தம்பதியினருக்கு இடையில் உள்ள உறவில் இருக்கும் நேர்மறை செயல்கள் தான் green flags ஆக கருதப்படுகிறது. மேலும் ஒரு உறவில் நேர்மறை செயல்கள் இருப்பதின் வெளிப்பாடாக அவர்களின் பழக்க வழக்கங்கள் உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகள் நல்ல விதமாக இருக்கும். இருவருக்கும் இடையே உள்ள உறவு வலுவாகவும் நீண்ட காலமும் நீடிப்பதற்கு green flags மிகவும் முக்கியமாகும். ஒரு நல்ல உறவை மேம்படுத்த என்னென்ன செயல்களை செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Communication தான் எல்லாமே:
கணவன் மனைவி உறவை பொருத்தவரை communication இல்லை என்றால் பல பிரச்சினைகள் வரும். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை என்பது தெளிவாகவும் இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் சுலபமாக இருக்கும். Communication என்பது பேசுவது மட்டுமல்ல, அதைத் தாண்டி ஒருவரின் செயலால் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் மற்றும் அந்த உணர்ச்சியை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள், மேலும் உங்கள் partner இன் செயலால் நீங்கள் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்ன மற்றும் எந்த செயல் உங்களை புண்படுத்துகிறது என்பதை கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.
Emotional and mental balance:
சில சமயங்களில், கணவன் மனைவி இரண்டு பெயரில் யாரோ ஒருவர் மிகவும் sensitive ஆக இருப்பார். அந்த நபர் சின்னதாக ஒரு விஷயம் அவர்கள் காய ப்படுத்தக்கூடிய செயலாக இருந்தால் கூட வருத்தப்படுவார்கள். எப்படி இருப்பவர்களை மிகவும் மென்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அவர்களின் உணர்ச்சிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். கோவத்தால் அவர்களை காயப்படுத்தாமல் எதனால் அவர்கள் கோபப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுங்கள். சரியான புரிதல் இல்லாதது கூட மனரீதியான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
Self-worth ஐ அடையாளப்படுத்துங்கள்:
உங்கள் partner இன் தனித்துவத்தை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருங்கள். மற்றவர்கள் முன் அவர்களை ஏளனப்படுத்தவோ உதாசீனப்படுத்தவும் கூடாது. சில சமயங்களில் அவர்களே அவர்களின் தனித்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் சிறந்த துணையாக இருந்து அவர்களின் தனித்துவத்தை கவனித்து அதனை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். யாரும் யாருக்காகவும் அவர்களின் சுயப் பழக்கத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
Sympathy யை விட empathy முக்கியம்:
மற்றவர்களின் வேதனையை பார்த்து கவலைப்படுவது sympathy. ஆனால் மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள் அவர்களை என்ன செய்து அந்த கவலையை போக்கலாம் என்று அவரிடத்தில் இருந்து யோசிப்பது தான் empathy. இதை கணவன் மனைவி உறவிற்குள் எப்படி கொண்டு வரலாம் என்றால், பெரும்பாலான கணவர்கள் வேலை நிமித்தமாக போதுமான நேரத்தை மனைவிக்கு ஒதுக்குவது இல்லை. இதனால் உங்கள் மனைவி மன வேதனை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனைப் புரிந்து கொண்டு வாரத்தில் இரண்டு நாட்களாவது அவர்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள்.
மரியாதை மற்றும் சமத்துவம்:
எந்த ஒரு உறவிலும் ஒருவரின் பால் ஒருவர் மரியாதையாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். மற்றவர்களின் சுயமரியாதைக்கு நாம் மரியாதை கொடுத்தால் தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வார்கள். மேலும் இந்த வேலைகளை மனைவி தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அனைத்து வேலைகளிலும் உங்கள் பங்கை செலுத்துங்கள். இதேபோல் சம்பாதிப்பது கணவனின் வேலை மட்டும் என்று நினைக்காமல் உங்களால் முடிந்ததை கணவருக்கு செய்யுங்கள். திருமண வாழ்க்கை என்பது இருவரும் சேர்ந்து வாழக்கூடிய வாழ்க்கையாகும். அதில் இருவருக்கும் சமமான பங்கு அனைத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-be-confident-in-an-interview-1380139
https://tamil.shethepeople.tv/society/what-is-the-right-gadget-age-for-children-1380026
https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039
https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731