயே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களின் குறிக்கோள் எந்த அளவிற்கு திடமாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்களின் மனதிடம் மிகவும் முக்கியம் என்பதை புரிய வையுங்கள். குழந்தைகள் முன் உங்கள் வெற்றியை நீங்கள் சொல்லும் பொழுது அவற்றை அடைவதற்கு நீங்கள் என்னென்ன சிரமத்தை அனுபவித்தீர்கள் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
தோல்வி இல்லாமல் வெற்றி ஏது?
பள்ளிக்கூடத்தில் எந்த ஒரு தேர்விலோ, விளையாட்டில் அல்லது வேறு துறைகளிலும் அவர்கள் தோல்வியை சந்தித்து அதனை உங்களிடம் வந்து கூறினால், நீங்கள் கோபப்படாமல், அவர்களை எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என்பதை யோசிங்கள். பின் எதனால் அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து, அதற்கான விடையை அவர்களுக்கு உங்கள் அனுபவத்தின் மூலமாக தெரிவியுங்கள். சில குழந்தைகள் தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மனதில் அதைப் பற்றிய யோசனை இருந்து கொண்டே இருக்கும். இதனை அவர்களிடம் பேசினால் மட்டுமே நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் வருங்காலத்திற்காக தான் நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது சரிதான், ஆனால் அவர்களின் சின்ன சின்ன மன தேவைகளுக்கு சரியான பரிந்துரையை மற்றும் ஆலோசனையை நீங்கள் வழங்கவில்லை என்றால், உங்கள் ஓட்டத்திற்கு அர்த்தமே இல்லை. தோல்வியின் முக்கியத்துவத்தை முதலில் கற்றுக் கொடுங்கள்.
Neutral ஆக எடுக்க பழக்கங்கள்!
தோல்வியை கண்டால் துவண்டும் வெற்றியைக் கண்டால் ஆரவாரம் கொண்டும் இருப்பது தான் மனித இயல்பு. நம் குழந்தைகளும் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே தோல்வியையும் வெற்றியையும் சமமாக பார்க்க அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தோல்வி வந்தால் அதை கண்டு பயந்து விடாமல், வெற்றி வந்தால் அதைக் கண்டு அகம்பாவப்படாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுங்கள். என் வாழ்க்கையில் நான் தோல்வியை கண்டு மிகவும் வருந்தியுள்ளேன். ஒரு சின்ன விஷயம் நான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும் அதனை எண்ணி மிகவும் வருத்தப்படுவேன். அதேபோல் நான் நினைத்தது நடந்து விட்டது இல்லை எனக்கு வெற்றி கிடைத்து விட்டது என்றால் வானவில் சந்தோஷத்தை அனுபவிப்பேன். ஆனால் திருமணத்திற்கு பின், என் கணவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது, "எந்த உணர்ச்சியையும் சமமாக சந்தித்து பார். அதுதான் அனைத்தையும் சரியாக மற்றும் நடுநிலையாக கொண்டு செல்லும்" என்றார். இந்தச் சின்ன விஷயம் புரிய எனக்கு 26 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு அதை சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் என்றால், வருங்காலத்தில் அவர்கள் எதையும் தைரியமாக சந்திக்க கூடியவர்களாக மாறிவிடுவார்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/no-more-loneliness-1378785
https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601
https://tamil.shethepeople.tv/society/healthy-relationship-green-flags-1381170
https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731